google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: March 2014

Monday, March 31, 2014

குக்கூ-சாருவின் பார்வையில்.....


குக்கூ படத்தை பாராட்டி வந்த விமர்சனங்களே அதிகம் இருக்க... எழுத்தாளர் சாரு பார்வையில் அய்யோ...பாவம்  விமர்சனம் என்றப் பெயரால் குக்கூவை  பச்சையாக விழுங்கி அருவெறுப்பை வாந்தி எடுத்துள்ளார் .........?

எழுத்தாளர் ராஜுமுருகனின் வட்டியும் முதலும் பிடிக்காது என்ற நிலையிலும்  அவர் படத்தில் வன்முறைக் காட்சிகள்  இருக்காது என்ற எண்ணத்தில்  குக்கூ படம் பார்த்த எழுத்தாளர் சாருவின் விமர்சனத்தில் வன்முறை........அருவருப்பு....அருவெறுப்பு 

குக்கூவில் வன்முறை இல்லைதான்.  ஆனால் அது ஒரு fetish படம்......( fetish-க்கு அவர் தரும் விளக்கம் ஆபாசமாக இருப்பதால் இங்கே தவிர்க்கப்பட்டுள்ளது)... 

குற்றவாளிகளிடமிருந்து உண்மையை வரவழைப்பதற்காக மலத்தை மூத்திரத்தில் கரைத்துக் கொடுத்து சித்ரவதை செய்வார்கள் என்று சில நாவல்களில் படித்திருக்கிறேன்.  கேள்விப்பட்டும் இருக்கிறேன்.  

குக்கூவில் ராஜு முருகன் அதைத்தான் செய்திருக்கிறார்........ கண்பார்வையற்ற தமிழ் என்ற பாத்திரமாக நடித்திருப்பவர் இரண்டரை மணி நேரம் செய்யும் fetish காரியங்கள் தான் குக்கூ

குக்கூ நாயகன் தினேஷ் நடிப்பை பற்றி.....
குக்கூவில் தமிழ் இரண்டரை மணி நேரத்துக்கு காக்காய் வலிப்பில் துடிக்கிறார்.  அதன் பெயர் நடிப்பாம்!  


குக்கூ  படம் பற்றிய அவரது கணிப்பு......
ஒரு வணிக சினிமாவில் கூட சில காட்சிகளைப் பார்த்தால் கண் கலங்கி விடும்.  ஆனால் குக்கூவில் அருவருப்பும் ஆபாச உணர்வும் தான் மிஞ்சுகிறதே தவிர நெகிழ்ச்சி வருவதில்லை. குக்கூ போன்ற படங்கள் ஒரு சமூகத்தின் கலாச்சார சீரழிவின் அடையாளம்.....

இன்றைய சமுதாயத்தில் ஒரு எழுத்தாளராக உலா வரும் சாரு  இப்படி விஷத்தை அவரது வலைதளத்தில் வாந்தி எடுத்துள்ளார்....... 
அவரது  வார்த்தையில் சொன்னால்...
இது ஒரு fetish விமர்சனம் இவர் ஒரு fetish எழுத்தாளர்

காசு கொடுத்து படம் பார்த்த ஒவ்வொருவருக்கும் அப்படத்தை விமர்சிக்கும் கருத்து சுதந்திரம் இருப்பது உண்மையே மறுப்பதற்கில்லை..ஆனாலும் குக்கூ-சாருவின் பார்வை குருட்டுப் பார்வை

ஆனால்...
எனக்கென்னவோ எப்போதோ படித்த இதுதான் நினைவுக்கு வருது....
A bad writer is a writer who always says more than he thinks.(Walter Benjamin,Selected Writings: Volume 3)

குக்கூ படம் பற்றிய நமது வலைப்பதிவின் விமர்சனம்......
குக்கூ-சினிமா விமர்சனம் (வாசிக்காதவர்களுக்காக...)
குக்கூ படம் எப்படியிருக்கு...? (கருத்துக்கணிப்பு)
 

Sunday, March 30, 2014

இனம் அல்ல இழிவு-வைகோவின் அதிரடி விமர்சனம்

இங்கே சந்தோஷ் சிவனின் இனம் படம் பற்றிய வைகோவின் அதிரடி விமர்சனமும் ஆவேச  அறிவிக்கையும்...இனம்-தடை செய்யப் படவேண்டிய திரைப்படமா...? என்ற கருத்துக்கணிப்பும்

-ஈழ விடுதலையை கொச்சைபடுத்தி பயங்கரவாதி என்ற படம் எடுத்தவர் இனம்  இயக்குனர் சந்தோஷ் சிவன் 

- சின்னஞ் சிறுவர்களும், சிறுமிகளும் கட்டாயமாக புலிப்படையில் சேர்க்கப்படுவதாகவும் பாலியல் இச்சைக்கு ஆட்படுவதாகவும் காட்டப்படுகிறது 

-பாடசாலையில் விடுதலைப்புலிகளின் காணொளி காட்டப்படுவது 

-ஒர் இளம் தமிழ் பெண் கற்பழிக்கப்பட்டு கொச்சையாக பச்சையாக இச்சையாக காட்டப்பட்டுள்ளது 

-ஒரு புத்த பிச்சு தன் நீர் குடுவையில் சிக்கிய மீனை மீண்டும் நீரில் விடும் மனிதாபியாக காட்டப்படுகிறது 

இளம் தமிழர்களே, மாணவர்களே சிந்தியுங்கள். இந்தத் திரைப்படம் தமிழகத்துத் திரையரங்கங்களில் ஓடுவது தமிழர்களின் முகத்தில் காரி உமிழப்படும் அவமானம் என்பதை உணர வேண்டுகிறேன்

இனம்-திரைக்கலை என்ற பெயரால் தமிழ் இனத்தின் நெற்றியில் மிதிக்க முற்படுவதும், களங்கச் சேற்றைப் பூச முனைவதும் ஈனத்தனமான வேலையாகும்

அதனால்  தமிழ்நாட்டில் உள்ள திரையரங்க உரிமையாளர்கள் இனம் படத்தை திரையிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறார் 

அண்ணன் வைகோ  இனம் படம் பற்றி லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்திருக்காரு எப்படினா...? சிங்கம்... சாரி..புலி ஒன்னு புறப்பட்டதே....என்ற கதையாக ஆனால்...நாம் தமிழர் என்று ஒருவர் மார்தட்டுவாறே அண்ணன்...சீமான்...அவரைக் காணவில்லை...

அட..போங்கப்பா நீங்களும் உங்க அரசியலும் சினிமாவும் என்று எங்க ஊர் மண்ணாங்கட்டி குப்புற படுத்துக்கிட்டு குபேரக் கனவில்.....

உங்கள் பார்வையில்.........


இனம் தடை செய்யப் படவேண்டிய படமா....?



வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி....முடிவு-4/4/2014 


Saturday, March 29, 2014

இனம் Vs நெடுஞ்சாலை-உங்கள் விருப்பம் எது?


சமீபத்தில் திரைக்கு வந்துள்ள  சந்தோஷ் சிவனின்  இனம் படமும் கிருஷ்ணாவின் நெடுஞ்சாலை படமும் உண்மை நிகழ்வுகளை படம் காட்டுகின்றன....... இனம் Vs நெடுஞ்சாலை-உங்கள் விருப்பம் எது? கருத்துக்கணிப்பு 

இனம் திரைப்படம்- ஓர் இனத்தின் அழிவாக நமது ஈழத்தமிழர்களின் அவலத்தை உண்மை நிகழ்வுகளை கவித்துவமாக படம் காட்டுவதாக சொல்கின்றன விமர்சனங்கள் (பிரச்சனைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டதாக லிங்குசாமி சொல்கின்றார்)

நெடுஞ்சாலை திரைப்படம்- 1980-1986 காலகட்டத்தில் மதுரை பெரியகுளம் திண்டுக்கல் பகுதியில் வாழ்ந்த லோடு லாரிகளில் திருடிப் பிழைத்த தார்ப்பாய் முருகன் என்ற கொள்ளைனின் வாழ்க்கையில் நடந்த உண்மை நிகழ்வுகளை  காவியமாக படம் காட்டுகின்றது   

என் பதிவுலக நண்பர்களே! நீங்கள் இரண்டு படத்தையும் பார்த்தவராக இருந்தாலும் அல்லது இனிமேல் பார்க்க தீர்மானித்து இருந்தாலும்........

இனம் Vs நெடுஞ்சாலை-உங்கள் விருப்பம் எது?



வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி....முடிவு-3/4/2014

Friday, March 28, 2014

நெடுஞ்சாலை-சினிமா விமர்சனம்

பாசம்,காதல்,நட்பு,துரோகம்...போன்றவைகளை பிரமிப்பூட்டும் காட்சிகளாக காட்டி படம் பார்ப்போருக்கு புல்லரிக்கும் ஒரு வித்தியாசமான  த்திரிலிங் அனுபவத்தை தருகின்றது....இயக்குனர் கிருஷ்ணாவின்  நெடுஞ்சாலை திரைப் படம் 

நெடுஞ்சாலையில் பயணிக்கும் டில்லி  செல்லும் லோடு லாரியில் ஒரு முதியவர் தன் கூட்டாளி  தார்ப்பாய் முருகன் என்ற ரோடு கொள்ளையனின் வாழ்க்கை .பற்றிய   பிளாஷ்-பேக் காட்சிகளாக  படம் நகர்கின்றது....

தார்ப்பாய்  முருகன் (ஆரி) தன் கூட்டாளிகள் கோழி,குரு,சேட்டு மூவருடன் நெடுஞ்சாலையில் வரும் லாரிகளில் உள்ள சரக்குகளை கொள்ளையடித்து வாழ்கின்றான் அவர்களுக்கு ஒரு மலையாள  சேட்டன் (சலீம் குமார்) முதலாளி 

அதே நெடுஞ்சாலையில் ரோட்டோர தாபா ஓட்டல் நடத்தும் மலையாளி பெண் மங்கா (ஷிவிதா) வுக்கும் அவனுக்கும் சிறு சிறு மோதலுடன் பிறகு தீவிர காதல் வருகின்றது 

ஆனால் அவர்கள் காதலுக்கு வில்லனாகவும்    மங்காவை தந்திரமாக அடைய நினைக்கின்றான் நெடுஞ்சாலையில் உள்ள காவல்நிலைய  கஞ்சா இன்ஸ்பெக்டர் மாசாணமுத்து (பிரசாந்த் நாராயணன்)  

அதனால்  மாசாணத்துக்கும் முருகனுக்கும் பயங்கர மோதல் உண்டாகின்றது இன்ஸ்பெக்டர் மாசாணமோ முருகனை கொள்ளையனாக சித்தரித்து பழிவாங்க நினைக்க....முருகனோ கலெக்டர் உதவியுடன் மணம் திருந்தி வாழ நினைக்கின்றான்

 மணம் திருந்திய கொள்ளையன் தார்ப்பாய் முருகன்-தாபா மங்கா காதல் என்ன ஆனது....? என்பதை படம் நெடுஞ்சாலையில் நடப்பதால்...   பல  எதிர்பாராத நிறைய திருப்பங்களுடன் திரிலிங்காக படம் காட்டுகின்றார் இயக்குனர் கிருஷ்ணா

படத்தின்  ஆரம்பம் முதலே கடைசி வரை  தார்ப்பாய் முருகன் பற்றிய கதை மின்னல் வேகத்தில் பயணிக்கின்றது.....புதுவிதமான கதைக்களம் என்பதால் நம்மையும் படத்தோடு  முழு வேகத்தில் பயணிக்க வைக்கின்றது படத்தில்  நெடுஞ்சாலையில் வரும் கர்னாடக ராயரின் சந்தனக்கட்டைகள் மற்றும்  கள்ளப்பணம் நாலு கோடியை  தார்ப்பாய் முருகன் கொள்ளையடிக்கும் காட்சிகள் படு பயங்கரமாக  பிரமிப்பூட்டுகின்றது.

படத்தின்  நாயகனாக வரும் ஆரி... முழுப்படத்தையும் ஆக்கிரமித்து தன்  இயல்பான நடிப்பால் அசத்துகிறார். நாயகி ஷிவிதா உடையிலும் நடையிலும் மலையாள அழகு...நம் கண்ணைப் பறிக்கின்றாள்....

தாபா மாஸ்டர் தம்பி ராமையா காமெடி ஒருபக்கம் குணச்சித்திரம் ஒருபக்கம் என்று பின்னுகின்றார் முதலாளி சேட்டன் நடிகரின்  விரசமான மலையாள காம குட்டி காமெடியை இயக்குனர் தவிர்த்திருக்கலாம் கஞ்சா இன்ஸ்பெக்டராக வரும் பிரசாந்த் நாராயணன்....பாராட்டப்படவேண்டிய கொடூரமான நடிப்பு

சத்யாவின் பின்னணி இசை தத்ரூபமாக ஒரு நெடுஞ்சாலையின் ஓசையை நமக்கு ஊட்டுகின்றதுபாடல்களில் நண்டூருது...குத்துப்பாடலும் இவன் யாரோ...பேண்டஸி பாடலும்  தாமிரபரணி...காதல் மெலோடியும் மனதில் நிற்கின்றது 

ராஜவேலுவின் ஒளிப்பதிவில் பாடல்கள் கண்ணுக்கு குளுமை என்றால் நெடுஞ்சாலையில் நடக்கும் நள்ளிரவு கொள்ளைக் காட்சிகள், தாஜ்மகால் பின்னையில் ஆக்ரா காட்சி,இன்னும் பல  நம் மனதையும் கொள்ளைக் கொள்கின்றன...


மொத்தத்தில் இயக்குனர் கிருஷ்ணா  நெடுஞ்சாலை படத்தின் மூலம் நெடுஞ்சாலையில் 1980 காலக்கட்டத்தில் வாழ்ந்த மனிதர்களின் யதார்த்தமான வாழ்வை  நம் கண்முன் காட்சிகளாகக் காட்டி புதுவித பயண அனுபவத்தை  படைக்கின்றார்......... 

விபத்தில்லாத திரைக்கதை,இயக்கம், பாடல்கள்..என்று சீராக உள்ள  நெடுஞ்சாலை-யில்  ஒரு  வெற்றிப் பயணம் போய்வாருங்கள்

நெடுஞ்சாலை- இதுவரைநம் தமிழ் சினிமா பயணிக்காத புதிய சாலை 

Thursday, March 27, 2014

இனம்-ப்ரிமியர் ஷோ விமர்சனங்கள்...?

சந்தோஷ் சிவன் இயக்கத்தில் பத்திரிகையாளர்கள்  மற்றும் திரையுலக பிரமுகர்களுக்கு ப்ரிமியர் ஷோவில் காண்பிக்கப்பட்ட நாளை வெளிவரும் இனம் படம் பற்றிய விமர்சனங்கள்..........

இறுதிப்போரில் இறந்த தமிழர்களுக்குச் சமர்ப்பணம் என்று சொல்லி வெளியிடப்பட்டிருக்கும் இந்தப்படம் முழுக்க முழுக்க விடுதலைப்புலிகளையும் ஈழப்போராட்டத்தையும் கொச்சைப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கிறது.......என்று கொதிக்கின்றது தமிழ் உலகம் வலைதளம் 

இது இனமா... ராஜபக்சேவின் பணமா? இப்படித்தான் கேள்வி எழுப்பியுள்ளனர் இனம் படத்தைப் பார்த்த தமிழ் உணர்வாளர்கள் பலரும்....... என்கின்றது ஒன் இந்தியா தமிழ் வலைதளம் 

சிங்களப்பேரினவாதம், தம்மால் இயன்றஅளவு கைக்கூலிகளை வைத்து தமிழினத்துக்கு எதிரான செயல்களைச் செய்துகொண்டேயிருக்கிறது. அரசியல் தளத்தில் மட்டுமின்றி கலை, இலக்கியத் தளங்களிலும் தமிழினத்துக்கு எதிரான போரைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறது.. என்று சீறுகின்றது திசைக்காட்டி வலைதளம் 

அதேநேரம்  இனம் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தால் அதுவே அப்படத்திற்கு ஓசி விளம்பரமாக ஆனாலும் ஆகும் என்று தமிழ் இன உணர்வாளர்கள் வருந்துவதாக தெரிவிக்கின்றது...தினமலர் வலைதளம் 


யுக குணா@yuga_guna 
இனம் திரைப்படம் முழுக்க முழுக்க தமிழர்களுக்கும் தமிழினத்திற்க்கும் எதிராக எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும் 

வேடதாரிகள்! பராக் !!@PandiduraiV 
“இனம் ” ஈழத்தமிழர்களை தூக்கி நிறுத்தவில்லை : தாக்கி மிதிக்கிறது !!!

InduMahan@Indu_Mahan 
மலையாளத்தான் சிங்களங்கிட்ட யும் ,காங்கிரஸ்கிட்டயும் பணம் வாங்கிட்டு *இனம்* படம் தமிழனுக்கு எதிராக எடுத்துட்டான். அத நமக்கே காட்றான்

RAஜேSH!!!!@mylairajesh 
இனம் படத்துக்கு ராஜபக்சே தயாரிப்பாளருன்னு கேள்வி படுறேனே உண்மையா!!??

ஆனால்   சினிமாக்காரர்கள் அனைவரும்....


 

இப்படத்தின் மூலமாக தமிழர் படுகொலை செய்யப்பட்டதை காட்டியதாக தயாரிப்பாளர் லிங்குசாமியையும் இயக்குனர் சந்தோஷ் சிவனையும் டுவிட்டர்,முகநூல் சமுக வலைதளங்களில் பாராட்டுகின்றார்கள்...


ஏதேனும் தீர்வு இல்லாமல் இதுபோன்று உண்மை நிகழ்வுகளை திரையில் படம் காட்டுவதும் முடிந்து போன  துயரத்தை நினைவுபடுத்துவதும்.....  யாருக்கு என்ன பயன்?

படம் காட்டுவோருக்கு தவிர........

******************************************************************
விரைவில்...........
******************************************************************






 



நெடுஞ்சாலை-சினிமா விமர்சனம் 




 

Wednesday, March 26, 2014

விஜயின் கத்தியும் டுவிட்டர்களின் சுத்தியும்

விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் இணைந்து வழங்கும் (Vijay 57) புதுப்படம் கத்தி என்று பெயர் சூட்டப்பட்டதாக டுவிடரில் ஏ.ஆர். முருகதாஸ் கீச்சினார்....

அடுத்த நிமிடமே நம் டுவிட்டர் அண்ணன்மார்கள் கிண்டலும் கேலியுமாக டுவிட் சுத்தியால் அடிக்க ஆரம்பித்துவிட்டார்கள்....

நாட்டி நாரதர்@mpgiri 
நான் ஒரு தடவை கத்தி எடுத்துட்டா குத்தி எடுக்காம கீழ வைக்க மாட்டேன்  

Gokila Honey Girl @gokila_honey 
அட்ட கத்தியும் இல்ல மொன்ன கத்தியும் இல்ல 
 இது எதிரிகளை பலி கொடுக்க போற வெட்டு கத்தி டா

ரைட்டர் பிசாசு@pisasukutti 
கத்தி படம் பார்த்துட்டு வரும் ரசிகர்கள் ரியேக்சன் இதுவாத்தான் இருக்கும்>>>>>>>>>>>>>>>>>>>
Embedded image permalink

 Krispin Fernando@fernandokrispin 
விஜயின் புது படம் பெயர் "கத்தி" #பேசாம பிளேடுனு வச்சிருக்கலாம்

ரைட்டர்'மைரா'@writerMiRa 
ஒரு தடவ நம்ம கைக்கு கத்தி வந்துச்சுன்னா ஒண்ணு காக்கும் இல்லைனா அழிக்கும் #வைச்சான் பாருயா தலைவாலயே குறியீட்ட த்தா..தலைவலிடா ச்ச தளபதிடா

சுட்டபழம்@suttapazham 
ஆயிரம்பேர் நிப்பான்டா சுத்தி. ஆயிரத்தில் ஒருத்தன்டா இந்த கத்தி.

பஜன்லால் சேட்டு @SettuSays 
ஓப்பனிங் சீனே விஜய் ஒருத்தர் கழுத்துல கத்தி வெச்சு சேவிங் பண்ணிட்டு இருக்காரு !

