google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: நண்பேன்டா-சினிமா விமர்சனம்

Saturday, April 04, 2015

நண்பேன்டா-சினிமா விமர்சனம்

"பாய் வீட்டு கல்யாணத்துல சாம்பார் சாதம் போட்டா மாதிரி ஏன் மூஞ்சிய இப்படி வச்சிருக்க...?" என்று சந்தானம் உதயநிதியை நண்பேன்டா  படத்தில் கேட்பது போல் ஒரு வசனம் வருது.......

அது படத்துக்கு மட்டுமல்ல.....

 உதயநிதி-சந்தானம் கூட்டணியினரின் முந்தைய ஒகே ஒகே மாதிரி கலகலப்பான காமெடி படம் என்று நினைத்து போகும் பார்வையாளர்களின் மூஞ்சுக்கும் கச்சிதமாக பொருந்தும்

சிறையிலிருந்து தப்பிக்க நினைக்கும் கைதி சத்யா (உதயநிதி) வின் பிளாஷ்-பேக் காட்சியாக தொடங்கும் நண்பேன்டா படத்தின் கதையாக.........

தஞ்சாவூரில் வெட்டியாக பொழுது போக்கிக்கொண்டிருக்கும்  சத்யா அப்பாவின் கண்டிப்பால் ஊரை விட்டு வெளியேறி திருச்சியில் ஓட்டல் நடத்தும்  நண்பன் மரிக்கொழுந்து (சந்தானம்) வுடன் தங்குகிறார்

அங்கே ஒரு வங்கியில் வேலை பார்க்கும் ரம்யா (நயன்தாரா) வை ஒரே நாளில் 3 முறை  பார்க்கிறார் 

ஊரில் ஒரு ஜோதிடர் சொன்னது போல்......

'இப்படி  ஒரே நாளில் மூன்று  முறை ஒரே பெண்ணை பார்த்தால் அந்த ஒரே பெண்ணை கல்யாணம் கட்டிக்கிட்டா வாழ்க்கை சந்தோசமாக இருக்கும்' என்ற பெண் மொழிப்  படி.......

சத்யா நண்பன் மரிக்கொழுந்து உதவியுடன் ரம்யாவை காதலிக்க பதிலுக்கு   ரம்யாவும் காதலிக்க......
ஆனால்  
அம்மணி ரம்யா ஒரு அனுகுண்டு போடுது......?
 தான் ஒரு முன்னாள் கைதி கொலை குற்றவாளி என்று.

அதனால்.....

சத்யா-ரம்யா  காதலில் விரிசல் விழுது

ஓட்டையான அவர்களது காதல் அடைபட்டதா....? 
பஞ்சரான அவர்களது காதல் டியுப் ஒட்டப்பட்டதா....? என்பதை அவசியம் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் திரையரங்கம் போங்க மக்கா.......

இதுக்கு மேல கதை சொல்ல என்னால மிடில...........

காமெடி படம்னா லாஜிக் பார்க்கக் கூடாதுதான் அதுக்காக நயன்தாரா ஏன் கைதியானார்...? போன்ற  அபத்தங்களை ஜீரணிக்க முடியவில்லை

கதையே இல்லாம திரைக்கதை அமைத்து பக்கம் பக்கமா வசனம் எழுதி படம் எடுப்பது எப்பூடி....? என்பதை இயக்குனர் ஜெகதீஸிடமிருந்து  தெரிந்து கொள்ளலாம் சந்தானத்தின் கவுண்டர் அட்டாக் வசனத்தை  மட்டுமே நம்பி ரொம்ப அருமையாய் நம்மை சிரிக்க வைக்க முயற்சித்துள்ளார்

படம் முழுக்க அம்புட்டு பேரும் பேசிக்கிட்டே இருப்பதால் நாம் கண்களை மூடிக்கொண்டும் படம் பார்க்கலாம்  
சிரிப்பு....? வரலாம் வராமலும் போகலாம்

முன்பாதி கதாப்பாத்திரங்கள்  முட்டாள்தனமாக பேசும் காமெடி  பின் பாதி படம் பார்ப்பவர்களை  முட்டாள்களாக்கும்  காமெடி 
 பேசி பேசியே நம்மள சாகடிக்கிறாயிங்கப்பா......

ஆக மொத்தத்தில்.......

படம் பார்ப்பவர்கள் எல்லோரையும்  விழுந்து விழுந்து சிரிக்க வைக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் எடுக்கப்பட்ட படம்.......  நண்பேன்டா  எதையும் நிறைய எதிர்பார்க்காமல்  போனால் கொஞ்சம் சிரித்துவிட்டு வரலாம்
 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1