வீறு கொண்டு வாழ்ந்த இனம் தமிழரடா!-இன்று
வீதியிலே வேதனையில் அலையுதடா!
சீர் கொண்டு வாழ்ந்த இனம் தமிழரடா -இன்று
செங்குருதி சிந்தித்தான் அலையுதடா!
விதியென்று வாழ்வுதான் முடிந்திடுமோ?-செய்த
சதியிங்கு நெஞ்சை விட்டு மறைந்திடுமோ?
விதியொன்று செய்திடவே எழுந்தோமடா!-நல்
வழியொன்று கண்டிடவே வந்தோமடா!
நெருப்பிலிருந்தும் ஒரு பறவை பிறக்குமடா!-அதை
நினைக்கும்போது எமக்கு ஏது மரணமடா!
விலைபோகும் வீனர் வெற்றுக் கூட்டமடா!-அதை
களையெடுக்கும் நாம் வெற்றிக் கூட்டமடா!
விளை நிலங்கள் வறண்டு போகும் தாகமடா!-அது
பாலை நிலம் ஆகுமுன்னே தீருங்கடா!
சுரண்டித்தான் வாழ்ந்தது இங்கே போதுமடா!-இனி
சுரண்டத்தான் நாட்டில் ஏதும் இல்லையடா!
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |