google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: மஞ்சப்பை-சினிமா விமர்சனம்

Friday, June 06, 2014

மஞ்சப்பை-சினிமா விமர்சனம்

பத்மினியின் பூவே பூச்சூடவா போன்று நெஞ்சை வருடும் திரைக்கதை, இயக்கம்,  ரம்மியமான இசை இவைகளுடன் உணர்ச்சி,காதல், நகைச்சுவை நிரம்பி வடியும்..........இது ராஜ்கிரணின்   மஞ்சப்பை.

ஒரு  யதார்த்தமான கிராமத்து  பெரியவர்  தன் அப்பாவித்தனமான செயல்களால் நரகத்து..சாரி...நகரத்து   போலி மனிதர்களின் இதயத்தில் இடம்பிடிப்பதே கதை.

மூன்று மாதத்தில் அமெரிக்கா செல்ல இருக்கும்    தமிழ் (விமல்) குழந்தையிலையே தாய் தந்தையை இழந்த தன்னை வளர்த்த  கிராமத்து தாத்தா வெங்கடசாமி (ராஜ்கிரண்) யை  சென்னையில் தன்னுடன் ஒரு பெரிய அபார்ட்மெண்டில் தங்கவைக்க அழைத்து வருகிறான் 

கிராமத்து வெகுளித்தனமும் வீரமும் நிறைந்த வெங்கடசாமி தாத்தாவின்   அப்பாவித்தனமான வெகுளியான செயல்கள்....
 தமிழின் காதலி கார்த்திகா (லட்சுமி மேனன்) முதற்கொண்டு அந்த அபார்ட்மென்டில் உள்ள மனிதர்கள் அனைவருக்கும் அவர்மேல் வெறுப்பு வருகிறது 

அமெரிக்க தூதரகத்தில் தாத்தா செய்யும் தேசபக்தி சேட்டையால் தமிழுக்கும் அமெரிக்கா செல்லும் வாய்ப்பு பறிபோவதால் அவனும் தாத்தாவை கடிந்து கொள்ள...........

அதனால் மணம் ஒடிந்த தாத்தா  வேதனையில் எங்கோ காணாமல்  போய்விடுகிறார் ஆனால்.. தாத்தாவுடைய உண்மையான அன்பையும் அறிவையும் அறிந்து  தங்கள் தவறை உணர்ந்த தமிழும் மற்றவர்களும் தாத்தாவை தேடி அலைகிறார்கள் 

வெங்கடசாமி தாத்தா  கிடைத்தாரா..? என்பதை திரையில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் 

படத்தின்  சிறப்பான காட்சிகளாய்..........
-தாத்தா பீச்சில் வெளிநாட்டினரிடம் தகராறு செய்யும் போக்கிரிகளை அடித்து விரட்டுவது 
-தாத்தா அனாதை தம்பதியினருக்கு அனாதை குழந்தைகளை வைத்து வளைகாப்பு நடத்துவது 
-தாத்தா தன் பேரனை குஞ்சு நைனா என்று கொஞ்சுவது 
-விமலும் லட்சுமி மேனனும் ட்ராபிக் போலீசை கலாய்ப்பது
-தாத்தா அமெரிக்க தூதரகத்தில் தேசப்பற்றுடன் அடிக்கும் காமெடி லூட்டிகள் 
-படம் துவக்கத்தில் வரும் தாத்தா-பேரன் பாடல் காட்சி 
-பெரிசு என்று சொன்ன ஆட்டோகாரனை தாத்தா அடிப்பது 
-போலிஸ் அதிகாரியை மகளை வளர்க்க தெரியாதவன் என்று தைரியமாக அடிப்பது 
-விமல் லட்சுமி மேனனை லவ்வ நடத்தும்  மருத்துவமனை கிழவிகள் காட்சி.....
-பிரட் டோஸ்டர்   என்று தாத்தா லேப்டாப்பை அடுப்பில் வைத்து பொசுக்குவது 
-எலி மருந்தை எள்ளுமிட்டாய் என்று தின்ற  பாப்பாவுக்கு தாத்தா உப்பு-புளிக்கரைசல் கொடுப்பது 
இப்படி நிறைய காட்சிகள் சில சிரிப்பூட்டும் சில உணர்சிமிகுவாக  பார்வையாளர்களை சிந்திக்க தூண்டுகின்றனநகரத்து மனிதர்களை கேளிசெய்கிறது

படத்தின் முன்பாதி.......கிராமத்திலிருந்து நகரத்துக்கு வந்த ராஜ்கிரண் செய்யும் வெகுளித்தனமான காட்சிகள் என்று கலகலப்பாக கொண்டு செல்கிறார் அறிமுக இயக்குனர் என்.ராகவன் லாஜிக் மறந்து பார்வையாளர்களை சிரிக்க வைக்கிறார் 

ஆனால் இடையிடையே சில உணர்ச்சிமயமான காட்சிகளை தவறாக வெளிப்படுத்தி  காமெடி டெம்போவை நசுக்கிவிடுகிறார் கவர்ச்சி என்ற போர்வையில் விமல்-லட்சிமி மேனன் உதட்டு முத்தம் காட்சி அருவருப்பாக உள்ளது.....

ஆனால் ஓர் அனுபவ இயக்குனர்போல் முன்பகுதியில்வரும் சில காட்சிகளை கடைசியில் கனகச்சிதமாக தொடர்பு படுத்துகிறார்

ராஜ்கிரண்......படத்தின் நாயகன் போன்று வரும் இவரின்   நடிப்பு பாராட்டும்படி உள்ளது. உணர்சிப் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளமாய் திரையில் நல்ல சாதனை படைத்துள்ளார் 

விமல்...... நடிப்பும் பாடல்களில் நடனமும் பார்க்கும்படி இருக்கிறது இன்னும் நிறைய பயிற்சி வேண்டும் என்பதுபோல் உணர்ச்சிகரமான காட்சிகளில் கண்களை மட்டுமே உருட்டுகிறார்

லட்சிமி மேனன்........என்னத்தச் சொல்றது? அம்மணி கதைக்காக உதட்டு முத்தம் காட்சியில் நடிப்பேன் என்று சொல்லிவிட்டு இப்படி உதட்டை ஏலம் விடுது.........அம்மாடியோவ்......உலகநாயகர் போல் இது உலகநாயகி எதுக்கும் ஜாக்கிரத அம்மணி...   உதட்டை யாரேனும் கடித்து காயப்படுத்தப் போறாயிங்க ..ஆங் 

ரகுநாதனின் இசையில் இளையராஜாவின் கிராமத்து இசைச்சாயல் துள்ளி விளையாடுது பாடல்கள் கேட்க இனிமை SPB-யின்  இனிய குரலில் ஆகாய நிலவு....பாடல் உணர்ச்சி பொங்கும் என்றால் பாத்து பாத்து.....பாடல் செம கிக் 

மாசானியின் ஒளிப்பதிவு பாடல்காட்சிகளில் பரவசம் மூட்டுகிறது சென்னை நகரத்து அழகை சிங்காரமாக படம்பிடித்துள்ளது 

பத்மினிக்கு பெயர் சொல்ல பாட்டி பேத்தி பாசம் பற்றிய படம் பூவே பூச்சூடவா   என்றால் ராஜ்கிரணின் பெயர் சொல்லும் மஞ்சப்பை ........அதேநேரம் தலைமுறை போன்று அல்லாமல் கலகலப்பான தாத்தா பேரன் பாசம் 

என் பார்வையில்.........படம் நன்று  ராஜ்கிரண் நடிப்புக்காக ஒருமுறை பார்க்கலாம்

நண்பர்களே! நீங்கள் படம் பார்த்தவராக இருந்தால்.......அல்லது படம் பார்த்துவிட்டு ........வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி............

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1