google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: வாலு-சினிமா விமர்சனம்

Friday, August 14, 2015

வாலு-சினிமா விமர்சனம்

பல இழுபறி உடன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிம்பு-ஹன்ஷிகா நடிப்பில் வந்திருக்கும் வாலு.....
சிம்பு படங்களுக்கே உரிய காதல் கிளுகிளுப்பு,கவுச்சை வசனங்கள்,பன்ச் டயலாக்,அலப்பறை சண்டை....என்று முழுக்க முழுக்க சிம்பு படமாக வந்துள்ளது 

சந்தானத்துடன் வெட்டியாக பொழுது போக்கும் சிம்பு ஹன்ஷிகா மீது காதல் கொள்ள அம்மணியோ அவளது முறைமாமன் கந்துவட்டி,கட்டபஞ்சாயத்து தாதா ஆதித்தியாவை திருமணம் செய்ய இருப்பதாக  சொல்ல......
சிம்பு தன காதலி ஹன்ஷிகாவுடன் நட்பாக பழகி தாதா ஆதித்தியாவை வீழ்த்தி எப்படி காதல் வெற்றி அடைகிறார் என்பதை.....

இயக்குனர் விஜய் சுந்தர் ஆழமான கதைக்கரு இல்லாவிட்டாலும் காதல்,காமெடியுடன் நறுக் வசனங்களால் படம் காட்டுகிறார் முன்பாதியில் ஹை-ஸ்பீடில்  ஆடும் வாலு....
 பின்பாதியில் ரொம்ப இழுவையுடன்  சொதப்பலாக  வாலை ஆட்டுகிறது கொஞ்சம் நறுக்கியிருக்கலாம் 

சிம்புவிடம் எப்போதும் உள்ள அந்த டெம்போ இந்தப் படத்தில் அதிகமாக உள்ளது சந்தானத்தின் கலக்கல் காமெடி படத்துக்கு பெரிய கிப்ட் ஹன்ஷிகாவின் கவர்ச்சியான அழகு  படத்தின் ஈர்ப்புவிசை 

வில்லனாக ஆதித்தியாவின் நடிப்பு படு பயங்கரம் ஆடுகளம் நரேன்,விடிவி கணேஷ், பிரமானந்தம்.....நடித்துள்ளார்கள் 

பாடல்கள் கேட்கும் படியும் பார்க்கும் படியும் உள்ளன தாறுமாறு....பாடலில் சிம்புவின் எம்ஜிஆர்,ரஜினி,அஜித்...கெட்டப் தாறுமாறாக உள்ளது எல்லாவற்றுக்கும் மேலாக சண்டைக்காட்சிகள் பிரமாதம் 

ஆக மொத்தத்தில்........

இரண்டு நட்சத்திர நடிகர்களின் ரசிகர்கள் ஆதரவும் கிடைக்க டைட்டிலில் விஜய்க்கு நன்றியும் பாடலில் அஜித் கெட்டப்பும் என்று படம் காட்டும் சிம்புவின் வாலு......... A to Z சிம்புவின் படமே 

   

படம் பார்த்தவர்களின் மதிப்பீடு...........
          வாலு-படம் எப்படியிருக்கு....?



படம் பார்த்துவாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1