google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: சகலகலா வல்லவன்-சினிமா விமர்சனம்

Wednesday, August 12, 2015

சகலகலா வல்லவன்-சினிமா விமர்சனம்


ஜெயம் ரவி-அஞ்சலி-திரிஷா-பரோட்டா சூரி கூட்டணியில்  இயக்குனர் சுராஜ் புல் பாட்டலில் அடைத்துள்ள ஆப் காமெடி,காதல் போதை சரக்கு....சகலகலா வல்லவன் அப்பாடக்கர்  

ஏதோ மதுவிலக்கு விழிப்புணர்வு படம் போல் டாஸ்மாக் கடையை அகற்ற கலெக்டர் மகளை கையை பிடித்து ஜெயம் ரவி இழுத்ததும்  கலெக்டர் கடையை மூடுவது போல் துவங்கும் சகலகலா வல்லவன் படத்தின் கதையாக....

கிராமத்தில் அஞ்சலியை விரட்டி விரட்டி காதலிக்கும் ஜெயம் ரவி சந்தர்ப்பவசத்தால் அப்பா பிரபுவின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு நகரத்து அத்தை மகள் திரிஷாவை திருமணம் செய்ய.....

ஜெயம் ரவியின் கிராமத்து கட்டுப்பெட்டி தனத்தை வெறுக்கும் திரிஷா அவருடன் வாழ மறுத்து விவாகரத்து கேட்க......

ஜெயம் ரவி திரிஷாவை ஒரு மாதத்துக்கு தன கிராமத்துக்கு அழைத்து வருகிறார் 

திரிஷா மனம் திருந்தி ஜெயம் ரவியுடன் இணைந்து வாழ்ந்தாரா....? என்பதை காதலும் காமேடியுமாக படம் காட்டுகிறார் இயக்குனர் சுராஜ் 

முன்பாதியில் பரோட்டா சூரியின் அத்தை மகள் அஞ்சலியை  ஜெயம் ரவி காதலிக்கும் காட்சிகள் செம காமெடி கலாட்டாவாகஇருக்க......
பின்பாதியில் ஜெயம் ரவி-திரிஷா-விவேக் காமெடி சொரியாசிஸ் வர்ர மாரி இருக்கு 

எல்லா படத்திலும் ஒரே ஸ்டீரியோ டைப்பாக வந்தாலும் போலி என்கவுண்டர் போலிஸ்  ஜான் விஜய், டெர்ரர் போலிஸ் அதிகாரி நான்கடவுள் ராஜேந்திரன்  காமெடிக் காட்சிகள் ஆறுதல்.........

பாடல்கள் குத்துப்பாட்டு ராகம்...... ரசிக்கலாம் வசனங்கள் 
(கிராமத்து பெண்களுக்கு பேய் பிடிக்கும் நகரத்து பெண்களுக்கு நாய் பிடிக்கும்) அவ்வப்போது சரவெடி பட்டாசு

ஆக மொத்தத்தில்......

ஜெயம் ரவி-பரோட்டா சூரி காமெடிக் கூட்டணியில்  சகலகலா வல்லவன்......
கொஞ்சம் கடிக்கும் நிறைய சிரிக்க வைக்கும் 


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1