google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: மேரி கோம்(இந்தி)-சினிமா விமர்சனம்

Sunday, September 07, 2014

மேரி கோம்(இந்தி)-சினிமா விமர்சனம்

சக் தே இந்தியா, லகான், இக்பால், பாக் மில்கா பாக் அப்னே, லாகூர் போன்ற விளையாட்டுத் திரைப்படங்கள் வரிசையில் பிரியங்கா சோப்ரா நடித்துள்ள  மேரி கோம்.......

உலக குத்துச் சண்டை போட்டியில் ஐந்து முறை 'சாம்பியன்ஷிப்' பட்டமும் 2012-ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கமும் வென்ற இந்திய குத்துச் சண்டை வீராங்கனை மணிப்பூர் மேரி கோம் வாழ்க்கையை பிரதிபலிக்கும் விளையாட்டுத் திரைப்படம்

marykom

ஓமங் குமார் இயக்கத்தில் வந்துள்ள மேரி கோம் திரைப்படம்....
 முன் பாதி முழுக்க மேரியின் காதல்-திருமண  வாழ்க்கையை விவரிப்பதோடு அவர் இரட்டை குழந்தை பெற்றேடுப்பதுடன்....

 குத்துச் சண்டையில் கடின பயிற்சி, போராட்டங்கள் எதுவும் காட்சிப்படுத்துதல் இன்றி  எவ்வித நிச்சயமான எதிர்காலமும் இல்லாத இடைவேளை........

இடைவேளைக்குப் பிறகு........ மேரி ஒரு தாயாக காட்சிப்படுத்தப்பட்ட காட்சிகளே அதிகம் ஆயினும்........

உண்மையான மேரி கோமின்  புகைப்படங்களுடனும்   அவரது சாதனைகள் ஜனரஞ்சக   குறிப்புகளுடனும் படம் முடிவடைகிறது 

கிளைமாக்ஸ் காட்சி ஒரு மெலோ-ட்ராமாவாக இருந்தாலும் கடைசியில் இசைக்கப்படும் தேசிய கீதத்துடன் வரும் இந்தக் காட்சிக்கு கிட்டத்தட்ட முழு திரையரங்கமும்  எழுந்து நின்று மேரி கோம் கதாப்பாத்திரத்திற்கு நேர்மறையாக மரியாதையை செலுத்துகிறது 

marykom

பிரியங்கா சோப்ரா......ஃபேஷன், 7 கூன் மாப், காமினி, பார்பி.... பட வரிசையில் இப்படத்தில் இதயப் பூர்வமாக நடித்து தன்னை மீண்டும் சிறந்த நடிகையாக உயர்த்திக்கொண்டுள்ளார்  தர்ஷன் குமார்....மேரி  கோம் கணவராகவும் சுனில் தபா........குத்துச்சண்டை பயிற்சியாளராகவும் நடிக்க சில உண்மையான குத்துச் சண்டை வீரர்களும் நடித்துள்ளனர்


                            thanks-YouTube by Viacom18 Motion Pictures

மேரி கோம்-வசூலில் சக்கைப்போடு போட்டாலும்..........

 ஒரு விளையாட்டு வீராங்கனை வாழ்க்கை திரைப்படத்திற்கு தேவையான உணர்ச்சியை உருவாக்க தவறிவிட்டதாகவும் ஒரு வரலாற்று பாடநூல் புத்தகம் படிப்பது போன்று  உள்ளதாகவும்...........

விமர்சகர்களால் எதிர்மறையாக  விமர்சிக்கப்படுகிறது   




இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1