google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: காக்கா முட்டை-சினிமா விமர்சனம்

Saturday, June 06, 2015

காக்கா முட்டை-சினிமா விமர்சனம்



தியேட்டருக்கு வரும் முன்பே பல விருதுகள் பெற்று அறிவுஜீவி ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூன்டியப் படம் ....காக்கா முட்டை 

விருது பெற்ற படம்  என்றாலே ஆமை வேகத்தில் நகர்ந்து அழுகுணி கழுத்தறுக்கும் படம் என்று நினைக்கும்  வெகுஜன ரசிகர்களையும் ஆச்சரியமூட்டும் விதத்தில் இதயத்தை வருடும் ரசனையுடன் அசைபோடும் யதார்த்தமான சந்தோஷக் காட்சிகளுடன்  அழகான,ஆழமான உணர்வுடன் அசல் சிந்தனை   மிகுந்த படமாக தந்துள்ளார் அறிமுக இயக்குனர் மணிகண்டன் 

சேரியில் வாழும் ஒருவேளை சோற்றுக்கே வழியில்லாத இரண்டு சகோதரர்கள் இன்றைய மேல்தட்டு மனிதர்களின் ஸ்டைலிஸ் சாப்பாடு பிட்சா சாப்பிட  ஆசைப்பட்டு அதற்காக அவர்கள் எடுக்கும் முயற்சியாக காட்சிகளால் கதை சொல்லப்படுகிறது 

இயக்குனர் மணிகண்டன் ஒவ்வொரு கதாப்பாத்திரத்தையும் கவனமுடன் கையாண்டுள்ளது அவர் அமைத்துள்ள காட்சிகளில் தெரிகிறது சிறுவர்களின் பாட்டி பேரன்களுக்காக தோசையில் பிட்சா சுடும் காட்சி ஒன்றே சாட்சி

சிறுவர்கள்  ரமேஷ்-விக்னேஷ் இவர்களின் யதார்த்தமான இயற்கையான அப்பாவித்தனமான நடிப்பு வெளிப்பாடு அவர்களுக்கு கிடைத்த தேசிய விருதுகளை நியாயப்படுத்துகிறது

சிறுவர்களின் பாட்டியாக நடித்துள்ள அம்மையார் நடிக்கவில்ல அவரது உரையாடல்,டயலாக் டெலிவரி,உடல்மொழி அனைத்திலும்  நம்ம பக்கத்து வீட்டு பாட்டியாகவே தெரிகிறார்

ஜெயிலில் இருக்கும் தனது கணவனை பெயிலில் எடுக்க போராடும் பெண்மணியாகவும் சிறுவர்களின் தாயாகவும் நடித்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் இதுவரை நடித்த படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு தெரிகிறார் 

மற்றும் ஜோ மல்லூரி,சூது கவ்வும் ரமேஷ்....இவர்களுடன் ஒரு நாய்க்குட்டியும் கதாப்பாத்திரங்களாக மாறி உள்ளனர் நீண்ட வருடங்களுக்குப் பிறகு சிம்பு திரையில் தோன்றுகிறார்

ஜி.வி.பிரகாஷின் BGM படத்தின் கதையை இனிமையாக நகர்த்துகிறது மறைந்த எடிட்டர் கிஷோரின் வேலைப்பாடு படத்திற்கு வேகம் கூட்டுகிறது மணிகண்டன் ஒளிப்பதிவில் சென்னை ஒளிர்கிறது 




ஆக மொத்தத்தில்.............

சொல்ல வந்த கதையை ஆரம்பம் முதல் கடைசி வரை தடம் புரளாமல் ஒரே சீராகச் சொல்லும் .........
காக்கா முட்டை  -  கூமுட்டை அல்ல fake-முட்டையும் அல்ல ஒரிஜினல் முட்டை நல்ல முட்டை 



பார்வையாளர்களின் மதிப்பீடு............


காக்கா முட்டை -படம் எப்படியிருக்கு...?




படம் பார்த்து வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி...........

  காக்கா முட்டை-ட்விட்டர்கள் விமர்சனம் 


 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1