google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: புறம்போக்கு-சினிமா விமர்சனம்

Friday, May 15, 2015

புறம்போக்கு-சினிமா விமர்சனம்

சமுக சிந்தனையை வெள்ளித்திரையில் விதைத்து வரும் இயக்குனர் S.P.ஜனனாதனின் புறம்போக்கு என்கிற பொதுவுடைமை படத்தில் இன்றைய காலகட்டத்தின் முக்கிய சமுகப் பிரச்னையான தூக்கு தண்டனை பற்றி படம்காட்டுகிறது 



தேசத்துக்கு எதிராக செயல்பட்டு மரணதண்டனை பெற்ற பொதுவுடைமை இயக்கத்தைச் சேர்ந்த தூக்குத்தண்டனை  கைதி ஆர்யா.....

ஆர்யாவின் தூக்குத்தண்டனையை நிறைவேற்ற துடிக்கும் 
போலிஸ் அதிகாரி ஷாம்.....

கயிறு இறுக்கி தூக்கு தண்டனையை பரம்பரையாக நிறைவேற்றும் ஹெங்-மேன் விஜய் சேதுபதி.......

ஆர்யாவை தூக்குத் தண்டனையிலிருந்து காப்பாற்ற சாணக்கியத்தனமாக போராடும் ஆர்யாவின் இயக்கத்தை சேர்ந்த  இளம்பெண் கார்த்திகா நாயர்....

இந்த நான்கு கில்லாடிகளை சுற்றியே காட்சிகள்  நகர்ந்து.........

ஆர்யா தூக்குத் தண்டனையிலிருந்து காப்பாற்றப்பட்டாரா....? 

கார்த்திகாவின் முயற்சி வெற்றி பெற்றதா....? 

இதில் விஜய் சேதுபதியின் பங்கு என்ன...? 

என்பதை திகிலூட்டும் எதிர்பார்ப்புடன் புறம்போக்கு படத்தில் காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குனர் 

ஆர்யா,விஜய் சேதுபதி,ஷாம்,கார்த்திகா நாயர்......அனைவரும் இதுவரை நாம் பார்த்த நடிகர்களாக இல்லாமல் ரொம்ப சீரியஸாக நடித்து நிஜமான கதாப்பாத்திரங்களாக திரையில் உலவுகின்றனர் 

கலை இயக்குனர் செல்வகுமார் கைவண்ணத்தில் படத்தில் வரும் சிறைச்சாலை நிஜமாக பிரதிபலிக்கிறது 

ஒளிப்பதிவாளர் ஏகாம்பரத்தின் கேமரா சுட்டுத் தள்ளிய பனிபடர்ந்த காட்சிகள்  பார்வையாளர்களை பரவசப்படுத்துகிறது 

 கதைக்கு சம்பந்தமே இல்லாத பாடல்கள் இல்லாமலிருந்தால்.... முன்பாதியில்  கொஞ்சம்  வேகம் கூட்டியிருந்தால் .........

 இது கோலிவுட் புறம்போக்கு அல்ல ஹாலிவுட் புறம்போக்கு

ஆக மொத்தத்தில்.............

S.P.ஜனனாதனின் புறம்போக்கு என்கிற பொதுவுடைமை படம் 
சமுக சிந்தனை கொண்ட பார்வையாளர்களின் மனதில் ஒருவித சமுக தாக்கத்தை உருவாக்கும் 

படம் பார்த்தவர்களின் மதிப்பீடு...............

புறம்போக்கு-படம் எப்படியிருக்கு.....?





படம் பார்த்து வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி.................


 

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1