google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: சோன்பப்டி-சினிமா விமர்சனம்

Wednesday, June 03, 2015

சோன்பப்டி-சினிமா விமர்சனம்



வாழ்க்கையில் பொறுமை முக்கியம் 

உங்க பொறுமைக்கு ஒரு பரிசோதனை -சோன்பப்டி படம் 

சோன்பப்டி-120 minutes ஓடும்  இந்தப் படத்தை நீங்க கடைசிவரை பார்த்தால் நீங்க மிகப் பெரிய பொறுமைசாலி 
உங்க வாழ்க்கையில் வெற்றி நிச்சயம் 


சோன்பப்டி-ஒரு காமெடி குற்றவியல் த்திரிலர் என்று சொல்லி 
படுபாவிக கொஞ்சமும் ஈவு இறக்கம் இல்லாம நோகடிச்சிட்டாயிங்க 


Email மூலமா எந்த ஒரு கம்புட்டரையும் ஹேக் பண்ணி அதிலுள்ள தகவலை களவாடும் ஜித்தரான ஒரு  கம்பூட்டர் இன்ஜினியர் நம்ம  ஹீரோ....... 

அவருக்கு 3 நண்பர்கள் 

ஒருத்தரு வங்கியில வேலை பார்த்துக்கொண்டே ஈட்டி எறியும் திறமைசாலி ஒலிம்பிக் கனவோடு இருக்கிறாரு 

இன்னொருத்தரு ஹீரோ கூட வேலைபார்க்கிற  இஞ்சினியரு 
ஆர்யா மேல ஜொள்ளு விடுற ஒரு பொண்ண கல்யாணம்  பண்ணிகிட்டு இவரு திரிஷா மேல ஜோள்ளுவிடுவாருஇரண்டு பெரும் சேர்ந்து....

அடுத்து ஒருத்தரு........தத்தி 
ஆனால் வெளிநாட்டு வேலை கனவுல மிதப்பாரு

நம்ம ஹீரோவுக்கு அரேஞ்ச்ட் மேரேஜ் பண்ண ஹீரோயினை நிச்சயம் பன்னுறாயிங்க ஆனால் அவியிங்க தியேட்டர்,மால்னு சுத்திக்கிட்டு ஜாலியா இருக்கும் போது........

சோன்பப்டி-னு ஒரு பையன் அவியிங்க கார்ல ஒளிஞ்சிக்கிறான் 

அவனை தேடி ஒரு கொள்ளைக் கூட்டம் ....
அதாவது ஒரு பேங்க்ல யார் பணம் பரிவத்தனை பண்ணுனாலும் அதில ஒரு ரூபாய் மட்டும் பேங்க்ல வேலை பார்க்கும் நம்ம ஹீரோவோட நண்பன் கணக்குல  ஆட்டோமேட்டிக்கா போய் விழுந்திடுற மாதிரி ஒரு செட்டப் செய்து கோடி கணக்கா கொள்ளை அடிக்கும் வில்லன் கும்பல் 

இந்த ரகசியத்த கிராஸ் டாக்ல அந்த சிறுவன்சோன்பப்டிமொபைல்ல பதிவு பண்ணிடுறான் அதை தெரிந்து கொண்ட வில்லன்கள் அந்த மொபைல பிடுங்க........

நம்ம ஹீரோவோட நண்பர்கள் இரண்டு பேரை பிணையக் கைதியாக பிடிச்சி வைக்க நம்ம ஹீரோவும் ஹீரோயினும் சோன்பப்டி சிறுவனுடன் வில்லன் கூட்டத்தில் சரண் அடையிறாயிங்க

அப்பத்தான் ஹீரோவுக்கு தெரியவருது.......
அவருடைய  பேங்க் நண்பனை போலீஸில் வில்லன் குருப் மாட்டிவிட்டுள்ள மர்மம் 

உடனே எல்லோரும் தப்பிச்சி.......
ஹீரோ வில்லன் கம்புடரை ஹேக் பண்ணி 
போலீஸிடமிருந்து நண்பனை விடுவித்து நண்பனை தேசிய ஈட்டி எறிதல் போட்டியில் கலந்துக்க வைக்கிறாங்க 

என்ன அண்ணேன்.......முணுமுணுக்கிறீங்க 
இன்னும் கதை முடியல....

இதைக் கடைசிவரை பொறுமையாக படித்த நீங்கதான் உலகிலேயே சிறந்த பொறுமைசாலி உங்க வாழ்க்கையில் வெற்றி நிச்சயம்  

அப்புறம் படம் முடியும் போது.........
ஒரு சிக்ஸ்செர் அடிக்கிறாயிங்க பாருங்க 

இந்த படத்தில புகை பிடித்தாலோ...? 
டாஸ்மாக் தண்ணி அடித்தலோ....? 
காம குத்து பாட்டு ஆட்டமோ...? எதுவும் இல்லை  

உண்மைதாங்க 

எதுவுமே இல்லை.........கதையும்தான் 






 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1