google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: திரிஷா இல்லைனா நயன்தாரா-சினிமா விமர்சனம்

Sunday, September 27, 2015

திரிஷா இல்லைனா நயன்தாரா-சினிமா விமர்சனம்


ஜீவி பிரகாஷ் பிறக்கும் போதே பக்கத்து பெட்டில் ரெண்டு பெண்குழந்தைகளோடு பிறந்த அதிர்ஷ்ட ராஜா. வளர வளர (?) ஒன் பை ஒன்பை ஒன்னாக லவ் பண்ணுகிறார் .
 ஸ்கூல் படிக்கையில கயல் ஆனந்தியை லவ் பண்ணி மேட்டர் முடிக்க படாத பட்டு சொதப்பி காதல் புட்டுக்கொள்ள.....
 அடுத்த செகன்டில் மனிஷாவை லவ் பண்ண ஆரம்பித்து அவரையும் மேட்டர் முடிக்க படாத பாடுபட்டு சொதப்பி கழட்டிக்கொள்ள......

 மீண்டும் கயல் ஆனந்தியை லவ் பண்ணுகிறார் 
.கடைசியாக யாரையாவது மேட்டர் முடித்தாரா ?
மேற்கண்ட தத்துவார்த்தமான அருமையான கதைதான் 
இந்த திரிஷா இல்லைனா நயன்தாரா!!!!!!!!!!
முதலில் இது ஒரு கதை என எழுதிய இயக்குனர் தம்பிக்கும் அதை கதைதான் என நம்பிய பொரடியூசருக்கும் ஆழ்ந்த நன்றிகள்.
இன்றைய தலைமுறையினரின் காதல் கதையை சொல்கிறேன் பேர்வழி என படம் முழுக்க குடி குடி குடி பின்பு செக்ஸ், இரட்டை அர்த்தம்லாம் இல்லாமல் நேரடியான கெட்ட கெட்ட வார்த்தைகள். இப்பிடியே போங்க கிழிஞ்சிரும் டைரக்டர் தம்பி..
ஜிவி பிரகாஷ் ..  நடிப்புன்னா கிலோ என்ன விலைனு கேக்குற அளவு நடித்துள்ளார். பல இடங்களில் நடிகர் திலகம் சிவாஜிக்கே டப் கொடுக்கிறார். (நல்ல வேல சிவாஜி உயிரோட இல்ல) 

ஆனந்தி ,மனிஷா.........
 இது மாதிரியான ஹீரோயின் பாத்திரப்படைப்பு உலக சினிமாவிற்கே புதியது. நல்லா வருவிங்க பாப்பாசு.
சிம்ரன் ரீ என்ட்ரி . அதுக்கு இந்தம்மா வீட்லயே இருந்துருக்கலாம். டோட்டல் வேஸ்ட்.
விடிவி கணேஷ்க்கு.....
 வழக்கம் போல காட்சிக்கு காட்சி பொம்பளைகள கேவலமா பேசிட்டு போறார். கருமம்.

சரி திரைக்கதையாவது பரவாயில்லையா என பார்த்தால் அது எல்லாத்தை விட கேவலம் . பார்த்த காட்சிகளே திரும்ப திரும்ப வந்து கடுப்பேத்துகிறது.
இப்ப ஒரு ட்ரென்ட் உருவாகிருக்கு. படம் நெடுக பசங்கள்லாம் ஒன்னா சேந்து பொண்ணுகள திட்டிட்டு இருக்குற மாதிரி படம் எடுத்தா பாக்குற பசங்க கைதட்டுவாங்கனு.. அது இதுலயும் தொடர்கிறது .ஆனா இதுல கேவலத்தின் உச்சமாக பொண்ணுக எல்லாமே அயிட்டம்தான்ங்குற ரேஞ்சுக்கு பிதற்றல்கள்.
குடும்பம் குட்டியோட படத்துக்கு போனவன் நிலைமைலாம் அந்தோ பரிதாபம்.
இலைமறை காயாக பேசவேண்டிய விசயத்தை பச்சையாக பேசினால் எரிச்சல் தான் வரும். 
அறிமுக இயக்குனர்களே நீங்க தமிழ் சினிமாவை ஒரு படி உயர்த்தலைனாலும் பரவாயில்லை..அதை பாதாளத்துல தள்ளி பல்ல காட்டாதீர்கள்.
நன்றி-வடிவேல் fb


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1