google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: கொம்பன்-சினிமா விமர்சனம்

Thursday, April 02, 2015

கொம்பன்-சினிமா விமர்சனம்

தாய்-மகன் பாச உறவை  குட்டிப்புலி படத்தில் தெய்வீகமாக படம்காட்டிய  இயக்குனர் முத்தையா.......
 கொம்பன் படத்தில் மாமன்-மருமகன் மரியாதைக்குரிய உறவை கிராமத்து கதைக்களத்துடன் காமெடி கலந்த அதிரடி பொழுது போக்கு படமாக படைத்துள்ளார் 

komban


கிராமத்து நேர்மையான சண்டியரான ஆட்டு வியாபாரி கொம்பையா  பாண்டியன்  (கார்த்தி) பக்கத்து கிராமத்து பெரியவர் முத்தையா (ராஜ்கிரண்) வின் மகள் பழனி (லட்சுமி மேனன்) யை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார் 

மகள் மீது உள்ள பாசத்தால் மருமகன் கொம்பையா வீட்டில்  மாமனார் முத்தையாவும் தங்கிவிடுகிறார்

பக்கத்து கிராமத்து பெரிய மனுஷன் குண்டன் ராமசாமி (சூப்பர் சுப்பராயன்) க்கும்  கொம்பையாவுக்கும் இடையில் உள்ள முன்பகை தெரிந்து கொண்ட முத்தையா தன் மருமகனுக்கு பாதுகாப்பாக இருக்கிறார் 

ஒரு கட்டத்தில் வீட்டோடு இருக்கும் முத்தையாவுக்கும் கொம்பையாவுக்கும்  இடையே முட்டல் மோதல் ஏற்பட.........
அதனால்  பழனி அப்பா முத்தையாவுடன் கொம்பையாவை விட்டு பிரிந்து போகிறாள்

குண்டன் ராமசாமி கொம்பையாவை பழிவாங்கினானா...? 
மீண்டும் முத்தையா-கொம்பையா இணைந்தார்களா...? 
என்பதே மீதி கதை.........

படத்தின் சிறப்பான சில காட்சிகளாக.........
-கோவை சரளாவும் கருணாஸும் கார்த்திக்கு பெண் பார்க்கும் காட்சி 
-ராஜ்கிரண் கார்த்தியை பற்றி ஊரில் விசாரிக்கும் காட்சிகள் 
-ராஜ்கிரண் குண்டன் ராமசாமி ஆட்களுடன் சண்டையிடும் காட்சி 
-சிறையில் கார்த்தி இருளில் போடும் சண்டைக் காட்சி 
-ராஜ்கிரண் கருப்பசாமியாக வேட்டைக்குப் போகும்கிளைமாக்ஸ் 

இது போன்ற ட்விஸ்ட் நிறைந்த காட்சிகள் நிறைய உண்டு ஆனாலும் கார்த்தி கதாபாத்திரத்தை ஓவர்-பில்டப்பாக காட்டுவது அவரது ரசிகர்களுக்கு மட்டுமே மற்றவர்களுக்கு எரிச்சல் 

இயக்குனர் முத்தையா.....முன்பகுதியில் நடிகர்கள் ராஜ்கிரண்-கார்த்தி இருவரையும் முன்னிலைப்படுத்தி மாமனார்-மருமகன் உணர்ச்சி பொங்கும் காட்சிகளை அமைத்து படத்தை நகர்த்துகிறார் 

அப்படியே பழிவாங்கும் வன்முறைக் கதையை நுழைத்து ஒரு நல்ல திரைக்கதையிலிருந்து தடம் புரண்டுவிட்டார் ஆனாலும் அவ்வப்போது வசனங்கள் சமுக சிந்தனையுடன் குத்தீட்டியாக பாய்கிறது

கார்த்தி.....இன்னொரு பருத்தி வீரன் போன்று கிராமத்து சண்டியராக தோன்றினாலும் கொம்பன் கொம்பையா பாண்டியன் நடிப்பில் வேறுபடுத்தி காட்டியுள்ளார்

லட்சுமி மேனன்........அழகிலும் கிராமத்து குடும்பப் பெண்ணாக நடிப்பிலும் நல்ல முன்னேற்றம் 

ராஜ்கிரண்........தோற்றத்தில் கிராமத்து கம்பீரம்  ஆனால் இதில் கொஞ்சம் வித்தியாசமாக சாந்த ரூபியாக வருகிறார் உக்கிர கடவுள் கருப்பசாமியாக வேட்டைக்கு போகும் காட்சி திகிலூட்டுகிறது 

பருத்தி வீரன் சரவணன் போன்று கார்த்தியின் மாமாவாக நடித்துள்ளார் தம்பி ராமையா 
சூப்பர் சுப்பராயன்..... கிராமத்து கொடூரமான வில்லன் வேடத்துக்கு கனகச்சிதமாக பொருந்துகிறார் 
கருணாஸ்,கோவை சரளாவும்....நடித்துள்ளார்கள்

வேல்ராஜ் கேமராவில் வறண்ட ராமநாதபுரம் பகுதி முடிந்த வரை வளமாக காட்டுகிறது ஜி.வி.பிரகாஷ் இசையும் மோசமில்லை 

ஆக மொத்தத்தில்........... 

சாதி சங்கங்கள் கொடிபிடிக்கும் அளவுக்கு கொம்பன் ஒரு  சாதீய படமல்ல........
ஆனால் வன்முறை சாதி சூழ் கிராமத்து கதைக்களத்துடன் காமெடி கலந்த குடும்பப் படம் 

படம் பார்த்தவர்களின் மதிப்பீடு..............


கொம்பன் - படம் எப்படியிருக்கு....?




படம் பார்த்து வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி........


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1