பிரமாண்டமான காட்சியமைப்புகளும் பிரமிப்பூட்டும் சண்டைக் காட்சிகளும் மட்டுமின்றி இனிமையான திரையிசைப் பாடல்களும் யான் படத்திற்கு ஒரு பாலிவுட் படம் பார்க்கும் உணர்வைத் தருகிறது மற்றபடி.......
படத்தின் கதையாக...........
ஓர் அசாதாரன சூழ்நிலையில் மாட்டிக்கொண்ட ஒரு சாதாரன மனிதன் எப்படி அதிலிருந்து மீண்டு வருகிறான் என்பதே........
மும்பையில் போலீசாருக்கும் தீவிரவாதிகளுக்கும் நடக்கும் துப்பாக்கிச் சண்டைக்கு இடையில் மாட்டிக் கொண்ட நாயகி ஸ்ரீலா (கடல் துளசி) வை காப்பாற்றும் நாயகன் சந்துரு (ஜீவா) அவளது அழகில் மயங்கி காதலிக்கிறான்
வேலையில்லாத MBA பட்டதாரியான சந்துருவை முதலில் வெறுத்தாலும் கார் ஓட்டுனர் பயிற்சியாளராக உள்ள ஸ்ரீலாவும் சந்துருவின் காதல் கூத்தாட்டத்தில் மயங்கி அவனை காதலிக்க தொடங்குகிறாள்
ஆனால்......
ஒய்வு பெற்ற ராணுவ அதிகாரியான ஸ்ரீலாவின் தந்தை (நாசர்) சந்துருவை அவனது வேலையில்லா வெட்டி ஆபீசர் நிலையை சுட்டிக்காட்டி அவர்கள் காதலை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்
தன் காதலியாலும் காதலியின் தந்தையாலும் வேலையில்லை என்று அவமரியாதை செய்யப்பட்ட சந்துரு ஒரு ட்ராவல் ஏஜென்ட் (போஸ் வெங்கட்) மூலம் மத்திய கிழக்கு அரபு நாட்டில் வேலை கிடைத்துச் செல்ல........
அங்கே அவனுக்கு சோதனை மேல் சோதனையாக அவர் செய்யாத குற்றமாக அந்த நாட்டு போலீசாரால் போதை மருந்து கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு தலை துண்டிக்கப் படும் மரணதண்டனை பெறுகிறான்
இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து சந்துரு தப்பித்தானா....?
தன் அழகு காதலியை கரம் பிடித்தானா...? என்பதை வெண்திரையில் காண்க
யான் படத்தின் முன் பாதி முழுக்க ஜீவா-துளசி காதல் காட்சிகள் என்றும்
பின் பாதி..........தலை துண்டிக்கும் தண்டனை பெற்ற ஒரு மரண தண்டனைக் கைதி எவ்வித லாஜிக்கும் இல்லாமல் அரபு நாட்டு சிறையிலிருந்து ஒரு போலிஸ் அதிகாரியை கொன்று தப்பித்து அந்த நாட்டு அரசு விழாவில் வில்லனை சவாலுக்கு இழுக்கும் காட்சிகள் என்றும்
ஒளிப்பதிவாளராக இருந்த ரவி கே சந்திரன் தான் கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் யான் படத்தில் இயக்குனராக காட்ட முதல் முயற்சி செய்துள்ளார்
திரைக்கதையில் சொதப்பிவிட்டார் ஆனாலும் அவரது முதல் முயற்சி பாராட்டலாம் வலுவான கதையில்லாமல் அதிகப்படியான வணிகச் சமாச்சாரங்களான காதலும் காமெடியும் பார்வையாளர்களை அவ்வப்போது நெளியவைக்கிறது
யான்-ஏனோ தாம் தூம்,மரியான்...படங்களையும் நிறைய அதிரடிக்காட்சிகள் Midnight Express’. சர்வதேச திரைப்படத்தையும் நினைவுப்படுத்துகிறது
ஜீவா.......அவரது படங்களிலையே இதில்தான் அதீதமான உணர்வுகளை கொட்டி நடித்துள்ளார் ஓர் அதிரடி த்திரிலர் படத்தின் ஹீரோவாக சண்டைக்காட்சிகளிலும்சாக்லேட் பாயாக காதல் காட்சிகளிலும் அவரது நடிப்பு அருமை
துளசி நாயர்..........வழு வழுவென்று கவர்ச்சியாக தோன்றி வனப்புடன் அழகாக இருக்கிறார் நிறைய நடிக்கவும் செய்துள்ளார்
ஒய்வு பெற்ற இராணுவ அதிகாரியாகவும் கண்டிப்பான தந்தையாகவும் வரும் நாசர் படத்தின் பக்க பலமாக இருக்க..... அவரது போலிஸ் அதிகாரி நண்பராக ஜெயபிரகாஷ் வந்துப்போகிறார் தம்பி ராமையா,கருணாகரன் கொஞ்சநேரம் வந்தாலும் நம்மை சிரிக்க வைக்கிறார்கள்
மனுஷ் நந்தன் ஒளிப்பதிவில்.........படத்தின் தொடக்கமாக வரும் மும்பை ஏரியல் வியு பிரமிக்க வைக்கிறது பாடல்காட்சிகள் கண்ணுக்கு குளுமையான வண்ணங்களில் பிரகாசிக்கிறது
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில்.......படத்தில் தேவையில்லாமல் வந்தாலும் பாடல்கள் அனைத்தும் அருமை அதிலும் கானாபாலா பாடிய ஆத்தாங்கரை ஓரத்தில்....பாடல் நெஞ்சை வருடும் காதல் சோக கீதம் வாலிபக் கவிஞர் வாலியின் கடைசிப் பாடல் ஹே லம்பா லம்பா......... துள்ளல்
ஆக மொத்தத்தில்............
பிரமாண்டமான காட்சியமைப்புகளுக்கும் பிரமிப்பூட்டும் சண்டைக் காட்சிகளுக்கும் இனிமையான திரையிசைப் பாடல்களுக்கும் யான் படத்தை ஒரு முறை பார்த்து ரசிக்கலாம்
மற்றபடி படம் பார்த்தவர்களின் மதிப்பீட்டை தெரிந்து கொள்ள......
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....படத்தின் கதையாக...........

யான்-படம் எப்படியிருக்கு?
படம் பார்த்து வாக்களித்த அனைவருக்கும் நன்றி...........

வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |