google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: இந்தியா பாக்கிஸ்தான்-சினிமா விமர்சனம்

Thursday, May 14, 2015

இந்தியா பாக்கிஸ்தான்-சினிமா விமர்சனம்


லாஜிக் இல்லாத காட்சிகள் ஆனாலும் சிரிக்க வைக்கும் வசனம்,சிறப்பான திரைக்கதை,இசை,பாடல்களால் ஒரு ஜனரஞ்சமான திரைப்படமாக..... இந்தியா பாக்கிஸ்தான்

ஒரு மாலில் காதலுக்கு மரியாதை டிவிடி வாங்கும் போது சந்தித்துக்கொண்ட அட்டம்ட் வக்கீல் கார்த்திக் (விஜய் ஆன்டனி)-மெரிட் வக்கீல் மெலினா (சுஷ்மா ராஜ்) இருவரும் வீட்டு புரோக்கர்களின் குளறுபடியால்  ஒரே அறையை வக்கீல் அலுவலமாக உபயோகிக்க......
அவர்களுக்குள் மோதல் உண்டாகிறது 

இதற்கிடையில்  செய்யும் ஒரு போலி என்கவுண்டர் காட்சியை ஒரு நிருபர் பதிவு செய்து அந்த மாலில் காதலுக்கு மரியாதை டிவிடியில் மறைத்து வைத்ததை தன் போலிஸ் காவலர்கள் மூலம் தேடி அலைகிறார்.......
போலி(ஸ்) என்கவுண்டர்  அதிகாரி சம்பத் (சரத் லோகித்ச்வா) .

கிராமத்து காத்தமுத்து (பசுபதி)-ஊர் சாமியார்  மருதமுத்து (எம்.எஸ்.பாஸ்கர்) இருவருக்கும் உள்ள நிலத்தகராறு கோர்ட்க்கு வர......
வக்கீல்கள் கார்த்திக்கும் மெலினாவும் ஆளுக்கு ஒரு பக்கம் வாதாடி மோதுகிறார்கள் அப்படியே அவர்களது மகள்-மகன் இளம் ஜோடி காதலுக்கும் உதவுகிறார்கள்  

டிவிடிக்காக இளம் காதலர்களையும் மெலினாவையும்   போலிஸ் அதிகாரி கடத்திச் செல்ல......
கார்த்திக்  கிராமத்து படை பட்டாளங்களுடன் சென்று காமெடி சண்டை போட்டு அவர்களை காப்பாற்றி மெலினாவை கரம்பிடிக்கிறார் 

கதை பழசு ஆனாலும் அங்கே இங்கே பல படங்களை ஞாபகப் படுத்தினாலும் என்.ஆனந்த்தின் திரைக்கதையும் இயக்கமும் படம் பார்ப்பவர்களை கடைசி வரை சிரிக்க வைக்கிறது 

விஜய் ஆன்டனி........அய்யோ பாவம் காமெடி படத்திலும் ரொம்ப சீரியஸாக முழிக்கிறார் சுஷ்மா ராஜ்.......அசத்தலான அழகு அசத்தலான நடிப்பு ஜெகன்...சிரிக்க வைப்பதில் நல்ல முன்னேற்றம்  

தீனா தேவராஜன் இசையில் பாடல்கள் கேட்க இனிமை அதுக்கும் மேல என்.ஓம் ஒளிப்பதிவில் பாடல்கள் பார்க்கவும் அருமை 

பொழுது போகாதவர்களுக்கு இந்தியா பாக்கிஸ்தான் ஒரு நல்ல பொழுது போக்கு படம் ஆனால்......நீங்கள் சிரிக்க வேண்டும் என்றால் கொஞ்சம் உங்கள் சிந்தனையை தொலைத்து விடுங்கள் 
 



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1