கிளுகிளுப்பு காதல் காட்சிகளுடன் அதிபயங்கர சாகசங்கள் நிறைந்த தி அமேசிங் ஸ்பைடர் மேன்-2 ஹாலிவுட் திரைப்படம் வெள்ளித்திரையில் புதிய ஒலி-ஒளி (டால்பி அட்மாஸ், ஆரோ 3டி ) தொழில்நுட்பங்களுடன் பிரமாண்டத்தின் பிரதிபலிப்பு
படத்தின் கதையாக.......
ஸ்பைடர் மேன் சீரிஸ் வரிசையில் ஐந்தாவது படமான தி அமேசிங் ஸ்பைடர் மேன்-2-பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரையும் கவரும் அதே சூப்பர் ஹீரோ கதைதான்....
நியுயார்க் நகர மக்களின் ஆபத்துபாந்தகனாக இருக்கும் ஸ்பைடர் மேன் பீட்டர் (ஆண்ட்ரூ கார்பீல்டு) மீது பொறாமை கொண்ட மேக்ஸ் தில்லான் (ஜேமி பாக்ஸ்) என்ற சக்திவாய்ந்த மின்சார மனிதனும் விசித்திர நோயால் பாதிக்கப்பட்டு பயங்கர தோற்றத்தில் மாறிய Oscorp நிறுவன அதிபர் மகன் ஹாரி ஆஸ்போர்ன் (டேன் டிஹான்) என்பவரும் இணைந்து ஸ்பைடர் மேன் பீட்டரை கொன்று நியுயார்க் மக்களின் மனதில் இடம்பிடிக்க நினைக்கின்றார்கள்
அவர்களின் முயற்சியை அவ்வப்போது பள்ளிமாணவி க்வென் ஸ்டேசி (எம்மா ஸ்டோன்) யுடன் காதல் செய்து குதுகளிக்கும் ஸ்பைடர் மேன் பீட்டர் முறியடித்தாரா...? என்பதை பயங்கர சாகசங்கள் நிறைந்த காட்சிகளாய் படம் காட்டி நம்மையும் ஸ்பைடர் மேனுடன் பயணிக்க வைக்கிறார் இயக்குனர் மார்க் வெப்
படத்தின் சிறப்பான காட்சிகளாக............
-ஆரம்பத்தில் வரும் பறக்கும் விமானத்தில் ஸ்பைடர் மேன் பீட்டரின் தந்தை ரிச்சர்டை கொல்லவரும் கடத்தல்காரன் சண்டைகாட்சியும் விமான விபத்துக்குள்ளாகும் பயங்கரமும்.....
-பயந்த சுபாவம் கொண்ட மேக்ஸ் தில்லான் மின்சார விலாங்கு மீன்கள் நிறைந்த தண்ணீர் தொட்டியில் விழுந்து எலக்ட்ரோ மின்சார மனிதனாக மாறும் காட்சியும்தன் அதீத சக்தியை உணர்ந்து வில்லனாக மாறுமிடமும்
-கிளைமாக்ஸ் காட்சியில் தன் காதலியைக் காப்பாற்ற பீட்டர் வில்லனுடன் மணிக்கூண்டில் போடும் சண்டைக்காட்சி....
ஹாலிவுட்டில் எடுத்த தமிழ் படம்.........? இதுவரை எந்த ஹாலிவுட் படங்களும் செய்யாத சாதனையாக இந்திய சினிமா உலகை முன்னிலைப்படுத்தி ஒருநாளுக்கு முன்பாகவே இந்தியாவில் வெளிவந்துள்ள ஹாலிவுட் திரைப்படமான தி அமேசிங் ஸ்பைடர் மேன்-2 எதிர்பார்த்த அளவுக்கு அதிகமாகவே வசூலில் சாதனைப் படைத்துள்ளது அதேநேரம் இந்தியப் படங்களுக்குரிய அப்பா-அம்மா-காதல் சென்டிமென்ட் கலவையாகவும் உள்ளது....
ம்...ஸ்பைடர் மேனும் எம்மா ஸ்டோனும் அப்படியே யம்மா..யம்மா...அம்மாடி....ஆத்தாடி..உன்ன எனக்கு தர்றியா...?-னு டி.ஆர்.ஸ்டைலில் ஒரு குத்துப்பாட்டு போட்டிருந்தால் பக்கா தமிழ் படமாகியிருக்கும்
இது தேர்தல் நேரம் என்பதால் எனக்கு என்னவோ படம் பார்க்கும் போது..........
ஸ்பைடர் மேன் நரேந்திர மோடி போலவும்
மேக்ஸ்....அரவிந்த் கெஜ்ரிவால் போலவும்
Oscorp ஹாரி ஆஸ்போர்ன்....ராகுல் போலவும்
இவர்கள் அனைவரும் இந்தியாவை காப்பாற்ற போராடும் சாகஸ வீரர்களாக தெரிந்தார்கள்... பிரமையோ?

வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |