google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: அட்டகத்தி முதல்வர்கள்

Monday, August 27, 2012

அட்டகத்தி முதல்வர்கள்



நாளைய முதல்வர்
நான்தான் நான்தான் என்று
தேர்தல் நேரத்தில் மட்டுமே
தேம்பிக்கொண்டிருந்தார்கள் 

இப்போதெல்லாம்

பிறந்த நாளிலும்
சுவரொட்டி அடித்து
நாசப்படுத்துகிரார்கள்
நகரத்து சுவர்களை...

இன்று பிறந்த நாள் காணும்
நாளைய முதல்வரே
வாழ்த்த வயதில்லை
வணங்குகிறோம்

அருகிலேயே
ஒட்டியிருந்தது
அட்டகத்தி
சினிமா சுவரொட்டி...

திரைப்படமோ...
காதலில்
தோல்வி அடைந்தாலும்
மீசையில் 
மண் ஒட்டாதாது போல்
அடுத்த காதலை ஆரம்பிக்கும்
அட்ட கத்தி
காதலன் போல்....  

இவர்களும்  
அட்ட கத்தி
முதல்வர்களோ?  
இந்த தேர்தல் போனால் 
அடுத்த  தேர்தல்?
ஆடி  போனால் ஆவணி....
****************************


Thanks-YouTube-Published on Aug 16, 2012 by isaithenral
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1