google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: டெம்பர்-சினிமா விமர்சனம்

Sunday, February 15, 2015

டெம்பர்-சினிமா விமர்சனம்

பூரி ஜகனாத் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆரின் டெம்பர் தெலுங்கு அதிரடி த்திரிலர் திரைப்படம்........

வழக்கமான கெட்ட போலீஸ் நல்ல போலீஸாக மாறும் கதை என்றாலும் வலுவான பாத்திரப்படைப்பாலும் பிரமாண்டமான காட்சி அமைப்புகளாலும் வெற்றிப்பட வரிசையில்.......


temper

பிளாஷ்-பேக் காட்சியாக SI தயா  (ஜூனியர் என்டிஆர்) தன் கதையை சொல்வது போல் தொடங்கும் டெம்பர் படத்தின் கதையாக..........

சிறுவயதிலேயே அனாதையாகி குறுக்குவழியாக பணம் சம்பாதிக்க குற்றவாளிகளுடன் தொடர்புடைய ஊழல் போலிஸ் SI அதிகாரியான தயா.........
 வைசாக்-கிற்கு மாற்றப்படுகிறார் 

அங்கே ரவுடியும் பயங்கர குற்றவாளியுமான வால்டர் வாசு (பிரகாஷ்ராஜ்) உடன் கைகோர்த்து ஊழலில் மிதக்கிறார் 



ஒருநாள்  விலங்கு ஆர்வலரும் இளமை துள்ளும் அழகியுமான 
சன்வி (காஜல் அகர்வால்) மீது காதல் வயப்பட்டு ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று இருக்கும் தயாவுக்கு......
 திண்டாட்டம்  அவரது ரவுடி நண்பர் வால்டர் வாசு மூலம் வருகிறது

ஓர் இளம் பெண் மரணம் பற்றிய காட்சிகள் அடங்கிய DVD-க்காக தயாவின் காதலி சன்வியை வால்டர் வாசு கடத்துவதால்  ஆத்திரமும் கோபமும் கொண்ட தயா..........

 நல்ல போலிஸ் அதிகாரியாக மாறி வாசுவுக்கு எதிராக போராடி
 வாசுவின்  குற்ற செயல்களை தடுத்து தவிடு பொடியாக்கி.....

 தயா சட்டத்தின் முன் அவனுக்கு எப்படி தண்டனை வாங்கிக் கொடுகிறார்? என்பதை........

 இயக்குனர் பூரி ஜெகனாத் பல திகில் திருப்பங்களுடன் விறுவிறுப்பாக படம் காட்டுவதே..........டெம்பர்

டெம்பர் படத்தின் முதல் பாதி சில சோகக் காட்சிகளால் தள்ளாடினாலும் வம்சியின் அலட்டல் இல்லாத திரைக்கதையை  இயக்குனர் பூரி ஜகனாத் தன் திறமையான இயக்கத்தால்  சரிக்கட்டி...

இரண்டாம் பாதியில் ஒரு ரோலர்-கோஸ்டில் பயணிப்பது போல் திருப்பங்கள் நிறைந்த  விறுவிறுப்பு காட்சிகளால் பார்வையாளர்களை இருக்கையின் விளிம்பு வரை இழுத்துச் செல்கிறார்


ntr

ராக்கி படத்திற்குப் பிறகு டெம்பர் படத்தில் ஜூனியர் என்டிஆர் உணர்சி தீப்பிழம்பாக எரிமலைக் குழம்பாக பொங்கி வடிகிறார் 
வித்தியாசமான தோற்றம் ஸ்டைலான நடிப்பு மட்டுமின்றி.......
நீதிமன்ற அறைக்காட்சியில் அவரது வசன உச்சரிப்பும் அட்டகாசம்

பிரகாஷ் ராஜ்........வழக்கமான நடிப்பு ஆயினும் கிளைமாக்ஸ் காட்சியில் முக்கியத்துவம் பெறுகிறது 

காஜல் அகர்வால்......காதலுக்கும் காதல் சார்ந்த ஜொள்ளுக்கும் மட்டுமே 

கொஞ்ச நேரமே வந்தாலும் மதூரிமாவும் அவரது கதாபாத்திரமும் படத்தின் முக்கிய திருப்பமாக அமைகிறது

டெம்பர் படத்தின் அடிப்படையான கதைக்கரு சமீபத்தில் வெளிவந்த கல்யான்ராமின் பட்டாஸ் படத்தை ஒத்திருந்தாலும் பூரி ஜெகனாத்தின் ட்ரீட்மென்ட்டில் வேறுபடுகிறது நம்ம தமிழ் ரசிகர்களுக்கு சாமி படத்தை நினைவூட்டும் 


மணி சர்மாவின் BGM மட்டுமில்லாது அனுப் ரூபன்ஸ் இசைப் பாடல்களும்  போட்டி போட்டு  பின்னி பெடலெடுக்கிறனர்
ஷியாம் நாயுடுவின் ஒளிப்பதிவில் கோவா கடற்கரை காட்சிகள் பிரமாதம் 

temper


ஆக மொத்தத்தில்...........

ஜூனியர் என்டிஆரின் ஸ்டைலான தோற்றம் நடிப்புக்காக மட்டுமில்லாமல் பூரி ஜெகனாத்தின் விறுவிறுப்பான இயக்கத்திற்காகவும் டெம்பர் திரைப்படத்தை........
அதிரடி திரைப்பட ரசிகர்கள் ஒருமுறை பார்க்கலாம்

டெம்பர்.......ஆரம்பம் முதல் கடைசி வரை அதிரடிக் காட்சிகளும் கிளுகிளுப்பான காட்சிகளும் படம் பார்ப்பவர்களை டெம்பராகவே வைத்துள்ளது 




இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1