google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: அஜித்தின் என்னை அறிந்தால்-சுட்டக் கதையா?

Thursday, February 12, 2015

அஜித்தின் என்னை அறிந்தால்-சுட்டக் கதையா?

அஜித் நடித்து ஓடிக்கொண்டிருக்கும் கவுதம் மேனனின் என்னை அறிந்தால் படத்தின் கதை 2010-ல் வெளிவந்தThe Man from Nowhere கொரியன் படத்தின்  உல்டா என்று உலக சினிமா ஆர்வலர்கள் புலம்புகிறார்கள்


லீ ஜியோங்  பொம் (Lee Jeong-beom) இயக்கத்தில் வான் பின் (Won Bin) நடிப்பில் வசூலில் சக்கைப்போடு போட்ட தென் கொரியா அதிரடித் த்திரிலர்   The Man from Nowhere படத்தின் கதையாக.........

சின்ன அடகு கடை வைத்து  அமைதியான வாழ்க்கை நடத்தும் சா டே-சிக்(Cha Tae-sik )கின் ஒரே நண்பி பக்கத்துவீட்டு சிறுமி சோ-மி  (So-mi) 

ஒருநாள் சோ-மியின்  தாயும் ஹெரோயின் அடிமையான நைட் கிளப் நடனமங்கை ஹயோ ஜியோங்(Hyo-jeong)  ஒரு கேமரா அடங்கிய கைப்பையை சா டே-சிக்கிடம் அடகு வைக்கிறாள்  அதனுள் நைட்-கிளப்பில் திருடப்பட்ட ஹெராயின் இருப்பது சா டே-சிக்க்கிற்கு தெரியாது 

போதைக்கும்பல் தலைவன் ஒஹ் மியுங்-க்யு (Oh Myung-gyu) தன் அடி ஆட்கள் ஜாங்-சாக்  and மன்-சாக் இருவரையும்  அனுப்பி மறைத்து வைக்கப்பட்ட ஹீரோயினை தெரிந்து கொள்ள ஹயோ ஜியோங்கையும் சிறுமி சோ-மியையும் கடத்திவிடுகிறான் 

அவர்களை மீட்க சா டே-சிக் அந்த ஹீரோயின் பையை ஒப்படைக்கும் போது  கும்பல் தலைவன் ஒஹ் மியுங்-க்யு  சா டே-சிக் மீது ஒரு கொலை பலியை போட்டு ஒரு காரில் சில போதை பொருட்களை கொடுத்து அவரை கடத்தலுக்கு உபயோகப்படுத்துகிறான் அப்போது போலீசாரிடம் அகப்பட்டுக்கொண்ட சா டே-சிக்கின் காரில் சோ-மியின் தாய்  ஹயோ ஜியோங்கின் உடல் உறுப்புகள் அகற்றப்பட்ட பிரேதம் இருப்பது தெரிகிறது 

சா டே-சிக் போலீஸ் நிலையத்திலிருந்து தன் நண்பி சிறுமி சோ-மியை தேடி தப்பிக்கும் போது கொரியன் போலீசாருக்கு சா டே சிக் ஒரு முன்னாள் கொரியன் அரசாங்கத்தின் ரகசிய ஏஜென்ட் என்றும் குற்றவாளிகளுக்கு எதிரான பல ரகசிய நடவடிக்கைகளை மேற்கொண்டவர் என்றும்  தன் கர்ப்பிணி மனைவியின் மர்ம கொலைக்குப் பிறகு வேலையை விட்டு அமைதியாக வாழ்பவர் என்றும் தெரியவருகிறது 

கொலைகாரர்கள்   ஜாங்-சாக்  and மன்-சாக் இருவரிடமிருந்து நிறைய சிறுவர் சிறுமியைக் காப்பாற்றும்  சா டே-சிக்  ஒரு பெட்டியில் இரண்டு கண்கள் இருப்பதை பார்த்து கலங்கி...
சோ-மியின் கண்கள் என்று நினைத்து ஆத்திரத்தில்  கொலைகாரர்களை குத்தி கொள்கிறார்
தான் நேசிக்கும் சிறுமி சோ-மியை  காணாமல் சோகத்தில் சா டே-சிக்தற்கொலை முடிவுக்கு வரும் போது அதிஷ்டவசமாக சோ-மி உயிருடன் வருகிறாள் 

போலீசாரால் கைது செய்யப்பட்ட சா டே-சிக் சிறுமி சோ-மிக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொடுத்து அவள் சுயமாக வாழவேண்டும் என்று அறிவுறித்தி போலீசாரிடம் சரணடைகிறார் 

                        thanks-YouTube by The Man From Nowhere

இதுதான் The Man from Nowhere கொரியா படத்தின் கதை 


என்னை அறிந்தால் படத்தின் கதையாக..........
சிறு வயதில் தன் தந்தையை கொலை செய்த ரவுடிகளை பழிவாங்க IPS படித்து போலீஸ் அதிகாரியான சத்யதேவ் போதை பொருள் கடத்தல் குற்றவாளிகளை வேட்டையாடும் போது.....

 விக்டர் என்ற கடத்தல் பேர்வழியுடன் நட்பாக பழகி அவனது கூட்டத்தை அழிக்கிறார் அதனால் விக்டர் பழிவாங்கும் உணர்வுடன்.........
 சத்ய தேவ் நேசித்த விவாகரத்தான நாட்டிய மங்கை ஹெமனிகாவை கொலை செய்கிறான் 

சத்யதேவ் ஹெமனிகாவின் மகள் இஷாவை தன் மகளாக எண்ணி போலீஸ் வேலையை உதறிவிட்டு அமைதியாக வாழ்ந்துகொண்டிருக்கிறார் 

பல வருடங்களுக்குப் பிறகு கடத்தப்பட்ட தன் நண்பர் மகளை கண்டுபிடிக்க  மீண்டும் போலீஸ் அதிகாரியாக மாறி தேடும் போது உடல் உறுப்புகளை திருடி கொலை செய்யும் கூட்டத்தில்  முன்னாள் குற்றவாளி விக்டர்  இருப்பதையும் தேன்மொழி என்ற இளம் பெண்ணின் இதயத்தை திருட முயற்சிப்பதையும் தடுகிறார்........

சத்யதேவ் தேன்மொழியை காக்கும் இந்தப் போராட்டாத்தில்  விக்டரால் கடத்தப்பட்ட  தன் வளர்ப்பு மகள் இஷாவையும்   காப்பாற்றுகிறார் 

என் பார்வையில்......
இரண்டு படங்களுக்கும் முக்கிய கதைக்கருவிலும் காட்சி அமைப்பிலும் நிறைய வேறுபாடுகள் தெரிகின்றன 

என்னை அறிந்தால் படத்தின்   கதைக்கரு இதற்கு முந்தைய கவுதம் மேனனின் காக்க காக்க,வேட்டையாடு விளையாடு... போன்ற படங்களில் நாம் பார்த்துள்ளதால் .........

கொரியா இயக்குனர் லீ ஜியோங்  பொம் வேண்டுமானால் கவுதம் மேனனை காப்பி அடித்திருக்கலாம் என்று.......
 நம்ம பதினெட்டு பட்டி சினிமா  பஞ்சாயத்து தீர்ப்பு அளிக்கிறது 

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1