google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: உன் சமையல் அறையில்-சினிமா விமர்சனம்

Monday, June 09, 2014

உன் சமையல் அறையில்-சினிமா விமர்சனம்

பிரகாஷ் ராஜ் இயக்கி நடித்த உப்பு சப்பு இல்லாத உப்புமா. இலையில் பிரியாணி விருந்தை எதிர்பார்த்து இருந்தவர்களுக்கு பிரகாஷ் ராஜ் படைத்த புளியோதரை.....உன் சமையல் அறையில்.

திருமணமாகாத 45-வயது தொல்பொருள் ஆராய்ச்சியாளர் காளிதாசன் (பிரகாஷ் ராஜ்) ராங் காலில் தொடர்புகொண்ட  திருமணமாகாத 35 வயது சினிமா டப்பிங் ஆர்ட்டிஸ்ட் கௌரி (சினேகா) இருவருக்கும் காதல் பற்றிக்கொள்ள....

போனிலேயே தங்கள் காதலை வளர்த்துக்கொண்ட இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்து ஆனாலும் நேரில் ஒருவரோருவரை சந்திக்க சங்கடப்பட்டுக்கொண்டு..

காளிதாசன் தனது அக்கா மகன் நவீன் (தேஜாஸ்) னையும் கௌரி தனது தங்கை மேக்னா (சம்யுக்தா) வையும் தங்கள் சார்பாக பெண்-மாப்பிள்ளை பார்க்கும் படலத்துக்கு காப்பி ஷாப்பில் சந்திக்க அனுப்பிவைக்க......

அங்கே......

நவீனும் மேக்னாவும் கண்டதும் காதலாக நவீன் காளிதாசானாகவும் மேக்னாவோ கௌரியாகவும் ஆள்மாறாட்டம் செய்து.......அய்யோ பாவம் அவர்களுக்குள் காதல்தீ பற்றிக்கொள்கிறது இருவரும் உண்மையான காளிதாசன்-கௌரி காதலை அறுத்து விட்டுவிடுகிறார்கள் 

கிழட்டு காதல்தீயில் கருகிய காளிதாசனும் கௌரியும் மீண்டும்   போனில் தொடர்புகொண்டு இருவரும் நேரில் சந்திக்க திட்டமிடுவதை அறிந்த இளம் காதலர்கள் நவீனும் மேக்னாவும் தப்பிக்க நினைக்கிறார்கள் ஆனால் காளிதாசனிடம் மாட்டிக்கொள்கிறார்கள் 

உண்மை  தெரிந்த காளிதாசனும் கௌரியும் மீண்டும் நேரில் சந்தித்தார்களா? 
அவர்களின்  தெய்வீக காதல் என்ன ஆனது...? என்பதை தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் திரையரங்கு செல்லுங்கள்

காதல்கோட்டை படத்தில் ஒருவரை ஒருவர் சந்திக்காமல் போனிலேயே காதல் செய்த அஜித்-தேவயானி காதல் படத்தை  இப்போதைய ஐ-போன் காலக்கட்டத்தில் எடுத்தால் எப்படியிருக்கும்....? அப்படியிருக்கிறது உன் சமையல் அறையில்......

வில்லன் நடிகராக  பின்னி பிடலேடுத்த பிரகாஷ் ராஜ் கிடைத்த கதையை வைத்துக்கொண்டு ஒரு இயக்குனராக அறுசுவை விருந்து படைக்கிறார் சாப்பாடு சம்பந்தப்பட்ட காட்சிகள் நிறைய வைத்து திரையரங்கை சரவனாபவன் ஓட்டல் போல் கம கம என்று மணக்க வைக்கிறார்.

