கார்த்தியின் வெற்றிப்பட வரிசையில் மற்றுமொரு கிரீடமாக.. மெட்ராஸ்- சென்னை வாழ் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையில் கழிசடை ரவுடி அரசியல் செய்யும் பாதிப்புகளை நட்பு,காதலுடன் யதார்த்தமாக காட்சிப்படுத்துகிறார் அட்டைக்கத்தி இயக்குனர் பா.இரஞ்சித்
வட சென்னை பகுதியைச் சேர்ந்த இரண்டு அரசியல் கட்சியைச் சேர்ந்த ரவுடி பெருந்தலைகள் (மாரி-கண்ணன்) தங்களுக்குள் பகுதி பிரிப்பதில் மோதிக்கொண்டு வியாசர்பாடி குடிசை மாற்று வீடுகளில் குறீயீடாக ஒரு பெரிய சுவரில் படம் வரைவதில் போட்டிபோட.......
கண்ணன் கோஷ்டியினர் அவரது அப்பா படத்தை வரைந்துள்ளார்
இதை அப்பகுதியில் வாழும் ரவுடி மாரியின் ஆதரவாளன் அன்பு (கலையரசன்) தன் நண்பன் காளி(கார்த்தி) யுடன் சேர்ந்து எதிர்க்க........
ரவுடி கண்ணன் கோஷ்டியினர் அன்பை கொல்ல வரும் போது நடக்கும் சண்டையில் காளி.........
கண்ணனின் மகன் பெருமாளை போட்டுவிடுகிறான்
காளியும் அன்பும் கோர்ட்டில் சரணடைய செல்லும் போது காளியின் கண்ணெதிரிலேயே நண்பன் அன்பை சில ரவுடிகள் கொலை செய்துவிடுகிறனர்
தன் நண்பனை கொன்ற உண்மையான அரசியல் ரவுடியை கண்டுபிடித்து காளி எப்படி பழி வாங்குகிறான்? என்பதை.........
அடித்தட்டு மக்களின் சமுக அரசியல் பின்னணியுடன் காளி-கலையரசி (கேத்ரின்) காதலையும் கலந்து நிறைய யதார்த்தமான கதாப்பாத்திரங்களை உலாவ விட்டு....
மெட்ராஸ் படம் காட்டுகிறார் அட்டகத்தி புகழ் இயக்குனர் பா.இரஞ்சித்
இயக்குனர் பா.இரஞ்சித்.....கொஞ்சமும் போலித்தனம் இல்லாமல் போலி அரசியலை அப்பட்டமான நிஜமாக 1990 காலகட்ட மெட்ராஸ் பின்னணியில் வெண்திரை சித்திரமாக வரைந்துள்ளார் ஆனாலும் சினிமாத்தனமாக காதலுக்கும் நட்புக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து படத்தின் வேகத்தை தடுக்கி விழ வைத்துவிட்டார்
கார்த்தி...........ஆவேசம்,கோபம்,காதல்,நட்பு...என்று பல்வேறு உணர்வுகளை கதைக்கு ஏற்ப அழகாக பிரதிபலித்து அந்த காலகட்ட மெட்ராஸ் ஹவுஸிங் போர்டில் வாழும் இளைஞனை பேச்சிலும் உருவத்திலும் கொண்டுவந்துள்ளார்
கேத்தரின் தெரஸா.......கோலிவுட்டில் நுழைந்த டோலிவுட்டை கலக்கிய அம்மணி தன் அழகாலும் நடிப்பாலும் இங்கேயும் கலக்கலாக தன் இடத்தை தக்கவைத்துக் கொள்வார் என்று நம்பப்படுகிறது
படத்தில் நிறைய கதாப்பாத்திரங்கள் உயிரோட்டமாக உலாவருகின்றன அதில் மனிதில் நிற்பவர்கள் காளியின் நண்பனாக வரும் அன்பு, அன்புவின் மனைவி மேரி (ரித்விகா),கண்ணனின் ஆதரவாளனாக வரும் விஜி,மாரி,கண்ணன்,காளியின் அம்மா (ரமா), பைத்தியமாக வந்து கலகலப்பு ஊட்டும் பரட்டைத் தல ஜானி........
பட்டய கெளப்பும் ஜானி! உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு
சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசையும் பாடல்களும் அருமை அதிலும் காகித கப்பல்..........காதல் கிறக்கம் என்றால் கானாபாலா நடித்து பாடிய ஒப்பாரி பாடல் இறந்திடவா........உள்ளத்தை உருகவைக்கும்
ஜி.முரளியின் ஒளிப்பதிவில்..........சென்னை நகர ஹவுஸிங் போர்ட் வீடுகள்,நகரத்து சந்து பொந்துக்கள் கண்ணைக் கவர்கின்றன நள்ளிரவு துரத்தல் காட்சிகள் உயிரோட்டமாக உள்ளன
ஆக மொத்தத்தில்..........
அட்டக்கத்தி பா.இரஞ்சித் இயக்கத்தில் மெட்ராஸ் திரைப்படம்.......
கார்த்தியின் வெற்றிப்பட வரிசையில் மற்றுமொரு கிரீடம்
பா.இரஞ்சித் அண்ணேன்......
கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் மெட்ராஸ்-படத்துல இறக்கிட்டார் போல தெரிகிறது ...ஹா...ஹா
படம் பார்த்தவர்களின் மதிப்பீடு............
(தயவு செய்து படம் பார்த்தவர்கள் மட்டுமே வாக்களிக்க அன்புடன் வேண்டுகிறேன்)
மெட்ராஸ்-படம் எப்படியிருக்கு...?
வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி........
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |