google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: ஒரு ஊர்ல ரெண்டு ராஜா-சினிமா விமர்சனம்

Friday, November 07, 2014

ஒரு ஊர்ல ரெண்டு ராஜா-சினிமா விமர்சனம்

கொஞ்சம் சமுக சிந்தனையும் நிறைய காதலும் காமெடியுமாக படம் காட்டுவது இப்போதைய தமிழ் சினிமாவின் புது ட்ரென்ட் போல் . தொழிற்சாலை இரைச்சல் ஒலி மாசு பற்றிய சமுக விழிப்புணர்வுடன்... ஒரு ஊர்ல ரெண்டு ராஜா திரைப்படம்

படத்தின் கதையாக............
தூத்துக்குடி டு சென்னை ரயிலில் பயணிக்கும் விமலும் சூரியும் தற்செயலாக சக பயணி  பிரியா ஆனந்தை சந்திக்க கலகலப்புடன் நகரும் படம்.....
டாக்டரான பிரியா ஓடும் ரயிலில் ஒரு பெண்ணுக்கு பிரசவம் பார்க்க... 
அதனால் விமலுக்கு பிரியா மீது காதல் உண்டாகிறது

அத்துடன் விமலுக்கு பிரியாவின் பிளாஸ்பேக் கதையாக....
நாசருக்கு சொந்தமான  ஒரு ஸ்டீல் தொழிற்சாலையில் ஏற்படும் இரைச்சலால் தொழிலாளர்கள் காது கேட்காமல் பாதிக்கப்படுவதும் ரசாயனங்களால் புற்று நோய் உண்டாகி மரணிப்பதும் அவர்களுக்காக போராடிய டாக்டர் பிரியாவை கொலைசெய்ய  ரவுடி ஸ்டன்ட் சில்வா அதே ரயிலில் விரட்டி வருவதும்........ தெரியவருகிறது  

அந்தக்  கொலைகாரணிடமிருந்து  விமல்,சூரி,டாக்டர் பிரியா தப்பினார்களா...? என்பதை திரையில் காணுங்கள் 

ஆர்.கண்ணன் இயக்கத்தில்........படத்தின் முதல் பாதியில்  பழைய சினிமா பாணியில் காதலும் காமெடியுமாக பாசஞ்சர் ரயில் வேகத்தில் மெதுவாக  பயணித்தாலும்  பிரியாவின் பிளாஸ்பேக் கதை வரும் போது எக்ஸ்பிரஸ் வேகத்தில் பயணித்து......கிளைமாக்ஸ் காட்சியில் கொஞ்சம் சொதப்பலாக தடம் மாறினாலும் தமிழ் சினிமாவில் முழுவதும் ரயிலில் பயணிக்கும் முதல் திரைப்படம் இதுவாகத்தான் இருக்கும்  
எத்தனை ஓட்டைகள் இருந்தாலும் கண்ணனின் சமுக சிந்தனைக்கு ஒரு வணக்கம் சொல்லலாம்

விமல்......... வழக்கம் போல் முக பாவனையில் பெரிய மாற்றங்கள் ஏற்படுத்தாவிட்டாலும்   யதார்த்தமாக தன் நடிப்பை வெளிப்படுத்துகிறார் 
சூரி......ஒன்லைன் காமெடியில் கலக்குகிறார் 
நாசர்.....ஓட்ட ஸ்டீல் பேக்டரி ஓனராக நடித்துள்ளார் 
ஸ்டன்ட் சில்வா......பிரியாவை கொல்ல வரும் கொலைகாரனாக பயம் காட்டுகிறார்

இவர்கள் அனைவரையும் விட நடிப்பிலும் கவர்ச்சியிலும் அசத்தும் பிரியா ஆனந்த் படத்தை தாங்கிப்பிடிக்கிறார் அதே போல் பிரியாவின் தோழியாக கவுரவ தோற்றத்தில் நடித்துள்ள விஷாகா சிங் படத்தின் கதைக்கு பக்கபலமாக இருக்கிறார் 

முத்தையாவின் ஒளிப்பதிவில்.......தூத்துக்குடியின் கரடு முரடு காட்டுப் பகுதிகள் தத்துருபமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது 
இமானின் பின்னணி இசையில்...... ஒரு சில காட்சிகளில் உயிரோட்டமாக உள்ளது 

ஆக மொத்தத்தில்..............
தொழிற்சாலை இரைச்சலாலும் ,பாதுகாப்பற்ற ரசாயனங்களாலும் தொழிலாளர்கள் அதைச் சுற்றி வாழும் பொது மக்களின் உயிருக்கு பாதுகாப்பின்மையை எதிர்த்து பொதுநல வழக்கு மூலம் போராடுதல் போன்ற சமுக விழிப்புணர்வுடன் காதலும் காமெடியுமாக வந்துள்ள  ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்தை ஒருமுறை பார்க்கலாம்    





இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1