படத்தின் சிறப்பான காட்சிகளாக.......
-படத்தின் ஆரம்பத்தில் வரும் இந்த பொறப்புதான்....பாடலில் விதவிதமான ஊர் சமையல் தின்பண்டங்கள் காட்டி பார்வையாளர் வாயில் எச்சில்   வடியவிடும் காட்சிகள்......
-கௌரி குட்டி தோசைக்கு ஆர்டர் கொடுப்பதாக காளிதாசனிடம் ராங்-காலில் பேசி சண்டையிடும் காட்சி......
-கம்பிக்குள் காதல் படத்திற்கு கௌரி டப்பிங் கொடுக்கும் காதல் வசனம் 
-காளிதாசன் பெண் பார்க்க போகும் இடத்தில் வடையின் ருசியில் மயங்கி அந்த வீட்டு சமையல்காரன் கிருஷ்ணா (தம்பி ராமையா) வை வீட்டுக்கு கூட்டிவருவது 
-பிரெஞ்ச நாவலில் வரும் கேக் ரிசிபியை காளிதாசனும் கௌரியும் அவரவர் வீடுகளில் செய்யும் முறை.......அடடா....அப்படியே திரையில் போய் நாமும் கேக் அள்ளிக்கொள்ளலாமா? என்று நினைக்க வைக்கிறது 
-கடைசியில் மியூசியத்தில் வரும் கலைக் கூத்தாடிகள் ஆடல் பாடலுடன் காளிதாசன்-கௌரி சந்திக்கும் ரம்மியமான காட்சி...

இப்படி நிறைய காட்சிகள் இருந்தாலும் காளிதாசன் தொல்பொருள் ஆய்வு செல்லும் காட்டில் உள்ள ஆதிவாசி கிழவர் ஜக்கையாவை கடத்தி மனிதாபிமானமாக தன் வீட்டில் அடைக்கலம் கொடுக்கும் சப்-கதை ஏதோ பயங்கரமாக த்திரிலிங் பில்டப் கொடுத்து கடைசியில் ஒன்னுமில்லாமல் போனது பார்வையாளர்களை ஏமாற்றும் செயலானது இவைகள் இல்லாமல் மூன்று மணிநேர படம் என்பதை குறைத்திருந்தால் படம் விருவிருப்பாக இருந்திருக்கும்

இன்னும் கொஞ்சமும் லாஜிக் இல்லாமல் நவீன்-மேக்னா தங்கள் காதலுக்காக  மாமன் காளிதாசன் - அக்கா கௌரி காதல் வாழ்க்கையை சீரழிப்பார்களா...? என்று நம்ம தலையை சொரிய வைக்கிறது.

நடிகராக  பிரகாஷ் ராஜ் பிரமாதப்படுத்துகிறார் கொஞ்சம் வயதானவருக்கும் வரும் காதலை நளினமாக முகத்தில் பிரதிபலிக்கிறார் சினேகாவின் நடிப்பும் அழகும் அருமை மற்றபடி ஊர்வசி,ஐஸ்வர்யா,தம்பி ராமையா,இளங்கோ... அவர்கள் கதாப்பாத்திரங்களுக்கு ஏற்ப நடித்துள்ளனர்

படத்தின்  உயிரோட்டமாக உள்ளது இளையராஜாவின் பின்னணி இசையும் ரம்மியமான பாடல்களும்தான் இந்தப் பொறப்புதான்.... பாடல் அருஞ்சுவையும் ஒருசுவையாய் என்றால்..........காற்று வெளியில்...தேன்சுவை

இலையில் நிறைய தேவையில்லாத காட்சிகள்...சம்பவங்கள்...... சைடு டிஸ் பதார்த்தங்களாக மெயின் சாப்பாட்டோடு படைக்கப்பட்டு  ஜீரணிக்க முடியாத விருந்தாகிப் போனது .........உன் சமையல் அறையில் 


அதேநேரம் ....காளிதாசன்-கௌரி மோதலும் காதலும்  ஊடலும் வெற்றியும்  என்று மட்டுமே பிரகாஷ் ராஜ் படம் காட்டியிருந்தால் இந்தப் படம் எங்கேயோ போயிருக்கும்?

ஆக மொத்தத்தில்.......

பிரகாஷ் ராஜ் இயக்கி நடித்த உப்பு சப்பு இல்லாத உப்புமா. இலையில் பிரியாணி விருந்தை எதிர்பார்த்து இருந்தவர்களுக்கு பிரகாஷ் ராஜ் படைத்த புளியோதரை.....உன் சமையல் அறையில்.


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1