google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்-சினிமா விமர்சனம்

Friday, February 20, 2015

தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்-சினிமா விமர்சனம்

ஒரு காதல் கதை,ஒரு த்திரிலிங் கதை,ஒரு காமெடிக் கதை....இந்த மூன்றையும் மொபைல் போன்  சம்பந்தப்பட்ட சினிமாவாக முடிச்சு போட்டு இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா கலகலப்பாக படம் காட்டுவதே.....தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்
bindhu

ஒர் ஆபத்தான  விபத்து சூழ்நிலையில் தனது காதலனும் ரியல் எஸ்டேட் -கட்டுமான  கம்பெனி பிரதிநிதியுமான  அட்டகத்தி தினேஷுடன்  தொடர்பு கொள்ள முடியாமல் தவிக்கும் தற்கொலை தடுப்பு ஆர்வலரும் வங்கி பெண் அதிகாரியுமான பிந்து மாதவி........

 தனது கால்-டாக்ஸியில் ஒரு போன் கால் வந்ததும் சிட்டியில் வெடிக்கும்படி தீவிரவாதிகள் செட்டப் செய்து பாம் வைத்திருப்பதை அறியாமல்  தனது கல்யாணத்திற்கு பெண் பார்த்த காமெடிகளைச் சொல்லிக்கொண்டு அலையும் கால் டாக்ஸி டிரைவர் சதீஸ்......

கல்லூரி மாணவியும் தன் காதலியுமான ஐஸ்வர்யா தத்க்கு புரஜக்டாகவும்  ஒரு மொபைல் கம்பெனிக்காக இயற்கை பாதிப்பிலும் தடையில்லாமல் வேலை செய்யும் மொபைல் போன் டவர் ஆராய்ச்சியில்  இறங்கும் பிறவி  இளம் விஞ்ஞானி நகுல்........

இந்த மூவர் கதைகளும் ஒன்றுடன் ஒன்றாக பின்னப்பட்டு.........

மின்காந்த புயலால் சென்னையில் உள்ள மொபைல் போன் டவர்கள் செயலிழக்கும் ஒரு நாளில் நகுல் ஆய்வு செய்து செயல்பட வைக்கும் முயற்சியில் அவர்  வெற்றிப் பெற்றால்.......

பிந்துமாதவி அட்டகத்தி தினேஷால்  காப்பாற்ற்றப்படலாம்
அதேநேரம் சதீஷின்  டாக்ஸி பாம் வெடித்து நகரில் நாசம் ஏற்படலாம்
என்பதை காதல்-காமெடி-த்திரலராக விறுவிறுப்புடன்  படம் காட்டுவதே..... தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்

அறிமுக இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா திரைக்கதை முன்பாதி ஜவ்வ்வவ்வ்வாக இழுத்தாலும் நகைச்சுவை காட்சிகளால் பார்வையாளர்களை கவர்ந்து  பின் பாதியில் த்திரிலிங் விறுவிறுப்பு ஊட்டுகிறார் 

காமெடி நிறைந்த பிந்து மாதவி-சதிஷ் இருவரின் நடிப்பு நகுல்-அட்டகத்தி தினேஷ் இருவரின் நடிப்பையும் ஓவர்டேக் செய்ய........நகுல் அம்மாவாக நடித்துள்ள ஊர்வசி அனைவரையும் கவர்கிறார்

ஆக மொத்தத்தில்..........

அறிவுஜீவி  த்திரிலர் திரைப்படம் போன்று தெரியும் கோலிவுட்டுக்கு புதுமையான விஞ்ஞான ரீதியான சமுக த்திரிலர் தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்.........
அதன் காதல்-நகைச்சுவை-த்திரிலர்  கலவையால் அனைத்து  பார்வையாளர்களையும் கவர்கிறது 



பார்வையாளர்களின் மதிப்பீடாக..............
(தயவுசெய்து படம் பார்த்தவர்கள் மட்டுமே வாக்களித்து கருத்தை தெரியப்படுத்தவும்)

 தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்-
 படம் எப்படியிருக்கு....?




படம் பார்த்து வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி..........


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1