google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: 10 எண்றதுக்குள்ள - சினிமா விமர்சனம்

Wednesday, October 28, 2015

10 எண்றதுக்குள்ள - சினிமா விமர்சனம்


நடிப்புக்காக உடலை வருத்திக் கொள்ளும் நடிகர் சீயான் விக்ரம் சாதாரன நடை,உடை ஒப்பனையில் அசாதாரன கார் ஓட்டுனராக நடித்துள்ள படம்... 
10 எண்றதுக்குள்ள

உத்திரகாண்டில் உள்ள முசூரியில் ஒரு மலைக்கிராமத்தில் கீழ்ஜாதி மக்கள் உயர் ஜாதியினரால் கொலை செய்யப்படுவது  போல் துவங்கும்...
10 எண்றதுக்குள்ள....படத்தின் கதையாக 

சென்னையில் அநாதை இல்லத்தில் வசிக்கும் சமந்தாவை கடத்தி முசூரிக்கு கொண்டு வர  வில்லன்கள் ராகுல்தேவும் அபிமன்யுசிங்கும் குட்டி கடத்தல்காரன் பசுபதியிடம் உத்தரவு இடுகிறார்கள் 

கடத்தப்பட்ட சமந்தாவை ஒரு வெளிநாட்டு காருடன் முசூரிக்கு கொண்டுசெல்ல திறமையாக காரோட்டும் டேர்டெவில் டிரைவர் விக்ரம்  பசுபதியால் நியமிக்கப்படுகிறார் 

சமந்தாவுடன் முசூரியை அடைந்த விக்ரம் எதற்காக சமந்தாவை கடத்தி வந்தார்கள் என்பதை அறிந்து....

 தந்திரமாக போராடி வில்லன்களை அழித்து சமந்தாவை காப்பாற்றி.....

அப்படியே வடமாநிலத்தில் நிலவும் ஜாதிக்கொடுமைக்கும் முற்றுபுள்ளி வைத்து மீண்டும் சென்னை திரும்புவதை.........

இயக்குனர் விஜய் மில்டன் சமந்தாவின் உருவத்தில் ஒரு ட்விஸ்ட் வைத்து படம் காட்டுகிறார்  

10 எண்றதுக்குள்ள....படத்தின் பின்பகுதியில்  இயக்குனர் படத்தின் ட்விஸ்ட்டை உடைத்து நம்மை திக்கு முக்காடச் செய்கிறார் மற்றபடி பசுபதியின் காமெடி வில்லத்தனம்,விக்ரமின் அதிரடிச் சண்டைகள், சமந்தாவின்  கார் ஓட்டும் உரிமம் வாங்கப் போராடும் நகைச்சுவை....என்று படத்தின் பெரும் பகுதி பொழுதுபோக்கு படமாகவே நகர்கிறது 

பாடலும் இசையும் படம் பார்ப்பவர்களை பரவசமூட்ட......
மழைக்காட்சிகள்,ரோடோர பயணக் காட்சிகள் படமாக்கப்பட்ட விதம் கண்களுக்கு குளிர்ச்சி 

ஆக மொத்தத்தில்...........

வடமாநிலத்தில் நிலவும்  பயங்கர ஜாதிக் கொடுமைகளை சித்தரிப்பது போல் போலியாக படம்காட்டினாலும்... 
10 எண்றதுக்குள்ள- படம் அதிரடி சண்டைக்காட்சிகள்,கார் ஓட்டும் சாகசக் காட்சிகள்,நேபாள மழைக்காட்சிகள் என்று கலகலப்பாக உள்ளது 






இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1