google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: சைவம்-சினிமா விமர்சனம்

Friday, June 27, 2014

சைவம்-சினிமா விமர்சனம்


விஜய்,அஜித்,விக்ரம்....போன்ற மாஸ் ஹீரோக்களை நம்பி அங்கே இங்கே சுட்டு படம் காட்டிய இயக்குனர் ஏ.எல்.விஜய் சைவம் படம் மூலம் தனது ஒரிஜினல் கதையை நம்பி களம் இறங்கியுள்ளார்.......

மனிதர்-விலங்கு உறவு பற்றிய இதயத்தை வருடும் புதியச் செய்தியை உலகுக்கு சொல்வதில் வெற்றிபெற்றுள்ளார்  

படம்  ஆரம்பிக்கும்போது இயக்குனர் விஜய்...... இப்படம் சைவ உணவு ஆதரவாளர்களுக்கும் விலங்குகள் பலியிடுவதை எதிர்ப்பவர்களுக்கும் அர்பணிப்பு என்று செய்தி போடுவதிலையே பார்வையாளர்களை ஒரு புதிய கதைக்களத்திற்கு தயார் செய்துவிடுகிறார். 

இது அசைவப் பிரியர்களுக்கும் மூட நம்பிக்கையாளர்களுக்கும் அலர்ஜியாக தோன்றினாலும் இயக்குனர் விஜயின் தனித்துவமான கதை சொல்லும் போக்கில் சமாதானமாகிவிடுவார்கள் 


கோட்டையூர் கிராமத்தில்  வாழும்  அசைவப்  பிரியரான கதிரேசன் (நாசர்) தன் வீட்டில் வளர்க்கும் ஆடு,மாடு, கோழிகளுக்கு மனிதப் பெயர்களை வைத்து பாசமுடன் அழைப்பவர் அவருடன் வசிக்கும்  பேத்தி தமிழ்செல்வி (சாரா) ஒரு சேவலை பாப்பா என்று பெயர் வைத்து பாசமுடன் பழகுகிறாள்

பெரியவர்  கதிரேசனின்  வெளியூரில் வசிக்கும் மொத்த குடும்பமும் அவரது கிராமத்து கோயில் திருவிழாவுக்காக  ஓன்று சேர்கிறார்கள் அவர்களது அன்றாட நிகழ்வுகள், யதார்த்தமான செயல்கள், காதல்....என்று நகரும் படம்

தங்கள் கஷ்டத்துக்கு காரணம் தங்கள் குல தெய்வ கருப்பசாமி கோயிலுக்கு செய்யவேண்டிய நேர்த்திக்கடன் (சேவல் பலியிடல்) செய்யாததும் கோயிலுக்கு நேர்ந்துவிட்ட சேவலை வீட்டில் வளர்ப்பது தவறு என்றும்  தீர்மானித்து சிறுமி தமிழ்செல்வி உயிராக நினைக்கும் (பாப்பா)  சேவலை பலியிட நினைக்கிறார்கள் 

தமிழ்செல்வி  சேவலை காப்பாற்ற யாருக்கும் தெரியாமல் ஒழித்து வைத்து அவர்கள் மணம் மாறச் செய்யும் முயற்சி வெற்றி பெற்றதா...? என்பதை திரையில் காணுங்கள் 

இயக்குனர் விஜய் இந்த சைவ-அசைவ பிரச்னையை சைவம் படத்தின் மூலம் திறம்படக் கையாண்டு அசைவப் பிரியர்களையும் விரும்பும் வண்ணம் படம் காட்டியுள்ளார் ஒருபுறம் மூடநம்பிக்கையையும் நையாண்டியாக  தோலுரிக்கிறார்

சைவம்-படத்தில் நிறைய கதாப்பாத்திரங்கள் நாசர் உருவத்தாலும் உணர்வுப் பூர்வமான நடிப்பாலும் கிராமத்து தாத்தாவாகவே வாழ்ந்துள்ளார் 

தெய்வ திருமகள் படத்தை விட பல மடங்கு சாரா ஆத்மார்த்தமான நடிப்புடன் சைவம் படத்தில் மிளிர்கிறாள் சரவனனாக ஆங்கிலம் பேசி நடிக்கும் சிறுவன் ராய் பால் முதல்தரமான நடிப்பால் நம் மனதில் இடம்பிடிக்கிறான் 

செந்தில்  (பாஷா)-அபிராமி (துவரா தேசாய்) காதல் ரசிக்கும்படி உள்ளது இன்னும் கவுசல்யா,ரவி,ராஜலக்ஷ்மி, சுரேஷ்,சண்முகராஜன்.... அவரவர் கதாப்பாத்திரங்களில் சிறப்பாக நடித்துள்ளனர் 

ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை கிராமத்தை நோக்கிய ஓர் இசைப்பயணம் தென்றலென நம் இதயத்தை வருடுகிறது பாடல்களில் அழகே அழகு...பாடல் இனிமையாக உள்ளது 

நிரவ் ஷாவின் ஒளிப்பதிவில்........கிராமத்து அழகை அவரது கேமரா வன்னத்தூரிகையாக காட்சிக்கு காட்சி உயிரோட்டமாக வரைந்து காட்டியுள்ளது ஒரே வீட்டினுள் நடக்கும் கதையை அது தெரியாத வண்ணம் படம் பிடித்துள்ளார்

இதுவரை காப்பி மன்னன் என்று கேலிசெயயப்ப்ட்ட இயக்குனர் விஜய் சைவம்  படத்தின் மூலம் தனது சொந்த அனுபவக்  கதையால் தனித்துவமாக போற்றப்படுவார்

சைவ-அசைவ பிரியர்கள் யாராக இருந்தாலும் சைவம் படத்தை குடும்பத்துடன் பார்த்து கொண்டாடலாம் 

என் பார்வையில்........படம் நன்று 
படம் பார்த்தவர்களின் மதிப்பீடு..................படம் பார்த்துவிட்டு வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி.............


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1