மேகத்தை துரத்தினவன்@sihva107 
கத்தி எடுத்தவனுக்கு கத்தியால சாவு அதபாக்க டிக்கெட் எடுக்கறவனுககு தியேட்டர்லயே சாவு

ArunachalaM@ArunbuddyAP 
கத்தினு பேர சொன்னதுக்கே கத்தி கத்தி சாவுறானுங்க.. ஹா ஹா..:-)) #தளபதிடா

ரைட்டர் தமிழ் @Tamiltwits 
ஒரு தடவ தியேட்டருக்கு கத்தி வந்தா ஒன்னு ஆடியன்ஸ் கழுத்தறுக்கும் இல்ல.

Iqbal@moonlitiqbal 
துப்பாக்கி-க்கு அப்புறம் ஏ.கே 47 என்று போகாமல், கத்தி என்று விஜய்யை நுட்பமாக கீழிறக்கும் முருகதாஸை வன்மையாக கண்டிக்கிறோம்...

நல்லவன் @Paasakkaran 
அப்போ ஆடியன்ஸ் கத்தி கதறப்போறாங்க

நாட்டி நாரதர்@mpgiri 
யாருடா இங்க கத்தி .. யாரு குத்துனா வயித்துல போய் முதுகுல வருதோ அவன்தான் கத்தி

R.தமிழ் விஜிமானுஶ்ரீ@tamvji 
"கத்தி" படப்பேர பாரு புத்தி இருந்தா இப்படி பேர் வைப்பானா? கத்தி கடப்பாரை கோடாரி

ஆல்தோட்டபூபதி@thoatta 
லோ பட்ஜெட் படம் போல, அதான் கத்தின்னு வச்சிருக்காங்க. இதுவே பெரிய பட்ஜெட்டுனா அருவாமனைன்னு வச்சிருப்பாங்க # கத்தி 100 days

Dr.Jai@jai231088 
விஜய்ணா வெட்டும் 'மொன்னைக் கத்தி'

NOTA@kanavey 
ஒரே உறைக்குள் ரெண்டு கத்தி எப்டி ப்ரோ - டபுள் ஆக்ட்!

Flicker Suj ♂™@sujanflicks 
கத்தி படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியானதை தொடர்ந்து படக்குழுவினர் வரும் வெள்ளியன்று ஸக்ஸெஸ் மீட் வைக்கப்போவதாக தகவல்கள்.

yasifaullah yasifaul@yasifaul 
தலைவா படத்துல இருந்து கதை ட்ராவெல் ஆகுது,படத்துல விஜய் செத்துடுறார் #கத்தி எடுத்தவனுக்கு கத்தியால தான் சாவு - எண்டு கார்ட்"











 


 Gokila Honey Girl @gokila_honey 
கத்தி தலைப்பை கிண்டல் செய்யும் நண்பர்களே , ரம்பம் தலைப்பை விட கத்தி எவ்வளவோ மேலானது


Monday, March 24, 2014

யாசகன்-சினிமா விமர்சனம்



சமுதாயத்தில் பணமே எல்லாமுமாக இருப்பதாகவும் பண்பு,பாசம், உறவு... போலியாக உள்ளதாகவும் ஓர்  ஆழமான கருத்தை ஆனால் அழுத்தமில்லாத காட்சிகளால் சொல்லும் படம் .........யாசகன்

மனிதாபிமானத்துடன்  வாழும் ஒருவன் தன்னைச் சுற்றி உள்ளவர்களும் மனிதாபிமானத்துடன் வாழ்கின்றார்களா? என்று பரிசோதனை செய்வதே படத்தின் கதை......
படத்தின்  முதல்பாதி....
சூர்யா (மகேஷ்) மற்றவர்களுக்கு பணத்தை தவிர வேறு வழிகளில் உதவும் வேலையில்லாத  நல்லவராக வருகின்றார்... அவரது தந்தையைத் தவிர ஊரே அவரை பாராட்டுகின்றது   அவரது அப்பாவின் நண்பர் மகள் ஷாலினியும் (நிரஞ்சனா)  கொஞ்ச நேரம் காதல் செய்துவிட்டு வேறு ஊருக்கு போகின்றாள் 

ஒருநாள் அபி என்ற ஏழை சிறுமியின் மருத்துவத்திற்கு  பணம் உதவிட    அனைவரிடமும் ரூ.5 லட்சம் கடன்  கேட்கின்றார் ஆனால் யாரும் உதவாமல்  அவர் மீது திருட்டு பட்டம் கட்டி அவமானப்படுத்துகிறார்கள்.  சிறுமி அபியும்   மரணமடைகிறாள் அதனால் வருந்திய சூர்யா புத்தி பேதலித்து,  பைத்தியமாகின்றார் 

பின்பகுதியில் பெறும் பகுதி....
அவரது வீட்டினரும் தெருவில் உள்ளவர்களும் அவரை தொல்லையாக நினைத்து விரட்டுவதே ஆனால்  சூர்யாவின் நிலையைக் கேள்விப்பட்ட அவரது காதலி ஷாலினி ஓடோடி வந்து ஆதரவு காட்டி, அவரை மணந்துக்கொள்ள முடிவு செய்கின்றாள் ஆனால் ஷாலினி வேறு ஒருவருக்கு நிச்சயம் செய்யப்பட, விஷம் குடித்து தற்கொலைக்கு முயல்கிறாள்...

பைத்தியம் பிடித்த சூர்யா என்ன ஆனார்...? ஷாலினி உயிர் பிழைத்தாளா? அவர்கள் காதல் நிறைவேறியதா...? என்பதை கிளைமாக்சில் ஒரு மிகப்பெரிய ட்விஸ்ட் வைத்து அறிமுக இயக்குனர் துரைவாணன் முடித்துள்ளார்

இதனூடே ஒரு குழந்தையுடன்  காதலனால் கைவிடப்பட்ட சூர்யாவின் அடங்காப்பிடாரி அக்காவுக்கு இன்னொரு நல்லவருடன் காதல்  என்றும் சூர்யா மீது அவரது  அக்காமகன் காட்டும்  பாசமும்  ஒருவித நெகிழவைக்கும் உணர்வைத் தருகின்றது 

அங்காடித்தெரு கலக்கல் நாயகன் மகேஷ்  படம் முழுக்க எதையோ பறிகொடுத்தவராக முகத்தைக் காட்டுவது...ஆனால் புதுமுகம்  நிரஞ்சனா தமிழ் படத்துக்கு நல்ல வரவு....மற்றவர்கள் அனைவரும் நாடக நடிகர்கள் போல் வந்து போகிறார்கள். 

