கிரிக்கெட் விளையாட்டை கதைக்களமாக நிறைய காதலுடன் கொஞ்சம் நட்பு கலந்த உணர்வுகளின் வெளிப்பாடாக வந்துள்ள ஜீவா......கபடியை கதைக்களமாக கொண்ட வெண்ணிலா கபடிக்குழு போன்று சுசீந்திரனின் மற்றுமொரு வெற்றிப்படைப்பு
படத்தின் கதையாக................
பள்ளியில் படிக்கும் போதே கிரிக்கெட் விளையாட்டின் மீது தணியாத ஆர்வமும் திறமையும் கொண்ட ஜீவா (விஷ்ணு விஷால்) கிரிக்கெட் கிளப்பில் சேர்ந்து அதை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்காமல் தவிக்க.......
பக்கத்து வீட்டில் குடிவரும் ஜெனி (ஸ்ரீதிவ்யா) மீது கொண்ட காதலும் அவர்களது வீட்டில் தெரிந்து அவர்களது காதல் இடையில் பிரித்து வைக்கப்பட.........
ஜீவா குடிகாரனாகி சோகத்தில் தள்ளாடுகிறான்
அவனை திருத்தும் முயற்சியாக ஒரு கிரிக்கெட் கிளப்பில் சேர்க்கப்பட்ட ஜீவா தன் நண்பன் ரஞ்சித் (லட்சுமணன்)வுடன் இணைந்து விளையாட்டில் திறமையை காண்பித்த போதும் கிரிக்கெட்டில் உள்ள சாதி அரசியலால் இருவருக்கும் ரஞ்சி ட்ராபியில் விளையாடும் வாய்ப்பு பறிபோக......
நண்பன் ரஞ்சித் தற்கொலை செய்து கொள்கிறான்
இதற்கிடையில் ஜெனியுடன் தன் காதலை தொடர்ந்த ஜீவாவுக்கு அவளது அப்பா அவன் கிரிக்கெட்டை தலைமுழுகி வந்தால் மட்டுமே தன் மகள் ஜெனியை திருமணம் செய்து கொடுப்பேன் என்று செக் வைப்பது போல் சொல்ல.......
இறுதியில்......
ஜீவா சாதி அரசியல் நிலவும் கிரிக்கெட்டில் நுழைந்து ஒரு தொழில் ரீதியான வெற்றி விளையாட்டு வீரராக சாதனை படைதாரா...? அல்லது கிரிக்கெட்டை துறந்து தன் காதலி ஜெனியை கரம் பிடித்தாரா...? என்பதை பல உணர்ச்சிப் பூர்வமான காட்சிகளால் இயக்குனர் சுசீந்திரன் படம் காட்டுவதே..........
இயக்குனர் சுசீந்திரன்........
கிரிக்கெட் விளையாட்டில் பின்னணியில் உள்ள அரசியலையும் எப்படி திறமையானவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதையும் மிகவும் தைரியமாக அதே நேரம் காதல் ரசனையுடன் காண்போர் நெளியாதவண்ணம் நச்சென வெளிப்படுத்தியுள்ளார்
விஷ்ணு விஷால்......
ஆரம்ப நாட்களில் ஒரு கிரிக்கெட் பிளேயராக இருந்ததால் என்னவோ இவருக்கு இப்படத்தில் ஓர் உண்மையான கிரிக்கெட் வீரர் போல் நடிப்பது எளிதாக இருக்கிறது பார்வையாளர்களையும் ஒன்றிட வைக்கிறது
ஸ்ரீதிவ்யா............
பள்ளிமனவியாக குறும்புத்தனமும் கல்லூரி மாணவியாக பொறுப்புணர்வும் மிளிரும் இவரது நடிப்பில் குட்டப் பாவாடை கவர்ச்சி அழகூட்டுகிறது
மற்றபடி..........ஜீவாவின் நண்பன் லட்சுமணன் நடிப்பு பார்வையாளருக்கு ஒரு தாக்கத்தை உண்டாக்க........சீனியராக வரும் சூரி கலகலப்பு ஊட்டுகிறார் சார்லி,மாரிமுத்து,டி.சிவா........நடித்துள்ளனர்
மதியின் கேமரா........காட்சிகளை அழகாக கையகப்படுத்த, இமானின் இசையில் பாடல்கள் கதையோட்டத்துக்கு பின்னடைவு ஆயினும் பின்னணி இசையில் பிரமிக்க வைக்கிறார்
ஆக மொத்தத்தில்............
சுசீந்திரன் தனது நுட்பமான இயக்கத்துடன் கதை சொல்லும் திறமையாலும் விஷ்ணு தன் இயல்பான நடிப்பாலும் ஜீவா படத்தை வெண்திரையில் ஜீவிதமாக உலாவிடச் செய்கிறார்கள்
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....படத்தின் கதையாக................

வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |