google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: கோபாலா கோபாலா (தெலுங்கு)-சினிமா விமர்சனம்

Saturday, March 14, 2015

கோபாலா கோபாலா (தெலுங்கு)-சினிமா விமர்சனம்



சிவன் என் கனவில் வந்தார்-நான் இயேசுவிடம் பேசினேன்-நான் நபியின் மறுபிறவி என்றெல்லாம் மடாதிபதி ஆதீனம் -போதகர்-கராத்தே மாஸ்டர் கூட்டம் கூட்டமாக தமிழகத்தை மூடநம்பிக்கை கூடமாக மாற்றிக்கொண்டிருக்கும் வேளையில்......
இந்தியில் கடவுளை தேடி அலையும் ஏலியனாக pk படமும் இப்போது தெலுங்கில் கடவுள் மீது வழக்கு தொடுக்கும் ஒரு நாத்திகனாக கோபாலா கோபாலா படமும் மூடநம்பிக்கைக்கு எதிராக படையெடுத்து வந்துள்ளன

தமிழில் பராசக்தி,இரத்தக்கண்ணீர்...போன்ற படங்களுக்குப் பிறகு இதுபோன்ற சமுக சீர்திருத்த படங்கள் வராதது தமிழகத்துக்கு பிடித்துள்ள பீடை 

த்திரிலர் என்ற பெயரில் வெளிநாட்டு படங்களை சுட்டு படம்காட்டும் நம்ம கோலிவுட்காரங்களுக்கு இதுபோன்ற படங்கள் கண்ணில் தெரியாதது ஆச்சரியமே 

கடவுள் சிலை பொம்மைகளை விற்பனை செய்யும் கோபால் ராவ் (வெங்கடேஷ்) ஒரு நாத்திகர் ஆனால் அவரது மனைவி மீனாச்சி (ஸ்ரேயா)  முழுக்க முழுக்க கடவுள் நம்பிக்கை உள்ளவள் 

கோபால் ராவின்  மூட நம்பிக்கைகளை எதிர்க்கும் பேச்சும் நடவடிக்கைகளும் மற்றும்  மத ஸ்தாபனங்களுக்கு உதவுவதைவிட ஏழைகளுக்கு உதவுங்கள் என்று அவர் அறைகூவல் விடுவதும்  அவரை  கடவுள் பிரதிநிதி சித்தேஸ்வர் மகராஜ் (போசனி கிருஷ்ண முரளி) யின் கோபத்துக்கு ஆளாக்குகிறது

ஒருநாள் புயல் மழை பூகம்ப நிலநடுக்கத்தால் அவரது கடை சிதிலமடைகிறது நஷ்ட ஈடு கேட்டு காப்பீட்டு நிறுவனத்திற்குப்  போகும் கோபால் ராவுக்கு  கடவுள் செயலால் ஏற்படும் நஷ்டத்துக்கு ஈடு கிடையாது என்கிறார்கள் அதனால் கோபால் ராவ் கடவுள் மீது வழக்கு தொடுக்கிறார் அவருக்கு அக்பர் பாய் (முரளி ஷர்மா) என்ற வக்கீல் உதவுகிறார் நீதிமன்றமும் அவரது வழக்கை ஏற்றுக்கொள்கிறது 

கடவுள் மீது வழக்கு தொடுத்த கோபால் ராவுக்கு  லீலாத்ரா சுவாமி (மிதுன் சக்ரவர்த்தி) ஆதரவாளர்களால் பயங்கர எதிர்ப்பும்அதேநேரம் அவர் போன்று கடவுள் செயலால் (Act of God) பாதிக்கப்பட்டவர்களால் ஆதரவும் உண்டாகிறது 

கோபால் ராவ் வீட்டை ஒரு கந்துவட்டி கும்பல் ஆக்கிரமித்து கொள்ள அவரது மனைவி மீனாட்சிஅவரை விட்டு  பிரிந்து போகிறாள்  ஆனால் ஆபத்து பாந்தனாக கோபால கோவிந்த ஹரி (பவன் கல்யாண்)  என்பவர் கோபால் ராவ்  வீட்டை மீட்டு அவரையும் அவருடன் தங்க அனுமதிக்கிறார் (பார்வையாளர்களுக்கு மட்டுமே தெரியும் கோபால கோவிந்த ஹரி என்பவர் பகவான் கிருஷ்ணர் மறைமுகமாக மானிட உருவத்தில் வந்துள்ளார் என்பது)

கோபால கோவிந்த ஹரியும் கோபால் ராவின் வழக்குக்கு உதவியாக பகவத் கீதை, பைபிள்,குர்ரான் போன்ற புனித நூல்களிலிருந்து (உலகை படைத்தது கடவுள்.இந்த உலகை ஆக்கவும் அழிக்கவும் கடவுளுக்கு அதிகாரம் உண்டு) நிறைய தகவல்களை உருவியெடுத்து கொடுத்து உதவுகிறார் 

கடவுள் மீது தொடுக்கப்பட்ட வழக்கை கடவுள் பிரதிநிதிகளாக செயல்படும் சித்தேஸ்வர், லீலாத்ரா சுவாமி..போன்றவர்களை எதிர்த்து கடவுள் கோபால கோவிந்த ஹரி உதவியால் நாத்திகர்  கோபால் ராவ்  வெற்றி பெற்றாரா..? பிரிந்து போன கோபால் ராவின் மனைவி குடும்பம் ஓன்று சேர்ந்ததா...? என்பதே மீதி கோபாலா கோபாலா (தெலுங்கு) படத்தின் கதை 


கோபாலா கோபாலா தெலுங்கு படம் இந்தியில் பரேஷ் ராவல், அக்ஷய் குமார் நடித்த ஓ மை காட் (OMG-Oh My God) என்பதின் ரீமேக் ஆனாலும் இயக்குனர் கிஷோர் குமார் பர்தசனி உணர்வுப்பூர்வமான காட்சிகளை அமைத்து பார்வையாளர்களை இந்தப் பிரபஞ்சத்தில் அவர்களின் நிலை என்ன? என்பதை நினைத்துப்பார்க்க வைக்கிறார் 

நாத்திகராக நடித்துள்ள வெங்கடேஷ்....முதிர்ச்சியான கதாபாத்திரத்தை தன் அனுபவ நடிப்பால் அசத்தினாலும் கடவுளாக வரும் பவன் கல்யாண் நடிப்பு படத்திற்கு சிறப்பூட்டுகிறது படத்தை தலையில் தாங்கி நிற்கிறது 
ஸ்வாமிஜி வேடத்தில் வரும் போசானி நடிப்பு படத்திற்கு கலகலப்பு ஊட்டுகிறது மிதுன் சக்ரவர்த்தி வில்லன் நடிப்பு எடுபடவில்லை 
ஆக மொத்தத்தில்..........

வெங்கடேஷ்-பவன் கல்யாண் நடிப்பில் வந்துள்ள கோபாலா கோபாலா (தெலுங்கு) திரைப்படம் பார்வையாளர்களின் இதையத்தை வருடும் சிந்தையைத் தூண்டும் பொழுதுபோக்கு படம்




இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1