சில படங்கள் சமுதாயத்திருக்கு ஏதேனும் செய்தியுடன் வரும் ஆனால் யாசகன் படமே சமுதாயச் செய்தியாக வந்துள்ளது டிவி சீரியலை சினிமாத் திரையில் பார்த்தது போல் பிரமை. ஆனால்,பெண்களுக்கு அதுவும் கிராமத்துப் பெண்களுக்கு இப்படம் ரொம்ப பிடிக்கும்

படம் பார்க்கும் உணர்வை தராமல் ஏதோ போதனை வகுப்பறையில் நுழைந்துவிட்டது போல் நமக்கு விழி பிதுங்குகிறது ஆனாலும் புகை,மது,நக்கல் காமெடி,விரசமான காதல்..போன்ற சினிமாத்தனங்கள் இல்லாத சமூகச் சினிமா எடுத்துள்ள  அறிமுக இயக்குனர் துரைவாணனின் முயற்சி  பாராட்டுக்கு உரியது......வாழ்த்துக்கள்



Sunday, March 23, 2014

சிவகார்த்திகேயன் அடுத்த சூப்பர் ஸ்டாரா...?

இப்போதைய டுவிட்டர்,பேஸ்புக்...விவாதமே....சிவகார்த்திகேயன் அடுத்த சூப்பர் ஸ்டாரா...? என்ற மாபெரும் கேள்விக்கு விடை தேடுவதுதான்...

ஒருவகையில் இது நகைப்புக்குரிய செய்தியாக தெரிந்தாலும் திரையுலகைப் பொறுத்த அளவில் இது உண்மையே........
சினிமா ஒரு சூதாட்டம்.....

இங்கே ஜெயிக்கும் குதிரையில் பணம் கட்டுபவர்களே அதிகம்...
தொடர்ந்து சில வெற்றிப்படங்களை குறைந்த முதலீட்டில் தந்த நடிகர் சிவகார்த்திகேயன் என்பது அனைவரும் அறிவர்.......

ரூ.100 கோடி செலவில் படம் காட்டும் சூப்பர் ஸ்டார் ரூ.125 கோடிக்கு வியாபாரம் செய்து  ரூ.25 கோடி  லாபம் சம்பாதித்து கொடுப்பதும்  ரூ.5 கோடி செலவில் படம் காட்டும் சிவகார்த்திகேயன்  ரூ.15 கோடி வியாபாரம் செய்து  ரூ.10 கோடி  லாபம் ஈட்டித் தருவதும்...... அப்படியென்றால் திரையுலகில் உண்மையான சூப்பர் ஸ்டார் யார்?

அதிக  ரசிகர்கள் வைத்திருப்பதும் அதிக படங்கள் நடித்திருப்பதும் சமுதாயத்தில் பிரச்சனைக்குரிய செய்திகளை சொல்வதும் மட்டுமே ஒரு சூப்பர் ஸ்டார் நடிகருக்கு உள்ள அருகதை என்பது தமிழ் சினிமாவில் மட்டுமே....

சூப்பர்  ஸ்டார் என்பது என்ன குடும்பச் சொத்தா...? அல்லது படித்து வாங்கிய பட்டமா...? அல்லது தேசிய விருதா...? 
ஒவ்வொரு காலகட்டத்திலும் யாரால் சினிமா உலகத்துக்கு லாபமோ யாரை நம்மி பணம் செலவு செய்தால் நஷ்டம் வராதோ அவரே உண்மையான சூப்பர் ஸ்டார் என்பது காலத்தின் நியதி.........

அந்த வகையில்.........நடிகர் சிவகார்த்திகேயனை அடுத்த சூப்பர் ஸ்டார் என்பது சரியே...? அதற்குரிய பந்தாவுடன் அவர் மான் கராத்தே பட ஆடியோ விழாவில் கலந்துக் கொண்டதும் நியாயமே என்பது நமது கணிப்பு..........


உங்கள் பார்வையில்.................
சிவகார்த்திகேயன் -அடுத்த சூப்பர் ஸ்டார் என்பது சரியா?



வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி...........முடிவு-28/3/2014

Saturday, March 22, 2014

குக்கூ - படம் எப்படியிருக்கு?







         Love is 'NOT' blind




இப்போது தமிழ் சினிமாவில் பல பிரபல இயக்குனர்கள்,நட்சத்திர நடிகர்கள் ஆணவப் போதையில் தள்ளாடி விழுந்து கிடக்க..... குடும்பத்துடன் பார்க்ககூடிய காதலும் நகைச்சுவையும் கலந்த உணர்வுப் படம் தந்தவர் குக்கூ  இயக்குனர் ராஜு முருகன்...இருண்ட தமிழ் திரையுலகுக்கு வெளிச்சம் காட்டியவர் என்றால் மிகையாகாது....
cuckoo

இதயத்தை  உருகவைக்கும், ஆன்மாவை கிளறிவிடும் ஒரு வித்தியாசமான அனுபவத்தை நீங்கள் திரையரங்கில் உணரவேண்டுமா? குக்கூ படம் பாருங்கள் என்று பாராட்டுகின்றது kollywoodtoday.net வலைதளம் 


cuckoo

ராஜு முருகனின் குக்கூ தமிழ் திரையுலகில் புதிய உணர்வு அலையை உருவாக்கி உள்ளது படத்தின் காட்சி அமைப்புக்களும் இசையும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றது......என்று entertainment.oneindia.in விமர்சிகர் ராம்சந்தர் எழுதுகின்றார்

காதலை நம்பிக்கையுடனும் நகைச்சுவையுடனும் சொல்லும் குக்கூ படம் காதல் குருட்டுத்தனமானது அல்ல என்பதை நிரூபித்துவிட்டது என்று bollywoodlife.com பாராட்டுகின்றது.

நேரத்தில் பல தருணங்கள் உள்ளது போல் காதலில் பல வடிவங்கள் உள்ளன என்று எழுதிய நாவலாசிரியை ஜேன் ஆஸ்டின் கூற்றுப்படி குக்கூ படத்திலும் காதலின் பல வண்ணங்களை காண்கிறோம் என்று எழுதுகிறது TOI

இயக்குனர் ராஜு முருகன் குக்கூ படத்தின் மூலம் உலகின் இருண்ட பக்கமும் உண்மையான வண்ணங்கள் நிறைந்தது என்று வெளிச்சம் போட்டு காட்டியுள்ளதாக பாராட்டுகிறது.....behindwoods.com விமர்சனக்குழு 

cuckoo


நமக்கு பரிச்சாத்தியமில்லாத கதைக்கரு, தனித்துவமான கதாப்பாத்திரங்கள், யதார்த்தமாக கதை சொல்லல்,ஆத்மாத்தமான இசை....இவைகளை பிரதிபலிக்கும் படங்கள் வரலாற்றில் போற்றப்பட வேண்டிய உன்னதங்கள் இவைகளை பிரதிபலிக்கும் ராஜு முருகனின் குக்கூ திரைப்படம் சினிமா வரலாற்றில் ரொம்ப அரிதானது என்கின்றது timesofap.com

குக்கூ படம் மாற்று சினிமா நோக்கி நடைபோடும் தமிழ் சினிமாவின் முதல் படிக்கட்டு என்றும் அதை நாம் போற்றவேண்டும்  என்று பாராட்டுகிறார் desimartini.com ராஜீவ் மேனன் 


உங்கள்  பார்வையில்...........
நீங்கள் குக்கூ படம் பார்த்தவர்க இருந்தால்....அல்லது படம் பார்த்துவிட்டு மதிப்பீடு செய்யுங்கள்.....
குக்கூ - படம் எப்படியிருக்கு? 




வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி........முடிவு-25/3/2014

thanks to all cinema review .coms

Friday, March 21, 2014

குக்கூ-சினிமா விமர்சனம்


இருட்டில் வாழும் இரண்டு பார்வையற்ற மாற்று திறனாளிகளின் இதயத்தில் ஒளிரும் அழகான காதலை நளினமான  உணர்வுடனும் யதார்த்தமான நகைச்சுவையுடனும் வெளிச்சம் போட்டு காட்டுகின்றது.........குக்கூ திரைப்படம்

விகடன்  பத்திரிகை எழுத்தாளராக வரும் ராஜு முருகன் தான் பேட்டிகண்ட  பார்வையற்ற இளம் ஜோடி தமிழ்(தினேஷ்) -சுதந்திரக்கொடி (மாளவிகா)யின்  காதல் கதையை  நினைத்துப் பார்ப்பதுபோல் படம் துவங்குகின்றது.......

ரயிலில் கிண்டலிலும் மோதலிலும் ஆரம்பிக்கும் அவர்கள் காதலுக்கு வில்லனாக கொடியின் அண்ணனும் அவனது நன்பனும் வர காதலர்கள் பிரிக்கப்படுகின்றார்கள்....

இருவரும்  ஓன்று சேர நினைக்கும் போது...தமிழ் விபத்தில் மாட்டிக்கொள்ள...... கொடி வீட்டைவிட்டு தப்பி ஓடுகின்றாள்....

எழுத்தாளர் இந்தக்  கதையை விகடனில் எழுதி சுதந்திரக்கொடியை கண்டவர் தெரியப்படுத்துங்கள் என்று கேட்டுக்கொள்ள ஒரு வாசகர் கொடியை மும்பையில் பார்த்ததாகச் சொல்கின்றார்.....

தமிழ் கொடியை சந்தித்தாரா...? இருவரும் ஓன்று சேர்ந்தார்களா...? பார்வையற்ற அவர்களின்  காதலில் வெளிச்சம் வந்ததா...? என்பதே கதை 

சிறு சிறு  காட்சிகளாகச்  சொல்லி இயக்குனர் ராஜு முருகன் படத்தின் கதையை நகர்த்திச் செல்வதால் நீங்கள் குக்கூ படம் பார்த்தால்  மட்டுமே இந்த அழகான ஜோடிகளின்  உண்மையான காதலை உள்ளத்தில் உணரமுடியும்

படத்தின் சிறப்பான காட்சிகளாக........
-டைட்டில் போடும்போதே ஒளியில்லாமல் இருளாக பின்னணியில் ஒலி சப்தங்கள் மட்டுமே வைத்து  திரையில் காட்டுவது....
-தமிழ் நெற்றியில் காயம் பட  தாக்கிய கொடி பிறகு பிராத்தனை செய்வது..
-தமிழும்-கொடியும் சர்ச்சில் மின்வெட்டு இருளில் காதல் செய்வது....
-தமிழ் தன் அம்மாவை அடக்கம் செய்யுமுன் தாயின் முகத்தைத் தடவிப் பார்ப்பது...
-கொடியின் சர்விஸ் ரீடர்ஸ் காதலர்கள் அவளை ஓட்டலில் சாப்பிட வைத்து பேஸ்-புக்கில் போட போட்டா எடுப்பது....
-நள்ளிரவில் கொடியையும் தமிழையும் காப்பாற்றும் வேன் டிரைவர்...
-தமிழ் இசை நடனகுழுவில் இளையராஜாவின் பழைய  காதல் மெலோடிகளை பாடுவது........என்று நிறைய சொல்லலாம்

தினேஷ் இப்படத்திலும் யதார்த்தமாக நடித்து மீண்டும் தான் ஒரு கதை நாயகன் என்பதை நிருபித்துள்ளார்....மாளவிகாவின் அழகான அதேநேரம் சாந்தமான முகம் படம் பார்ப்பவர்களை ஈ...ர்க்கின்றது மற்றபடி  ஆடுகளம் முருகதாஸ்,தமிழ் நண்பராக வரும் இளங்கோ,ராக் அண்ட் ரோல் இசை நடனம் ஓனர் மூன்று பொண்டாட்டி சந்திரபாபு,எம்ஜிஆர், விஜய், அஜித்...குழுவினர் நல்ல காமெடி 

படம்  முதல் பாதி காதல் அரும்புவதிலும் இரண்டாம் பாதி பிரிவும் தேடலும் என்று போய்கொண்டிருக்க பாடல்கள் பிரேக் அடிப்பது போல் தோன்றினாலும் சந்தோஷ் நாராயணனின் இனிமையான இசையாலும் வர்மாவின் அருமையான ஒளிப்பதிவாலும் நன்றாகத்தான் உள்ளது 

படத்தின் 90 விழுக்காடு காட்சிகள் ரயில் நிலையம்....எக்மோரில் துவங்கி பூனே வரை நீண்டுகொண்டே.....ஆனாலும் வர்மாவின் கேமரா நமக்கு இந்தக் கோடையிலும் குளுமை  

இயக்குனர் ராஜு முருகனின் குக்கூ திரைப்படம் பார்வையற்ற மாற்று திறனாளிகளின் வாழ்க்கையில் உள்ள இனிப்பான,கசப்பான,அன்பு, அவலங்களை வெள்ளித்திரையில் நளினமான  உணர்வுடனும் யதார்த்தமான நகைச்சுவையுடனும் ஆபாசம் இல்லாமல் அழகாக வெளிச்சம் போட்டு காட்டுகின்றது 
 

Thursday, March 20, 2014

நான் சிகப்பு மனிதன்-படப்பாடல்கள் எப்படியிருக்கு?

ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் நா.முத்துக்குமாரின் வார்த்தைகளில் விஷால்-லக்ஷ்மி மேனன் நடிப்பில் வரவிருக்கும் நான் சிகப்பு மனிதன் படத்தில் 5 பாடல்கள்......

1-ஏலேலோ....


ஜி.வி.பியின் உயிரோட்டமான குரலில் மேகாவின் கோரஸில் நாட்டுப்புற சுவையுடன் குத்துப்பாட்டின் குதுகலத்துடன் துவங்கும் இப்பாடலில் கிட்டார் இசையின் கலவை கேட்பதற்கு விசித்திரமாக உள்ளது......நாயகன்-நாயகியின் காதல் உணர்வைப் பிரதிபலிக்கும் மெலோடி 
2-லவ்லி லேடிஸ்....



