google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: புலி-சினிமா விமர்சனம்

Thursday, October 01, 2015

புலி-சினிமா விமர்சனம்

மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளிவந்துள்ள நடிகர் விஜய்-யின் புலி திரைப்படம்....
போக்கிரி,கில்லி போன்று ரியல் சமுதாய அதிரடி படமாக இல்லாமல் வித்தியாசமான மந்திர சக்திகள் நிறைந்த மனிதர்கள் வாழும் மாய உலகத்தை படம்காட்டுகிறது 


அந்த மாய சக்தி உள்ள ராணி (ஸ்ரீதேவி) ஆளும் வேதாளக் கோட்டையின் தளபதி (சுதிப்) யால் அடிமையாக்கப்பட்ட கிராம மக்களை புலி (விஜய்) என்ற இளைஞன்   பல இன்னல்களை சந்தித்து எப்படி காப்பாற்றுகிறான் என்பதே புலி படத்தின் கதை

படத்திற்கு படம் அழகாகவும் இளமையாகவும்  தோன்றும்  நடிகர் விஜய் இந்தப்  படத்திலும் இரண்டு வேடங்களில் தோன்றுகிறார் 

நீண்ட இடைவெளிக்கு பிறகு ஸ்ரீதேவி  மாய ராஜ்யத்தின் ராணியாக வருகிறார் மாய உலக ராணி என்பதால் மேக்கப் அள்ளி பூசி மெழுகி இருக்கிறார்கள் 

தளபதியாக வரும் சுதீப்.....கொடூர வில்லனாகநடித்துள்ளார் ஸ்ருதி ஹாசனும் ஹன்சிகாவும் படத்துக்கு தேவையான கவர்ச்சி ஊட்டுகிறார்கள்  பிரபு,தம்பி ராமையா,ரோபோ சங்கர்,இமான் அண்ணாச்சி,சத்யன்  ஆடுகளம் நரேன் என்று பலர் நடித்துள்ளனர் 

இயக்குனர் சிம்புதேவன்திரைக்கதையில் கவனம் செலுத்தி முன்பகுதியில் கொஞ்சம் விறுவிறுப்பை ஏற்றியிருக்கலாம் 

நிறைய காட்சிகள் அவரது இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் படத்தையும் Brave Heart ஹாலிவுட் படத்தையும்  நினைவூட்டுகிறது 

படத்தின் சிறப்பான காட்சிகளாக வரும் லில்லிபுட் குள்ள மனிதர்கள்,அசூர ஆமை..போன்றவைகள் சிறுவர்களை கவரும் ஆனாலும் பெரியவர்களை பெருமூச்சு விடவைக்கும் இழுவையான நிறையக் காட்சிகள் நறுக்கி இருக்கலாம் 

ஹாலிவுட் படங்களில் வருவது போன்ற கலை வேலைப்பாடு நிறைந்த காட்சி அமைப்புகள்,பழங்குடி காடுகள்,ராச்சியம்,VFX வேலைபாடுகள்,கிராபிக்ஸ் காட்சிகள் படம் காட்ட முயற்சி செய்துள்ளனர்

  ஆக மொத்தத்தில்........

நடிகர் விஜய்-யின் புலி திரைப்படம்....
சில வித்தியாசமான விஷுவல் காட்சிகளால் மட்டுமே அவரது ரசிகர்களைத் தவிர மற்றவர்களை கவரும்  

படம் பார்த்தவர்களின் மதிப்பீடு........`

விஜய்-யின்....
 புலி படம் எப்படி இருக்கு....?




படம் பார்த்து வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி........

 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1