google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: பட்டாஸ்(தெலுங்கு)-சினிமா விமர்சனம்

Monday, February 09, 2015

பட்டாஸ்(தெலுங்கு)-சினிமா விமர்சனம்

என்.டி.ஆரின் வாரிசு நடிகர் நந்தாமுரி கல்யாண்ராம்  நடித்துள்ள அதிரடி நகைச்சுவை பொழுதுபோக்கு தெலுங்கு மசாலா திரைப்படம் ....பட்டாஸ்

சில பல காரணங்களுக்காக ஊழல்,கிரிமினல்  அதிகாரியாக இருக்கும்  உயர் போலிஸ் அதிகாரி ஒருவர் மீண்டும் சில பல காரணங்களுக்காக உண்மையான நேர்மையான  அதிகாரியாக  மாறுவதே பட்டாஸ் படத்தின் கதை....... 










































நகரத்துக்கு மாற்றலாகி வரும் உதவி போலீஸ் கமிஷனர் கல்யாண் சின்ஹா (கல்யாண்ராம்) சிறுவயதில் கண்டிப்புடனிருந்த தன் தன் தந்தை டிஜிபி (சாய் குமார்) க்கு தொந்தரவு கொடுத்தபடி 
ரவுடி அரசியல்வாதியும் எம்.பியுமான  ஜி.கே  (அசுடோஷ் ரானா) வுடன் தொடர்பு வைத்துள்ளார் 

திடீரென்று ஒருநாள் ஜி.கேயின் ரவுடி சகோதரனும் அவனது கும்பல் ஆட்களும்  ஒரு பெண்ணை  கற்பழிக்கப் முயலும்போது  தடுக்கச்செல்லும் காவ்யா என்ற  அனாதை சிறுமியை  கொலை செய்துவிடுகிறார்கள்

சகோதரியாக நினைத்த காவ்யாவின் கொலை ACP கல்யாண் மனதில் பெரிய மாற்றத்தை விதைத்து அவரது தந்தை DGP-யுடன் கைகோர்த்து ரவுடிகளை களை எடுத்து நகரத்தை தூய்மைப் படுத்துவதை..... 
அறிமுக இயக்குனர் அணில் ரவிபுடி அதிரடியாகவும் நகைச்சுவையாகவும் பட்டாஸ் படத்தில் படம் காட்டுகிறார் 


அணில் ரவிபுடியின் திரைக்கதையும் இயக்கமும் நிறைய இடங்களில் வன்முறையை காட்டுகிறது  குறிப்பாக காவ்யா மரணக்காட்சி மிருகத்தனமாய் காட்டப்பட்டுள்ளது  நல்ல நகைச்சுவை  காட்சிகள் நிறைந்த இதுபோன்ற படத்தில் இத்தகைய வன்முறைக் காட்சிககளை தவிர்த்திருக்கலாம்

கல்யாண்ராம்......ஒரு குறும்புக்கார போலீஸ் அதிகாரியாக அவரது உடல் மொழியும் வசன உச்சரிப்பும் பார்வையாளர்களை கவர்கிறது சாய்குமார்...DGP பதவியின் கம்பீரத்தை நடிப்பில் காட்டுகிறார் தொலைகாட்சி நிருபராக வரும் நாயகி ஸ்ருதி சோதி நாயகனுடன் பாடல்களில் ஆட்டம் போட மட்டுமே 
சுனாமி ஸ்டாராக எம்.எஸ்.நாராயணாவும் CI அசிஸ்டன்ட்டாக வரும் ஸ்ரீநிவாஸ் ரெட்டியும் சிரிக்கவைக்கிரார்கள் 


                                        thanks-YouTube byTelugu Filmnagar
ஆக மொத்தத்தில்...........

கோலிவுட் மக்களே..
நீங்கள் காப்பி அடிக்க அல்லது ரீமேக் பண்ண பட்டாஸ்....... 
நகைச்சுவை பட்டாசாக சரவெடி  வெடிக்கும் தெலுங்கு மசாலா பொழுது போக்கு படம்


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1