google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: ஷமிதாப் (இந்தி)-சினிமா விமர்சனம்

Friday, February 06, 2015

ஷமிதாப் (இந்தி)-சினிமா விமர்சனம்

பாலிவுட்டில் Cheeni Kum, Paa.. போன்ற வெற்றிப்படங்களை தந்த ஆர்.பால்கி இயக்கத்தில் அமிதாப் பச்சன்-தனுஷ் இணைந்து நடித்துள்ள ஷமிதாப்....
போட்டி,பொறாமை....நிறைந்த திரை உலகின் இன்னொரு இருண்ட   பக்கத்தையும் நகைச்சுவையுடன் வெளிச்சம் போட்டு காட்டுகிறது 

இன்று திரையுலகில் ஜொலிக்கும் ஒவ்வொரு நட்சத்திர நடிகரின் வெற்றிக்கு பின்னணியில் ஒருவரோ  அல்லது பலரோ முக்கிய காரணகர்த்தாவாக இருப்பதும் அவர்களின் உழைப்பு வெளிச்சத்துக்கு வராமல் புறக்கணிக்கப்படுவதையும் நகைச்சுவை நையாண்டி படம் காட்டுவதே........ஷமிதாப் 

ஷமிதாப் படத்தின் கதையாக..........


சிறு வயதிலிருந்தே சினிமாவில் பெரிய நடிகனாக வேண்டும் என்ற கனவில் கிராமத்திலிருந்து மும்பை வந்து நடிக்க முயற்சி செய்யும் பிறவியிலேயே வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி ஆனால் ஒரு நடிகருக்குள்ள மிடுக்கான தோற்றம் கொண்ட வாலிபன் டேனிஷ் (தனுஷ்).......

திறமை இருந்தும் வாய்ப்பு கிடைக்காமல் கலங்கி நிற்கும் டேனிஷ்க்கு உதவிட நினைத்த ஒரு இளம் துணை இயக்குனர் அக்ஷரா (அக்ஷரா ஹாசன்) அவரை வெளிநாட்டிற்கு அனுப்பி....

ஒரு புதிய விஞ்ஞான தொழில் நுட்பம் மூலம் டேனிஷ் தொண்டையில் ஒரு கருவியை பதித்து அடுத்தவர் பேசும் குரலை பதிவு செய்து வாய் உதடுகள் அசைப்பில் அவரே பேசுவது போல் மாற்றி விடுகிறாள்

பெரிய சினிமா நடிகராகவேண்டும் என்ற கனவு பலிக்காத கவலையில் முடாக் குடிகாரனாக மாறி ஒரு  கல்லறைத் தோட்டத்தில் வசிக்கும் 71  வயது முதியவர் ஆனால் கம்பீரமான குரலுக்கு சொந்தக்காரர் அமிதாப் சின்ஹா (அமிதாப் பச்சன்) வை தேடிப்பிடித்து டேனிஷ்க்கு குரல் டப்பிங் பதிவிடச் செய்து........

டேனிஷை சினிமாவில் அறிமுகப்படுத்தி அவரும் அதீத வேகத்தில் ஷமிதாப்  என்ற நட்சத்திர நடிகராக வளர்ச்சி அடைந்துவிடுகிறார் 


பெரிய நடிகரான ஷமிதாப்பின் வளர்ச்சியும் புகழும் அவருக்கு குரல் பதிவு செய்யும் அமிதாப் சின்ஹா இதயத்தில் பொறாமையை விதைத்து இருவருக்கும் இடையில் பெரிய பிரிவு  உண்டாகிறது

இதற்கிடையில் டேனிஷ்-அமிதாப் சின்ஹா இருவரின் குரல் செட்டப்பை மோப்பம் பிடித்த ஒரு நிருபர் அதை வெளிஉலகுக்கு சொல்லத் துடிக்கிறார் 

இந்த சிக்கலான சூழ்நிலையை அக்ஷரா உதவியுடன் தங்கள் தவறை உணர்ந்த டேனிஷ்-அமிதாப் சின்ஹா இருவரும் மீண்டும் ஓன்று சேர்ந்து எப்படி முறியடிக்கிறார்கள் என்பதை நகைச்சுவையுடன் இயக்குனர் ஆர்.பால்கி படம் காட்டுவதே.......ஷமிதாப் 

இயக்குனர் ஆர்.பால்கி......பாலிவுட் அமிதாப் பச்சன்-கோலிவுட் தனுஷ் இவருடைய ரசிகர்களையும் குஷிப்படுத்தும் கற்பனை விஞ்ஞான நகைச்சுவை திரைக்கதை யுடன் பாராட்டு பெறுகிறார் 

தனுஷின் வாயசைப்பில் அமிதாப்பின் குரல்முதலில் வேடிக்கையாக தெரிந்தாலும் அதுவே படத்தின் என்டர்டைன்மென்டாக  மாறிவிடுகிறது  ஆனாலும் கிளைமாக்ஸ் நம்பகத்தன்மை இல்லாதது

பாலிவுட்டின் பழம்பெரும் புகழ்பெற்ற நடிகரும் கம்பீரமான குரலுக்கு சொந்தக்காரருமான 71 வயது பிக்-பி அமிதாப் பச்சன்  இன்றும் திரையில் தோன்றும் போதும் அரங்கம் அதிர கரகோஷம் எழும்புகிறது 

ரஞ்சனா மூலம் பாலிவுட்டில் அறிமுகமான தனுஷ்க்கு ஷமிதாப்  இரண்டாவது படம் மட்டுமல்ல அவருக்கு பாலிவுட்டில் ஒரு சிறந்த நடிகராக பரிணமிக்க வாய்ப்பளித்துள்ளது அதன் குறீயீடாக ரஜினிகாந்த் போன்று கண்டக்டராக வேலை பார்த்து நடிகராக மாறியது போல் நடித்துள்ளார் 

அறிமுக நடிகை அக்ஷரா ஹாசன்......இரண்டு மிகப் பெரிய நட்சத்திரங்கள் மத்தியில் கொஞ்சமும் தயக்கம் பின்னடைவு இன்றி நடித்துள்ளது ஆச்சரியமில்லை அது அவரது பெற்றோர்களின்  இரத்தத்திலிருந்து வந்த நடிப்பு மரபணு 

இளையராஜா இசை அமைக்கும் 999-வது படமான ஷமிதாப்பில் அவரது   இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்.....Sha Sha Sha Mi Mi Mi பாடலும் அமிதாப் பாடிய "Piddly Si Baatein" பாடலும் பிரபலம் 

பி.சி.ஸ்ரீராம்....... ஒளிப்பதிவில் பாடல்களும் காட்சி அமைப்புகளும் படத்திற்குள் வரும் படமும் பார்வையாளர்களை கவர்கிறது 
                                      thanks-YouTube by Eros Now
ஆக மொத்தத்தில்...............
ஷமிதாப்........
தனுஷ்-அக்ஷரா இளமை துள்ளும் நடிப்புக்காகவும்
அமிதாப்பின் கம்பீரமான குரலுக்காகவும் நகைச்சுவை சினிமா விரும்பிகள் பார்க்கவேண்டிய படம் 

 

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1