google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: உத்தம வில்லன்-சினிமா விமர்சனம்

Sunday, May 03, 2015

உத்தம வில்லன்-சினிமா விமர்சனம்



50 வருடத்திற்கு முந்தைய தமிழ் திரைப்படங்களில் வரும் மெலோ-டிராமா கதைக்கரு ஆனாலும் உலகநாயகர் கமல்ஹாசன் தன் புதுமையான திரைக்கதையாலும் அதற்கு உயிரூட்டும் அவரது நடிப்பாலும் உலக சினிமா தரத்திற்கு எடுத்துச் செல்ல முயற்சி செய்கிறார்.......உத்தம வில்லன் 

வித்தியாசமான கதாப்பாத்திரங்களை உருவாக்கி திறமையான திரைக்கதையால் திரையில் உலாவவிடுகிறார் 

மூளை புற்று நோயால் பாதிக்கப்பட்ட சூப்பர் ஸ்டார் மனோரஞ்சன் (கமல்ஹாசன்) தன் மரணத்திற்கு முன்  வாழ்க்கையில் செய்த சில தவறுகளை சீர்படுத்த நினைத்து......

16 ஆண்டுகளாக மனஸ்தாபத்தில் இருக்கும்  தன் திரைத்துறை வளர்ச்சிக்கு காரணமான இயக்குனர் மார்க்கதரிசி (கே.பாலச்சந்தர்) இயக்கத்தில் தன் மரணத்திற்கு முன் கடைசி கடைசியாக ஒரு படம் நடிக்க அவர் தீர்மானிக்கிறார்.....

(இப்படி நடிகர் கமல்ஹாசன்  அவரது குரு கே.பாலச்சந்தரை  அவரது  கடைசி காலத்தில் செல்லுலாயிடில் இயக்குனாராக பதிவு செய்துள்ளார்)

சாகும் தருவாயில் நடிகர் மனோரஞ்சன் வில்லுப்பாட்டு கதையான 8-ஆம் நூற்றாண்டு சாகாவரம் பெற்ற தெய்யம் கலைக் கூத்தாடி உத்தமன் (கமல்ஹாசன்) இளவரசி (பூஜாகுமார்)யை அடைய நினைக்கும் கோமாளி வில்லன் மன்னன் முத்தரசனை (நாசர்) தந்திரமாக வீழ்த்தும் காமெடி திரைப்படம்   (உத்தம வில்லன்) எடுப்பது நடிகர் கமல்ஹாசனின் திரைக்கதை எழுத்து திறமைக்கு சான்று

இன்னும் அவரது முன்னாள் காதலிக்கும் அவருக்கும் ஒரு மகள் இருப்பதாக காட்சிப்படுத்தி மகளை சமாதானப்படுத்தும் காட்சிகளில் தன் நடிப்பு திறமையையும் வெளிப்படுத்துகிறார்

இதனால் அவரது மாமனாரும் இயக்குனருமான கே.விஸ்வநாத்வுடனும் மனைவி ஊர்வசி மற்றும் ஒரு மகனுடனும் பிரிவு  உண்டாகி......
பிறகு  தன் நோயை அவர்களுக்கு தெரியப்படுத்தும் காட்சிகளில் பார்வையாளர்களின் மனதை தொடுகிறார் மகனிடம் சொல்லும் காட்சி கண்களை கலங்கடிக்கும் 

தனது  காதலியும் டாக்டருமான  ஆண்ட்ரியாவுடன் நெருக்கமாக முகம் சுளிக்க வைக்கும் ஓட்டல் பார்ட்டி காட்சிகளை வைத்து பார்வையாளர்களை முகம் சுளிக்க வைத்தாலும்......
இன்றைய காலகட்டத்தில் நிஜத்தில் சில பிரபல நடிகர்கள் வாழ்க்கையில் இதெல்லாம் சகஜமப்பா என்ற நிலைக்கு நம்மை தள்ளிவிடுகிறார் 

திரைக்கதையில் நிறைய ஏன்? என்ற லாஜிக் ஓட்டைகள்,மாறி மாரி வரும் 2-in-1 திரைக்கதை குளறுபடிகள் இருந்தாலும் அவைகள் எல்லாவற்றையும் மறக்கடித்து நம்மை கதையில் ஒன்றிடச் செய்கின்றன 

எவ்வித சினிமாத்தனங்களுக்கும் இல்லாததால் முன்பகுதி நடுப்பகுதி பின்பகுதி எல்லாப்பகுதியும் ஆமை வேகத்தில் நகர்வதை தவிர்த்திருக்கலாம்

ஆக மொத்தத்தில்...........

தெய்யம்,வில்லுப்பாட்டு,நாடகம்....போன்ற கலைகளை மீண்டும் திரைப்பாடத்தில்  உயிரோட்டமாக காட்சிப்படுத்தி காலக் கரையானால் கலைகளை அழிக்க முடியாது என்றும் கூத்தாடிக் கலைஞன் சாகாவரம் பெற்றவன் என்றும் செய்தி சொல்லும்.........உத்தம வில்லன் 




உத்தம வில்லன்-படம் எப்படி இருக்கு........?
சமுக வலைத்தளங்கள் ட்விட்டர்,பேஸ்புக்..போன்றவைகளில் அதிக எதிர்மறை  விமர்சனங்கள் ஆனால் இணையதளங்களில்...மேலும்

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1