google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: 36 வயதினிலே-சினிமா விமர்சனம்

Wednesday, May 20, 2015

36 வயதினிலே-சினிமா விமர்சனம்



இளமையில் தைரியமும் துணிச்சலும் மிக்க ஒரு பெண் திருமணத்திற்குப் பிறகு கணவன்-குழந்தை-மாமியார்-மாமனார் என்ற நாலு சுவற்றுக்குள் எப்படி அடங்கிப் போகிறாள்....? 

உன்னையே அறிவாய்......என்ற தத்துவத்தை உணர்ந்து மீண்டும் எப்படி தன் கனவுகளை நிலைநாட்டி சாதனை படைக்கிறாள் என்பதை அழகாக காட்சிப்படுத்தி உள்ளது.........36 வயதினிலே

 படிக்கும் போது  தன் உடன் பயிலும் தோழிகளை திரட்டி ஆடை பிரச்சனையில் கல்லூரியில் போராட்டம் நடத்தும் மாணவி ஜோதிகா....

தன் 13 வயது மகளும் தன் கணவர் ரகுவரனும் தன்னை புரிந்து கொள்ளாதபோதும் துடிதுடித்து போகிறாள் தன் கனவுகளை தொலைத்துவிட்டதாக கலங்கிப் போகிறாள்

சிறப்பு விருந்தினராக ஜனாதிபதியை சந்திக்கும் போது மயங்கி விழுகிறாள்   

ஊரே பேஸ்புக் சமுக வலைதளத்தில் எள்ளி நகைக்கும் போது அடங்கிப் போகிறாள் 

அவளுக்குள் இருந்த கனவுகளை அவளது கல்லூரி தோழி அபிராமி மூலமாக தூண்டப்பட்டு தன் சுய முயற்சியால் தன் கனவுகளை மீட்டு எடுக்கிறாள்

மொட்டைமாடியில் பூச்சி மருந்துகள் இல்லாத காய்கறிகள்  விளையச் செய்து சாதனை படைக்கிறாள் 

மீண்டும் ஜனாதிபதியின் பாராட்டுதலை பெற்று.... 
கேலி செய்த உலகை வாயடைக்கிறாள் 

ஒரு பெண் சாதனை செய்ய வயது குடும்பம் தடை இல்லை என்பதை மலையாள ரீமேக் படமாயினும் அதன் சாயல் தெரியாவண்ணம் காட்சிப்படுத்திய இயக்குனரை பாராட்டலாம் 

ஆனாலும்....

 இது சினிமா அல்ல சினிமா மாதிரி ஒரு தொலைகாட்சி நாடகம்

ஜோதிகாவின் இயல்பான நடிப்பே 
நம்மை படத்துடன் ஒன்றிட வைக்கிறது 

ஆக மொத்தத்தில்............

மனைவியை நேசிப்பவர்கள் 
தங்கள் மனைவியுடன் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்-
36 வயதினிலே 


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1