google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: கடவுள் பாதி மிருகம் பாதி-சினிமா விமர்சனம்

Wednesday, March 25, 2015

கடவுள் பாதி மிருகம் பாதி-சினிமா விமர்சனம்

ஸ்பீல்பெர்க்கின்  ஹாலிவுட் DUEL படத்தின் உல்டாவாக வந்திருக்கும் கடவுள் பாதி மிருகம் பாதி....
நெடுஞ்சாலையில் அறிமுகமில்லாதவருக்கு காரில் லிப்ட்  கொடுப்பதால் ஏற்படும் விபரிதத்தை த்திரிலிங்காக படம்காட்டுகிறது 
நள்ளிரவில் இருட்டில் ஒரு செக்கியுரிட்டி காவலரை ஒருவர் அடித்து கொலை செய்வது போல் தொடங்கும் கடவுள் பாதி மிருகம் பாதி படத்தின் கதையாக....

காதலர்கள்  அபிஷேக்-ஸ்வேதா  இருவரும் வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்துகொள்ள காரில் ஹைதராபாத் நோக்கி நெடுஞ்சாலையில் பயணிக்கிறார்கள் வழியில் ராஜ் சகரியா லிப்ட் கேட்டு அவர்களுடன் காரில் ஏறிக்கொள்கிறான்

இதற்கிடையில் போலிஸ் அதிகாரி சேது கொலை செய்யப்பட்ட செக்கியுரிட்டி காவலர் பற்றி துப்பு துலக்கி மென்டல் ஆஸ்பத்திரியிலிருந்து தப்பிய கொலைகாரன்  ராஜ் சகரியாவை தேடி அதே நெடுஞ்சாலையில் விரட்டி வருகிறார்

காதலர்கள் காரில் லிப்ட் கேட்டு ஏறிய ராஜ் பாதி வழியில் மென்டல்தனமாக அவர்களுடன் சண்டையிட்டு அவர்களை கொலை செய்ய முயல்கிறான் 
போலிஸ் அதிகாரி சேது காதலர்களை காப்ப்ற்றினாரா...? என்பதே மீதி கதை 

ஒரு த்திரிலர் படத்திற்கு உரிய இருட்டு கொலை,அதிக வசனமில்லாமை,குறைந்த பாடல்கள்,காமெடி காட்ச்சிகள் இல்லாதது...என்று கடவுள் பாதி மிருகம் பாதி படத்தில்  முக்கால் பகுதி ஒரு நெடுஞ்சாலை   விரட்டல்  மட்டுமே உள்ளது மிரட்டல் மிஸ்ஸிங் 

ராஜ் சகரியா-பூஜா காதல் பிளாஸ்பேக் காட்சி கொஞ்சம் ஆறுதல் ராஜ் சந்தேகப்பட்டு பூஜாவை கொல்லும் காட்சி நெருடல் 

மற்றபடி இசை,ஒளிப்பதிவு மட்டுமின்றி இயக்கம்,நடிப்பு எல்லாமே அபத்தம் 
பார்வையாளர்களை ஈர்க்கும் விஷயம் எதுவும் படத்தில் இல்லை

ஆக மொத்தத்தில்.......

ராஜ் சகரியா எழுதி,இயக்கி,நடித்து,தயாரித்துள்ள கடவுள் பாதி மிருகம் பாதி படத்தில் கடவுளும் இல்லை மிருகமும் இல்லை அறுவைச் சாத்தான்  மட்டுமே உள்ளது 

இனிவரும் காலத்தில் ஐ-போன்ல படம் எடுத்து முடிச்சிடுவாயிங்க போல் அதை ஏன்டா தியேட்டர்ல போட்டு எங்கள சாவடிக்கிறீங்க பேசாம YOUTUBE போட்டுட்டு ஹிட்ஸ் பாருங்கடா....




இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1