யாமிருக்க பயமே-இது சினிமாஅல்ல வெள்ளித்திரையில் கண்கட்டி வித்தையாய் நம்மை சிந்திக்க விடாமல் சிரிக்க வைக்கும் சினிமா மேஜிக்
படத்தின் கதையாக....அடர்ந்த மலையில் உள்ள ஒரு காட்டு பங்களாவும் அதனுள் புதைந்திருக்கும் நம்பகத்தன்மை இல்லாத சிரிப்பூட்டும் அமானுஷ்ய சக்தியும் அதன் மர்மமும் பற்றியது.
ஒரு கந்துவட்டி தாதா(மகாநதி சங்கர்) வின் மகனிடம் ரூ.40 லட்சத்தை ஏமாற்றிய கிரண் (கிருஷ்ணா) அவனுடைய காதலி ஸ்மிதா (ரூபா மஞ்சரி)வுடன் தப்பித்து தன் தந்தை உயில் எழுதி வைத்துள்ள ஒரு காட்டுப் பங்களாவை...
அங்கே உள்ள சரத் (சூது கவ்வும் கருணாகரன்) வும் அவனது தங்கை சரண்யா (ஓவியா) வுடன் சேர்ந்து கெஸ்ட் ஹவுஸாக மாற்றி தொழில் தொடங்குகிறார்கள்
அங்கே தங்குவதற்கு வரும் விருந்தினர்கள் பலர் வரிசையாக மர்மமான முறையில் சாக...
அந்த பங்களாவின் மர்மத்தை கிரண் கண்டுபிடித்தானா...? அவனைத் தேடி வரும் கந்துவட்டி தாதாவிடம் அகப்பட்டானா...? என்பதை திகில் நிறைந்த நகைச்சுவை காட்சிகளுடன் அரங்கம் அதிர பார்வையாளர்களை சிரிக்க வைத்து படம் காட்டுகிறார் புதுமுக இயக்குனர் டி கே.....
படத்தின் சிறப்பான காட்சிகளாக..........
-பவர் ஸ்டார் என்ற பெயரில் போலி ஆண்மை வீரிய சக்தி மாத்திரை தொலைகாட்சி விளம்பர ஷோ காட்சிகள்
-விருந்தினர் மாளிகைக்கு வரும் ஊர் நாட்டாமையும் அவரது மனைவியின் கோவணத்தில் கரண்ட் ஷாக் மரணம்
-தங்க வந்த பள்ளி குழந்தைகளின் சுட்டித்தனம்
-விருந்தினராக வரும் ஜப்பான்காரியும் அவளது தமிழ் நண்பர்களின் மர்ம மரணம்
-பி.டி.மாஸ்டரின்பாத்ரூமில் யோகா நிலையில் மரணம்
- பித்தலாட்ட பிரதர் பாபா (மயில்சாமி) இளங் குமரிகளுடன் போடும் ஆட்டம் பாட்டம்
-பண்ணி மூஞ்சி வாயன் கதாப்பாத்திரமும் காமெடியும்
-பரட்டை கிழவன் பிளாஷ் பேக் வாலிபன் தமிழ் (ஆதவ் கண்ணதாசன்) பேயுடன் பாடும் நிலா பாட்டு.......வெள்ளைப் பந்து
இப்படி படம் முழுக்க சிரிக்க வைக்கும் நோக்குடன் நிறைய காட்சிகள் வருகின்றன ஒவ்வொன்றும் ஒரு டிவிஸ்ட்வுடன் உள்ளது மரணம்...கொலை வேடிக்கையாக காட்டப்படுகிறது
நடிகர்கள் கிருஷ்ணா,சூது கவ்வும் கருணாகரன் செம கலக்கல் நடிகைகள் ரூபா மஞ்சரி,ஓவியா நடிப்பும் கவர்சியும் காட்டி கலகலப்பூட்ட...படத்தில் இவர்கள் நால்வரும் மட்டுமே என்றாலும் இயக்குனர் சாமார்த்தியத்தால்இவர்கள் நடிப்பில் மிளிர்கிறார்கள்
பிரசாத் SN இசையில் என்னமோ ஏதோ....பாடல் இனிமை
பின்னணி இசையும் கதையுடன் இணைந்து நம்மை மிரட்டுகிறது....
ராம்மியின் ஒளிப்பதிவில் காட்சிகள் பிரமிப்பூட்டுகின்றன......வெள்ளைப் பந்து பாடல் கண்ணைக் கவர்கின்றது. பேய் காட்சிகள் பயம் காட்டுகின்றன
யாமிருக்க பயமே.....வெள்ளித்திரையில் கண்கட்டி வித்தையாய் நம்மை சிந்திக்க விடாமல் சிரிக்க வைக்கும் சினிமா மேஜிக்
நீங்கள் படம் பார்த்தவராக இருந்தால் இங்கே மதிப்பீடு செய்யவும்...
உங்கள் பார்வையில்.............
யாமிருக்க பயமே.....படம் எப்படியிருக்கு?
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |