google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: கெத்து-சினிமா விமர்சனம்

Saturday, January 16, 2016

கெத்து-சினிமா விமர்சனம்


முழுக்க த்திரிலர் படமாகவும் இல்லாமல் முழுக்க அதிரடிப் படமாகவும் இல்லாமல் தொத்தல் திரைக்கதையால் தள்ளாடி கொஞ்சமே கெத்து காட்டுகிறது உதயநிதியின்.... கெத்து  

குமுளியில் நேர்மையும் கண்டிப்புமான பள்ளிக்கூட உடற்பயிற்சி ஆசிரியர் சத்தியராஜ் தொல்லை தரும் மதுக் குடிமகன்களை விரட்டியடிக்க....

இதனால் மதுப்பார் உரிமையாளர் மைம் கோபிக்கும் சத்தியராஜ்க்கும் உண்டாகும் மோதலில் சத்தியராஜ் மகனும் தனியார் நூலகம் நடத்தும் உதயநிதி தட்டி கேட்கிறார் 

இதற்கிடையில் பணத்திற்காக கொலை செய்யும் விக்ராந்த் ஒரு விஞ்ஞானியை கொலை செய்ய குமுளி வருகிறார் 

திடிரென்று ஒருநாள் மைம் கோபி மர்மமான முறையில் கொலை செய்யப்பட சந்தேகத்தில் சத்தியராஜ் கைது செய்யப்படுகிறார் 

உண்மையில் மைம் கோபியை கொலை செய்தது யார்...? என்று கண்டுபிடித்து உதயநிதிசத்தியராஜை  எப்படி மீட்கிறார்...? என்பதை
இயக்குனர் (கொஞ்சம்) கெத்தாக  படம் காட்டுவதே .... கெத்து  


உதயநிதி......கெத்தாக இருக்க படம் முழுக்க முறைத்துக் கொண்டே உம்னு நடிக்கிறார் கவர்ச்சிக்காக அவ்வப்போது அரை டவுசர் எமி ஜாக்சன் வந்து வந்து போகிறார் விக்ராந்த்.....பார்வையாலேயே மிரட்டுகிறார் சத்தியராஜ்...மட்டுமே எப்போதும் போல் கெத்தாக நடித்துள்ளார் 

ஆக மொத்தத்தில்........

விறுவிறுப்பான  திரைக்கதை இல்லாமல் இருந்தாலும் கதையோடு ஒன்றியபின்னணி இசை, அட்டகாசமான ஒளிப்பதிவு,வித்தியாசமான கதைக்களம்  போன்றவைகளால் உதயநிதி நடித்த கெத்து....கொஞ்சம் கெத்து காட்டுகிறது

பார்வையாளர்கள் மதிப்பீடு........

கெத்து-படம் எப்படியிருக்கு....?





படம் பார்த்து வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி........




இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1