google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: என்னை அறிந்தால்-சினிமா விமர்சனம்

Thursday, February 05, 2015

என்னை அறிந்தால்-சினிமா விமர்சனம்



இதுவரை தல அஜித்தை மாஸ் ஹீரோவாக பார்த்த நமக்கு பல விருதுகள் வெல்லும் மாபெரும் சிறந்த  நடிகர் அஜித்தாக படம் காட்டுகிறது என்னை அறிந்தால்........

பல திருப்பங்கள் நிறைந்த விறுவிறுப்பான  ஒரு போலிஸ் கிரைம் த்திரிலர்   கதையுடன் காதல்,குடும்ப சென்டிமென்ட் கலந்து இயக்குனர் கவுதம்  மேனன்.....
 தல அஜித்தின் வித்தியாசமான யதார்த்தமான நடிப்பை வெள்ளித்திரையில் வெளிப்படுத்தியுள்ளார் 

(குறிப்பு-எனது விமர்சனம் உங்கள் படம் பார்க்கும் நோக்கத்திற்கு எவ்வித இடையூறாகவும் இருக்காது)



அமெரிக்காவிலிருந்து சென்னைக்கு தனியாக விமானத்தில்  வரும் அனுஷ்காவுடன்  அருகில் அஜித்  பயணிப்பது போல் துவங்கும் என்னை அறிந்தால் படத்தின் கதையாக.....

கடமை கண்ணியம் கட்டுப்பாடு நிறைந்த உயர் போலிஸ் அதிகாரி சத்ய தேவ்  (அஜித் குமார்) க்கு......

குழந்தைகளையும் பெண்களையும் கடத்தி  கள்ளத்தனமாக உடல் உறுப்புகள் களவாடப்பட்டு கொலை செய்யும் விக்டர் (அருண் விஜய்) என்ற ஒரு முன்னாள் கைதி......

ஒரு கோடிஸ்வரருக்கு தேவையான பிளட் குரூப்பில் உள்ள தேன்மொழி (அனுஷ்கா) இதயத்துக்காக அவளை கடத்த நினைப்பது தெரிய வருகிறது

எப்படி சத்ய தேவ்  தேன்மொழியை பாதுகாத்து 
பயங்கர குற்றவாளி விக்டரை அழிக்கிறார்...? என்பதை......

 பல திருப்பங்கள் நிறைந்த திகில் காட்சிகளுடன் படம் காட்டும் என்னை அறிந்தால் படத்தை திரையரங்கில் கண்டுகளியுங்கள் 

(இதற்கிடையில் சத்யதேவ் நேசிக்கும் விவாகரத்தான நடனப்பள்ளி ஆசிரியை ஹெமனிகா (திரிஷா)வும்  அவளது கொலையும் பிளாஷ்-பேக் காட்சிகளாக காட்டப்பட்டு படத்திற்கு தேவையான டெம்போ ஊட்டுகிறது 
ஹெமனிகா மகள் ஈஸா (பேபி அனிகா) வுக்கு ஒரு நல்ல வளர்ப்பு தந்தையாக அஜித் அமைதிப் பயணம் மேற்கொள்ளும் காட்சிகள் அவரது  கதாப்பாத்திரத்திக்கு சிறப்பு ஊட்டுகிறது)

ஒரு மாஸ் ஹீரோவுக்கான அறிமுகப் பாடல்,அதிரடி சண்டைக்காட்சிகள்,சீரற்ற நக்கல் காமெடி...என்று எவ்வித வணிகச் சமாச்சாரங்களும் இல்லாமல் ஒரு த்திரிலர் நாவல் போன்று கதையை ஆரம்பம் முதல் கடைசி வரை நகர்த்திச் சென்று.....

அஜித் போன்ற மாஸ் ஹீரோவுக்குள் ஒளிந்திருந்த நடிப்புத்திறமையை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ள இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனை பாராட்டலாம்


அஜித்குமார்......சிறுவயதில் அப்பாவை பறிகொடுத்து வருந்தும்  மகனாகவும் கடமைமிக்க உயர் போலிஸ் அதிகாரியாகவும் கண்ணியமான காதலனாகவும் அன்பான அப்பாவாகவும் குற்றவாளிகளிடம் இதயமுள்ள கொலைகாரராகவும் பல்வேறு தோற்றங்களில் உணர்ச்சி வெளிப்படுத்தி......
பல விருதுகளை வெல்லும் மாபெரும் நடிகராக நடித்துள்ளார்

திரிஷா.....நடனப் பள்ளி ஆசிரியையாகவும் ஒரு குழந்தைக்கு தாயாகவும் விவாகரத்தான இளம் பெண்ணாகவும் நடித்துள்ளார்  

அனுஷ்கா.....அஜித் மீது கண்டதும் காதலாக  மார்டன் வெளிநாட்டு பெண் போன்று  யதார்த்தமாக நடித்துள்ளார் 

அருண் விஜய்....வித்தியாசமான ஹேர்-ஸ்டைலில் சிக்ஸ் பேக் உடல் கட்டுடன் மிரட்டலாக வருகிறார் அவரது மனைவியாக பார்வதி மேனன் ஒன்றிரண்டு காட்சிகளில் வந்தாலும் மனதில் நிற்கிறார் 

விவேக்.......காமெடிக்கு படத்தில் இடமில்லை என்றாலும் அவ்வப்போது டைமிங் விட் பேசி சிரிக்க வைக்கிறார்

ஹாரிஸ் ஜெயராஜ் பின்னணி இசை மிரட்டலாக உள்ளது பாடல்களில் வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுத்து கமுக்கமாக வாசித்துள்ளார்

ஆக மொத்தத்தில்............

காக்க காக்க,வேட்டையாடு விளையாடு படங்களின் சில காட்சிகளை நினைவுப்படுத்தினாலும் கவுதம் மேனனின் என்னை அறிந்தால்.... அஜித்தின் நடிப்பு திறமையை வெளிக் கொணர்ந்து அஜித்தின் படங்களிலேயே கோஹினூர் வைரமாக விளங்குகிறது

படம் பார்த்தவர்களின் மதிப்பீடு.........
(தயவு செய்து படம் பார்த்தவர்கள் மட்டும் வாக்களிக்கவும்)
என்னை அறிந்தால்...படம் எப்படி இருக்கு?




வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி.........  முடிவு-12/02/2015



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1