google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: வாசும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க-விமர்சனம்

Saturday, August 15, 2015

வாசும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க-விமர்சனம்


ஆர்யா-சந்தானம் காமெடி கூட்டணியிலும் ஆர்யா-தமன்னா காதல் கூட்டணியிலும் வந்துள்ள   வாசும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படத்தில் காதலும் காமெடியும் எப்படியிருக்கு...?

ஆர்யா (வாசு) - சந்தானம் (சரவணன்)  இருவரும்  சிறு வயது முதல் நண்பர்கள் முதலில் சந்தானத்துக்கு பானுவுடன் திருமணம் நடக்கிறது திருமணத்தில் ஆர்யா செய்யும் காமெடி கலாட்டாவில் வெறுப்படைந்த பானு சந்தானத்திடம் ஆர்யா நடப்பை முறித்துக் கொள்ள கட்டாயப்படுத்துகிறாள் 

சந்தானமோ ஆர்யாவுக்கும் ஒரு திருமணத்தை நடத்தி விட்டால் சரியாகிவிடும் என்று தமன்னாவை காதலிக்க ஏற்பாடு செய்கிறார் ஆர்யாவும் தமன்னா மீது காதலில் விழ....அம்மணியோ ஆர்யாவை காதலிக்காமல் டிமிக்கி கொடுக்கிறாள் 

ஆர்யா-தமன்னா திருமணம் நடந்ததா....? ஆர்யா-சந்தானம் நட்பு நீடித்ததா....? என்பதை.....

இயக்குனர் ராஜேஷின் முந்தையப் படங்கள் வரிசையில் டிட்டோவாக வந்துள்ளது வாசும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க டாஸ்மாக் "கப்"படிக்கும் வார்த்தை விளையாட்டை தவிர புதுசா  சிரிக்க எதுவும் இல்லை 

ஆர்யாவின் நடிப்பில் பெரிய முன்னேற்றம் எதுவும் இல்லை சந்தனத்தின் டைமிங் காமெடியில் பழைய நெடி வீசுது தமன்னா.....கொலு பொம்மை 


வாசும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க-என்பதை விட வாசும் சரவணனும் ஒண்ணா குடிச்சவங்க என்று சொல்லும் அளவுக்கு.......
அரசு கஜானாவை நிரப்ப டாஸ்மாக்-க்கு ஆதரவாக வந்துள்ள விளம்பரப் படம் போல் தெரிகிறது  

ஆக மொத்தத்தில்........

காதலும் காமெடியும் என்று சொல்லி டாஸ்மாக் குடியும் குடித்தனமுமாக வந்துள்ள VSOP (வாசும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க)....
சிலருக்கு பிடிக்கும் சிலருக்கு கடிக்கும் 


படம் பார்த்தவர்கள் என்ன சொல்கிறாங்க...?


 வாசும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க
படம் எப்படியிருக்கு.....?



வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி.....



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1