google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: மாசு என்கிற மாசிலாமணி (மாஸ்)-சினிமா விமர்சனம்

Saturday, May 30, 2015

மாசு என்கிற மாசிலாமணி (மாஸ்)-சினிமா விமர்சனம்

பிரியாணி படைத்த வெங்கட்பிரபு மாசு என்கிற மாசிலாமணி (மாஸ்) யில் காமெடி,குடும்பம்,சென்டிமென்ட்,சோகம்,த்திரிலிங், ரிவேன்ஜ், சஸ்பென்ஸ்....போன்ற நவரசங்களை பிழிந்து ஊற்றி புளியோதரை, தயிர்சாதம், பொங்கல்,உப்புமா....  கலவையாக கதம்பச் சோறு படைத்துள்ளார்

தன் குடும்பத்தை அழித்தவர்களை அப்பா ஆவியாக வந்து மகன் மூலம் பழிவாங்குவதே மாசு என்கிற மாசிலாமணி (மாஸ்)  படத்தின் கதை

 நண்பன் பிரேம்ஜிவுடன் சின்னச் சின்ன  திருட்டுகளில் ஈடுபட்டு வந்த மாஸ் (சூரியா)  பெரிசாக ஹார்பரில் ரெட்டி பணத்தை தந்திரமாக ஏமாற்ற......
அதனால் நடக்கும் விபத்தில் பேய்களை காண்பதும் பேசுவதுமான அபூர்வ சக்தியை பெறுகிறான்

பத்துக்கு மேற்பட்ட காமெடி ஆவிகளுடன் ஒரு ஒப்பந்தம் போட்டு அவர்கள் ஆசையை  நிறைவேற்றிவைக்க ஒப்புக்கொள்வதுடன் அந்த ஆவிகளை வைத்து வசதியானவர்களை பயம்காட்டி பேய் ஓட்டும் தொழில் செய்து பல லட்சங்களை சப்பாதிக்கிறான்

அந்தப் பணத்தில் மாஸ் தன்னுடைய காதலி நர்ஸ் நயன்தாராவுக்கும் வேலை வாங்கி கொடுத்து ஜாலியாக இருக்கும் போது.......
ஷக்தி (சூர்யா) என்ற ஈழத்தமிழர் ஆவி மாசை பல கோடி பண ஆசை காட்டி கொள்ளையடிக்க அழைத்துச் சென்று தன் குடும்பத்தை அழித்த ஹவாலா சமுத்திரக்கனி கூட்டத்தில்  ஒருவரை சாகடிக்கிறது 

முதலில் ஷக்தி ஆவி மீது கோபப்பட்டாலும் ஷக்தி தனது அப்பா என்ற  உண்மை தெரிந்த மாசு தானே தந்திரமாக வில்லன்களை பழிவாங்குவதே படத்தின் மீதி கதை.......

இயக்குனர் வெங்கட்பிரபு.......... சென்னை-28 படம் போல் தெளிவான திரைக்கதையை   அமைக்காமல் மாசு என்கிற மாசிலாமணி-யில்  காமெடி-ஹர்ரர் இரண்டுக்கும் இடையில் தள்ளாடிவிட்டார்

 பார்வையாளர்களின் எதிர்பார்ப்பை தூண்டும் காட்சியாக ஓர் உயர் போலிஸ் அதிகாரியை ஒரு மர்மநபர் கொலை செய்வது போல்  துவங்கும் படம்  இடையில் ஆவி....பாவி.....என்று எங்கெல்லாமோ சுற்றி மீண்டும் கதைக்குள் நுழைவதற்குள் பார்வையாளர்களுக்கு அசதி உண்டாகிறது

சூரியா.........இரண்டு வேடங்களில்  நடித்துள்ளார் ஈழத்தமிழர் வேடத்தில் உடை,நடை,பாவனை அனைத்தும் அருமை ஆனால் மாசு காதில ஊக்கு எதுக்கு? 
நயன்தாரா......கொஞ்ச நேரம் வந்து கொஞ்சிப் போகிறார்
ப்ரனித்தா....... காதல் சோகம் இரண்டிலும் டச்சிங் டச்சிங் சமுத்திரக்கனி.......சொதப்பல்

பிரேம்ஜி.........என்ன கொடுமை சார் இது?
பார்த்திபன்.....நக்கல்
இன்னும் கோலிவுட்நடிகர்கள் பாதிக்கு மேல் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள் யார் ஆவி யார் பாவி என்று கண்டுபிடிப்பதற்குள் நமக்கு நாக்கு தள்ளிவிடுகிறது

இசை ஒளிப்பதிவு பெரிதாக சொல்ல எதுவுமில்லை

ஆக மொத்தத்தில்..............
எதிலும் தனித்துவம் இல்லாமல் காதல்-சோகம்-காமெடி கலந்து வெங்கட்பிரபு வித்தியாசமாக எடுக்க முயன்ற  பேய்கள்  படம்....
 மாசு என்கிற மாசிலாமணி (மாஸ்).........பார்க்கலாம்  பார்வையாளர்களின் மதிப்பீடு............


மாசு என்கிற மாசிலாமணி (மாஸ்)
....................படம் எப்படியிருக்கு?
படம் பார்த்து வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி..........இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1