google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: அனேகன்-சினிமா விமர்சனம்

Friday, February 13, 2015

அனேகன்-சினிமா விமர்சனம்

இனிமையான இசை,பாடல்கள்,ஆச்சரியமூட்டும் காட்சியமைப்புகளுடன் இளமைத் துள்ளல் காதலுடன்  பார்வையாளர்களை  ஒரு கனவு உலகுக்கு இழுத்துச் செல்லும் தனுஷின் அனேகன்.......
நிறைய லாஜிக் ஓட்டைகளுடன் தள்ளாடினாலும் ஒரு  த்திரிலர் திரைப்படமாக மறுபிறவி  எடுக்கிறது
beach

சாப்ட்வேர் கம்பெனியில் வேலைசெய்யும் இன்றைய இளைஞர்கள்-இளைஞ்சிகள் மத்தியில் உலவும் மன அழுத்தம் (strees),மாயை (illusion) பற்றி படம் காட்டும்  அனேகன் படத்தின் கதையாக.......

உலகளவில் வீடியோ கேம்ஸ் தயாரித்து பணம் சம்பாதிக்கும் சாப்ட்வேர் கம்பெனி நடத்தும் கிரண் (கார்த்திக்)   கம்பெனியில் வேலை பார்க்கும் மது (அமைரா தஸ்தூர்) கண்டதும் காதலாக தன்னுடன் வேலைபார்க்கும் அஸ்வின் (தனுஷ்) மீது காதல் கொள்ள........

மதுவின் மாயக் கனவில் முந்தைய பிறவியில்  அவளது வாழ்வில் நடந்த காதல் போராட்டங்கள் வந்துசெல்கின்றன

1962-ல் பர்மாவில் மது சமுத்ராவாகவும் அஸ்வின் முருகப்பாவாகவும் காதலித்து கொலை செய்யப்பட்டு மரணம் அடைவதும்.........

1987-ல் சென்னை வியாசர்பாடியில் மது கல்யாணியாகவும் அஸ்வின் காளியாகவும் காதலித்து  கொலை செய்யப்பட்டு மரணம் அடைவதும்.........

நிகழ்காலத்தில் 25 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மது-அஸ்வின்  காதலுக்கு இடையூறு வருவதும்.........

பல போராட்டங்களுக்குப் பிறகு பழைய கொலைகாரனை அஸ்வின் கண்டுபிடித்து போலீசில் ஒப்படைத்து மீண்டும் மதுவுடன் காதலில் வெற்றி பெறுவதே........


படத்தின் சிறப்பான காட்சிகளாக.........
-பர்மாவில் ஏற்படும் ராணுவப் புரட்சியும் போராட்டங்களும் 
-முருகப்பாவும் சமுத்ராவும் கப்பலிலிருந்து கடலில் குதித்து மரணமடையும் முத்தக்காட்சியும் 
-வியாசர்பாடி மார்க்கெட்டில் காளி போடும் சண்டைக்காட்சி 
-ஆலமரத்தடியில் காளி-கல்யாணி கொலை செய்யப்பட்டு புதைக்கப்படும் காட்சி 
-அஸ்வினும் மதுவும் இருக்கும் லிப்ட் அறுந்து விழும் காட்சி
-கிளைமாக்சில் நடக்கும் மூங்கில் கட்டைகள் மீது நடக்கும் சண்டைக்காட்சி 
-இளமாறன்-செண்பகவல்லி அரசர் காலத்து காதல் டூயட் காட்சி
-காளி பூனைக்குட்டியை காப்பாற்ற ரயில் முன் பாயும் காட்சி 
இன்னும் பேன்டசியாக வரும் பாடல்காட்சிகள் போன்று நிறைய சிறப்பான காட்சி அமைப்புகள் படத்தில் பிரமிப்பூட்டுகின்றன 

படத்தின் பின்னடைவாக......  மாயை (illusion)என்று நம்பமுடியாத மறுபிறவிக் காட்சிகள் மற்றும் வெவ்வேறு காலகட்டத்தில் வரும் இன்றைய வில்லன்கள்,போலிஸ் அதிகாரி...நிறைய லாஜிக் ஓட்டைகள் படம்  பார்ப்பவரை குழப்புகின்றன

இயக்குனர் கே.வி.ஆனந்த்.........அயன் போன்ற அதிரடி த்திரிலர் படம் காட்டிய இயக்குனர்  காலத்திற்கு ஏற்ப கவர்ச்சி,கானாப்பாட்டு எல்லாம் கலந்த அறிவுஜீவி குழப்பமான திரைக்கதையுடன் அனேகன் படம் காட்டுவதில் தப்பில்லை ஆனால் படம் பார்ப்பவர்களில் அனேகம் பேரை பைத்தியமாக்கி குழப்பத்தில் தவிக்க விடுவதுதான் தப்பு 

தனுஷ்......மூன்று வித கெட்டப்புகளில் வந்து காதலிக்கிறார் பாட்டு பாடுகிறார் சண்டை போடுகிறார் அவரது உடல் மொழி அவரது வேடங்களுக்கு அசத்தலாக ஒத்துழைக்கிறது 

beach

அமைரா தஸ்தூர்.....கோலிவுட்டுக்கு வந்துள்ள பார்ஸி பேரழகி இளமைத் துள்ளலும் கவர்ச்சியும் கோலிவுட் கனவுக் கன்னியாக வலம் வருவார் என்று நம்பப்படுகிறது

கார்த்திக்.......நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படத்தில் வில்லனாக முக்கிய வேடம் கிடைக்கப் பெற்று சிறப்பாக  நடித்துள்ளார் வில்லனாகவும் அவரது குரல்வளம்  அருமை

போலீஸ் கமிஷனராகவும் ராணுவப் புரட்சியாளராகவும் ஆஷிஷ் வித்யார்த்தி நடித்துள்ளார் ஜெகன்.....காமெடியிலும் குணச்சித்திரத்திலும் அமுக்கி வாசித்துள்ளார் மற்றும் முகேஷ் திவாரி,தலைவாசல் விஜய்...நடித்துள்ளார்கள்

ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவில் மூன்று வெவ்வேறு காலகட்டங்கள் உயிரோட்டமாக காட்சிப்படுத்தப் பட்டுள்ளது பாடல்காட்சிகளில் வரும் விஷுவல் எபெக்ட்ஸ் உலகத்தரம் 

இவை எல்லாவற்றையும்விட ஹாரிஸ் ஜெயராஜின் இசை படம் முடிந்தப் பிறகும் காதில் ரீங்காரமிடுகிறது டங்கமாரி ஊதாரி......செம கலக்கல் 

ஆக மொத்தத்தில்..............

த்திரிலர் குளறுபடிகளை மறந்துவிட்டால் தனுஷின் அனேகன்........
கண்களுக்கு குளுமையும் காதுகளுக்கு இனிமையும் ஊட்டும் இளமைத் துள்ளலும் காதலும் நிறைந்த ஒர் அருமையான  கற்பனை பொழுது போக்கு மாயக் கனவு படம்.......

படத்தில் மட்டுமல்ல வீடியோ கேம்........படமே வீடியோ கேம்   
படம் பார்ப்பது ஒரு வீடியோ கேம் விளையாடுவது போல்....மாயை


படம் பார்த்தவர்களின் கருத்து தெரிந்து கொள்ள.........
(தயவு செய்து படம் பார்த்தவர்கள் மட்டுமே வாக்களிக்கவும்...)


அனேகன்-படம் எப்படியிருக்கு.....?




படம் பார்த்து வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி.........



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1