இப்பாடலில்  கானா  பாலா,ஆர்யன் தினேஷ்,ஜி.வி.பி,மேகா,விஜய் பிரகாஷ்..இவர்கள் குரல்களில் ஒரு வித ரம்மியமான டிஸ்கோ-பாராம்பரிய இசைக் கலவையாகவும் பார்டிகளில் பாடப்படும் பஞ்சாபி இசையின் வேடிக்கையாகவும் உள்ளது 
3-பெண்ணே ஒ பெண்ணே....

ஆர்மோனியம்,வயலின்,தபாலா,ட்ரம்ஸ்...இசைக்கருவிகளின் ஓசையுடன் வந்தனா-அல் ரப்பின் குரல்களில் ஸ்பானிஷ் ஸ்டைல்வுடன் உணர்வுப்பூர்வமாக பாடப்பட்டுள்ள மெலோடி......
4-இதயம் உன்னைத் தேடுதே......

ஜி.வி.பி-சைந்தவி குரல்களில் கேட்பவர் இதயங்களில் ஒரு காதல்  உணர்ச்சி தாக்கத்தை விதைக்கும் இப்பாடல் விசித்திரமான தாள வரிசையை கொண்டுள்ளது........நிச்சயம் ஹிட் அடிக்கும் 
5-ஆடு மச்சி (ரீமிக்ஸ்)



லவ்லி லேடிஸ்....பாடலின் ரீமிக்ஸ் என்றாலும் விஜய் சாவ்லா குரலில் அசலைவிட அருமையாக உள்ளது 

நான் சிகப்பு மனிதன்-படப்பாடல்கள் எப்படியிருக்கு? 


நான் சிகப்பு மனிதன்-படப்பாடல்களில் உங்களுக்கு பிடித்த பாடல் எது?




வாக்களிக்கும்  அனைவருக்கும் நன்றி...முடிவு-24/3/2014

Note-only sample clips are embedded as demo..kindly enjoy the music on purchasing original... 

*****************************************************************

 விரைவில்................


cuckoo

குக்கூ-சினிமா விமர்சனம்  

 

Wednesday, March 19, 2014

ரஜினி,கமல்,விஜய்,அஜித்...யாருக்கு ஒட்டு போடுவாங்க?

இந்தத் தேர்தலில் ஓட்டுப் போட வரும்  நம்ம நடிகர்கள் ரஜினி,கமல், விஜய், அஜித், சூர்யா... இவர்கள் யாருக்கு ஒட்டுப்போடுவாங்க?  என்ற கற்பனை நகைச்சுவை பதிவு....

"வந்தேன்டா....கோச்சடையான் நான் போடப்போறேன் ஒட்டுதாண்டா...." என்று  பாடியபடி வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம ...
பதிவர்-
அண்ணேன்..நீங்க எப்ப ஒட்டு போட வந்தீங்க...?
ரஜினிகாந்த்-  
ஓட்டுப்போட நா வருவேன்? எப்படி வருவேன்? எப்ப வருவேன்? அதெல்லாம் எனக்கு தெரியாது இப்ப மோஷன் கேப்ச்சர்ல ஓட்டுபோட சௌந்தர்யா பாப்பா சொல்லிச்சு....... அதான்  இந்த கோச்சடையான் பறந்து வந்துச்சு....ஆங்
பதிவர்-  
நீங்க  யாருக்கு ஒட்டு போடப் போறீங்க...?
ரஜினிகாந்த்- 

ஏய்...ஏய்...நா ஒரு ஒட்டு போட்டா நூறு ஒட்டு போட்ட மாதிரி....
அம்மாவுக்கு... மோடிக்கு ...ராகுலுக்கு....தலீவருக்குனு தனித் தனியாலாம்  என்னால ஒட்டு போடமுடியாது.... ஒரு ஒட்டு போடுவேன் எல்லோரும் பிரிச்சி பங்குவச்சிக்குங்க.....
பதிவர்-
இந்தத் தேர்தல்ல யார் ஜெயிப்பா....?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்- 

ஏய்...ஏய்...கெட்டவங்கள ஆண்டவன் ஜெயிக்க வச்சிடுவான்...ஆனா ஆட்சி பண்ண விடமாட்டான் நல்லவங்கள ஆண்டவன் தோற்க  வச்சிடுவான் ஆனா ஆட்சி பண்ண வைப்பான்....கொவ்ண்டிங் ஸ்டார்ட்...கதம் கதம் கதம்
பதிவர்-
  அய்யோ...சூப்பர் ஸ்டார் அண்ணேன் ரொம்ப பயங்காட்டுறீங்களே... சரி...நம்ம உத்தம வில்லன் உலக நாயகர்  
கமல் ஹாசன் வருறாரு அவரிடம் கேட்போம்.......அய்யோ அவரு ஏன் அழுதுகிட்டே வருறாரு.......?

அண்ணேன்..நீங்க யாருக்கு ஒட்டு போடுவீங்க..?
கமல்ஹாசன்-
ஆஆஆ....ஆ...முதல்ல அவியிங்கள நிருத்தச்சொல்லு...அப்புறந்தான் நா ஒட்டு போடுவேன்.... துட்டு வாங்கிட்டு ஒட்டுப்போடுற  அவியிங்கள நிறுத்தச் சொல்லு...ஆ.....ஆ....
பதிவர்-
சரிங்க..உலக நாயகரே...அதுதான் பிரவீண் குமார் ரோட்டுல போறவியிங்க வருரவியிங்க பாக்கெட்டுல கைய விட்டு துலாவி அம்புட்டையும் புடிங்கிக்கிறாரே....நீங்க வேற ஓட்டுக்கு துட்டுவாங்காதீங்கனு விழிப்புணர்வு செயிறீங்க...சரிங்க..அண்ணேன் நீங்க ஒட்டு போட்டுட்டு அப்புறம் சொல்லுங்க........

பதிவர்-
அட...வாங்கண்ணா...வணக்கங்கன்னா.....இளையதளபதிங்க....அண்ணா....
நீங்க சொல்லுங்க அண்ணா உங்க ஓட்ட யாருக்கு போடுவிங்க....?  அண்ணா 

விஜய்- எங்கிட்ட ஒரு தடவ ஒருத்தன் ஒத்த ஒட்டு வாங்கிட்டானா அப்புறம் அவன் எந்த தொகுதியிலும் நிக்க மாட்டான்.... ஜில்லடா...தில்லாடா...

நான் சக்திடா..எங்க அப்பன் சிவன்டா.....நாங்க நினைச்சா நான் தேர்தல்ல நிக்காமலே பிரதமர் ஆவேன்டா...டா...டா....
பதிவர்-
 அய்...அது யாரு...தலைய ஆட்டிக்கிட்டு வீரமா நடந்து போறது....
அய்..நம்ம தல...அண்ணேன் தல..தல..தல...சொல்லுங்க தல...
அண்ணேன் உங்க ஓட்ட யாருக்கு போடப் போறீங்க?

