google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: விஜய்-அஜித் படங்களின் கதை உண்மையில் கசிந்ததா?

Sunday, June 08, 2014

விஜய்-அஜித் படங்களின் கதை உண்மையில் கசிந்ததா?


முன்பு விஜய் நடிக்கும் கத்தி படத்தின் கதை கசிந்துவிட்டது என்றும் இப்போது அஜித் நடிக்கும் THALA-55 படத்தின் கதை கசிந்து விட்டதாகவும் கதை கட்டுகிறார்கள் உண்மையில்..........

கத்தி படத்தின் கசிந்த கதை..........
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆந்திரா அழகி சமந்தாவுடன் நடிக்கும் கத்தி படத்தின் கசிந்த கதையாக.......

சுமார்  90  பிணையக் கைதிகளை தீவிரவாதிகளிடமிருந்து விஜய் மீட்பதுதான் என்றும் 

கத்தி போல இரண்டு கூர்மையான நல்லவன்  அரவிந்த் என்ற துப்பறியும் நிபுணர் வேடத்தில் இருவராகவும்  ஆண்ட்ரு என்ற கெட்டவன் வேடத்தில்  இன்னொருவராகவும் விஜய் டபுள் ரோலில் நடிப்பதாகச் சொல்லப்படுகிறது 

விஜயின் கத்தி கதையும் ஜீவா நடிக்கும் யான்  படத்தின் கதையும் இதற்கு முன்பு வந்த மரியான் கதையும் கிட்டத்தட்ட ஓன்று போலவே உள்ளது காட்சிகள் மாறலாம் THALA-55 படத்தின் கசிந்த கதையாக...........
படத்தில் நடிகையாக வரும் த்திரிஷா ECR ரோட்டில் மர்ம நபர்களால் கொலை செய்யப்படுவதாகவும் துப்பறியும் போலிஸ் அதிகாரியாக வரும் அஜித் அனுஷ்காவுடன் சேர்ந்து கொலையாளிகளை கண்டுபிடிப்பதாகவும் THALA-55 படத்தின் கதையாக சொல்லப்படுகிறது 
இன்னும்  இருவேறு மாறுபட்ட தோற்றத்தில் அஜித் நடிப்பதாகவும் வதந்தீ.........


அப்படிப்பார்த்தால் இதுவும் கவுதம் மேனனின் வேட்டையாடு விளையாடு படத்தையும் காக்க காக்க படத்தையும் நமக்கு நினைவு படுத்துகிறது ஆனாலும் வித்தியாசமான காட்சிகள் அஜித்தின் அதிரடி சண்டைக்காட்சிகள் படத்திற்கு மெருகூட்டும் 

அஜித்-விஜய் இன்றைய கோலிவுட் திரையுலகில் நடித்தாலும் நடிக்காவிட்டாலும் சும்மா திரையில் தோன்றினாலே  விசிலடிக்க கூட்டம் இருக்கிறது


இப்படித்தான்..........கதை கசிஞ்சிட்டு என்பாயிங்க...அப்புறம் படத்துக்கு டைட்டில் வைக்க பிகு பண்ணுவாயிங்க...இந்தா வருது அந்தா வருதுனு பஸ்ட்-லுக்,ட்ரைலர்.... இழுத்தடிச்சு அப்புறம் ஒரே  நாளில் பத்து லட்சம் ஹிட் என்பாயிங்க....படம் வருவதற்குள் நம்மள ஒரு வகை பண்ணிடுவாயிங்க..... 

விஜய்-அஜித் படங்களின் கதை உண்மையில் கசிந்ததா? என்றால் இதெல்லாம் சினிமா பப்ளிசிட்டி....இத அறிந்தவனுக்கு வாயில பண்ணு...அறியாதவனுக்கு வாயில மண்ணு.... ஊடககாரங்களுக்கு எதையாவது எழுதனும்...சினிமாகாரங்களுக்கு அவியிங்க படத்தப் பற்றி இப்படி எதையாவது பேசணும்

ஹாலிவுட்லகூட இந்த கூத்து இல்லப்பா... 
இந்த கோடம்பாக்கத்துக்காரங்க கூத்து தாங்கமுடியலப்பா....
அட...போங்கப்பா நீங்களும் உங்க சினிமாவும் 

 இதிலவேற ட்விட்டர் முகநூல் வலைதளங்களில் இவியிங்க ரசிகர்கள் போடும் கூத்து ............காமெடிக் கூத்து  

அலெர்ட் ஆறுமுகம்@vas0012003 
கத்தி படத்துல வில்லனாக நடிக்குறார் விஜய் - செய்தி#அவர் படத்துக்கு மட்டுமா வில்லன், படம் பார்க்க வாரவங்களுக்கும்தான்

||||ஷ்ஷார்ப்ப்ப்||||@smartfaa 
அவ்வ்வ் கத்தில விஜய்ணா டெர்ரரிஸ்ட்டாம் படம் ரிலீஸ் பண்ணிடலாம் சொன்னா நேரத்துக்கு #விளங்கிடும் வாண்டடா மாட்றான்யா

Tamil Kudimagan@Tamiltwits 
கசாப்பு கடை பாயாக "கத்தி" படத்தில் விஜய்னா படக்குழு பெருமிதம் 
கனியன்@Kaniyen 
விஜய் பதவி ஏற்பு விழாவிற்கு போயிருந்தார்னா, அவர் நடிக்கும் கத்தியை அப்படியே பழைய பேரீச்சம்பழத்துக்கு போட்டுவிடுவது நல்லது!

MrBlack Fan Of Vijay@MrBlackVijayFan 
கத்தி திரைப்படம் எந்த தடயும் இல்லாமல் வெளிவர வேண்டி கிருஷ்ணாதஸ் கேரள விஜய் ரசிகனின் அங்கப்பிரதட்சணம் 

Arun Johnson @johnson_arun 
தல படத்தின் டைட்டில் என்ன? தலையை பிய்த்துக்கொள்ளும் அஜீத் ரசிகர்கள்!! 

பிரம்மன்@altappu 
வேட்டையாடு விளையாடு பார்ட் 2 தான் தல#55. ப்ரகாஷ்ராஜ் கால்ஷீட் கிடைக்காததால அந்த ரோலை அஜீத் பண்றாப்டி


கானா பிரபா @kanapraba 
மிகவும் கேவலமான, பரபரப்பு விரும்பி இன்றைய இணைய செய்தி ஊடகங்களுக்கு இது சிறு உதாரணம்

Ranjani@RanjiScribbles 
'தல 55' படத்தில் அஜீத் பெண்களின் டார்லிங்'காக இருப்பார்:கௌதம் மேனன்# நீங்க சொன்னாலும் சொல்லாட்டியும் அஜீத் எங்க டார்லிங் தான்.அழகுக்கே அழகா?

உளவாளி @withkaran 
ங்கோத்தா கேட்ட மூடுடா இல்ல காக்க காக்க சூர்யா மாதிரி அஜித்துக்கு ஒபெனிங்க் வச்சாலே தல #55 ஆயிரம் நாள் ஓடுமே..
sarjun@sarjunkkl 
அஜித்55 போட்டோ செம அதுலும் அந்த 8 பேக்குல தல நிக்கிற ஸ்டில் செம


 இப்ப வருகிற தமிழ் படங்களில் எங்கயா கதை இருக்கு? அதிலும் விஜய்-அஜித் இவியிங்க படங்களில் கதை இருந்தால்தானே கசிவதற்கு.......? ஆங்...விஜய்-அஜித் படங்களின் கதை உண்மையில் கசிந்ததா?
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1