அஜித்-
ஏ...அன்னேண்டா....தம்பிடா....தலடா..காலுடா..கைடா...
போடுவேன்டா,...ஓட்டுடா....போடா...முதல்ல பிரியாணி சாப்பிடுடா
அப்புறம் உனக்கு சொல்லுறேன்டா...யாருக்கு போடுவேன்டானு  

பதிவர்-
 அய்யோ என்ன சோதன இது ....ஒருத்தருகூட யாருக்கு ஒட்டு போடுவேன்னு சொல்லமாட்டேங்கிறாங்க...அய்..நம்ம சிங்கம் சூர்யா சாரு....
அண்ணேன்...நீங்களாவது சொல்லுங்க....யாருக்கு ஒட்டு போடுவிங்க...?
சூர்யா-
ஏய்...நா இப்படி ஓங்கி அடிச்சா ஒன்ற டன்னு வெயிட்டுடா ....இப்ப ஓங்காம அடிச்சா பத்து டன்னு வெயிட்டுடா.....டேய்...அப்படியே ஓடிடு..ஆங்...
பதிவர்-
சரிங்க...சாரிங்க...சிங்கம் சார்...அது யாரப்பா...? சோகமா ஒருத்தரு போறாரு..அய்..நம்ம ஒஸ்தி நடிகர் சிம்பு.......

சிம்பு-
அப்புறம் வாப்பா..நானே உன்னையும் உங்க பதிவர்களையும் கூப்பிட்டு பதிவர்ஸ் மீட் போட்டு யாருக்கு ஒட்டு போட்டேன்னு சொல்ல நினைச்சேன் அதுக்குள்ள நீயா வந்திட்ட... 
இப்ப லவ் ப்ரேக்-அப்ல நான் தனி ஆளாயிட்டேன்....
இப்படி ஒட்டு போடுற இடத்துக்கு வந்தாலாவது...
யாரையாவது பிக்கப் பண்ணலாம்னு வந்தேன் 
வேனும்னா ஒரு பாட்டு பாடுறேன் கேட்டுட்டு போ...

காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்...
பாதியில அம்புட்டும் கருகிப் போச்சு...
காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்.
பேதியில அம்புட்டும் புடிங்கிட்டு போச்சு...

பதிவர்- 
சரிங்க...அண்ணேன் அப்படி தனியா போயி பாடுங்க....அங்க அம்மணிக வருறாக....அய்...ஹன்ஷிகா,நயன்,அனுஷ்கா,லட்சுமி மேனன்,கஜல்...
அம்மணிகளே! நீங்க உங்க ஓட்ட யாருக்கு போடப் போறீங்க...?

லட்சுமி மேனன்-
இ...ஆளு எந்த பறையுது...எனக்கு இன்னும் ஒட்டு போடுற வயசு இல்லா..யான் சும்மா இவ்விட நோக்க வந்தேன்... fy..fy..டோன்ட் கலாச்சி...fy..     
பதிவர்-
ஹன்ஷிகா,நயன்,அனுஷ்கா,கஜல்.....எல்லோரும் இப்படியே லட்சுமி மேனன் போல இன்னும் வயசுக்கு வரலைன்னு ...ச்சே..ஒட்டு போடுற வயசுக்கு வரலன்னு சொன்னதினால...

சாரிங்க.... நண்பர்களே! நம்ம சினிமா நடிகர்-நடிகைகள் ஒட்டு யாருக்கு போடப் போறாங்கனு  என்னால கண்டுபிடிக்க முடியலே.... 
    



Tuesday, March 18, 2014

இந்தியாவில் இளையராஜாவே சிறந்த இசையமைப்பாளர்-சரியா? தவறா?



உலகின் 9-வது சிறந்த இபசையமைப்பாளராக   இந்தியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட ஒரே இசையமைப்பாளர் இளையராஜா என்று டேஸ்ட் ஆப் சினிமா என்ற வலைதளம் வாக்கெடுப்பில் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார் 

இது உலகளவில் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த அங்கீகாரம் என்பதை மறுப்பதற்கில்லை.......

அதேநேரம் இரண்டு ஆஸ்கார் விருது வாங்கிய ஏ.ஆர்.ரகுமான் சிறந்த இசையமைப்பாளர் இல்லையா? என்றும் அவர்கள் ரசிகர்கள் கேட்கத்தோன்றும்.......

என்னைப் பொறுத்த வரையில்...........

இன்றுவரை பலமொழிகளில் 4500 பாடல்களுக்கு மேலும்  900 படங்களுக்கு மேலும் இசையமைத்துள்ள இளையராஜாவின் சாதனை...

எங்கேயோ ஒரு சிறு கிராமத்தில் பிறந்து  இன்று உலகளவில் பேசப்படும் அளவுக்கு சாதி,மதம்,இனம்...போன்ற தடைக்கற்களை தகர்த்தெறிந்த  இளையராஜாவின்  இமாலய வளர்ச்சி மிகவும் எளிதான ஒன்றல்ல 

இசைஞானி என்று போற்றப்படும் இளையராஜா உலகின் முதல் சிறந்த இசைக்கலைஞர் என்று தேர்வு செய்யப்படாது வருத்தமே 


உங்கள் பார்வையில்..............
உலகின் சிறந்த இசையமைப்பாளர் என்று இந்தியாவிலிருந்து இசைஞானி இளையராஜா தேர்வு செய்யப்பட்டது.........



வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி........முடிவு-21/3/2014




**************************************************************************
தமிழக அட்டகத்தி அரசியல் கட்சி எது....?



Sunday, March 16, 2014

மான் கராத்தே-பாடல்கள் எப்படியிருக்கு?


சிவகார்த்திகேயன்-ஹன்ஷிகா நடிப்பில் மான் கராத்தே இன்றைய இளசுகளின் இதயங்களை  வருடும் அனிருத் இசையமைப்பில் வரும்  படத்தில் 5 பாடல்கள் உள்ளன

1-மாஞ்சா


                            thanks-YouTube by SonyMusicIndiaVEVO

கார்கியின் வார்த்தைகள் அனிருத் குரலில் கலக்கல் இசையோடு கேட்கும் போதே கேட்கும் இளசுகளின் கால்கள் துள்ளி ஆடத் தோன்றும்..........

2-டார்லிங் டம்பக்கு......

















                                   

                                   thanks-YouTube by SonyMusicIndiaVEVO

பென்னி-சுனிதி பாடிய யுகபாரதியின் இப்பாடல் இப்படத்தின் முதல் டீசரில் இடம்பெற்று நல்ல வரவேற்ப்பை பெற்றது............

3-உன் விழிகளில்......

















                             
                                   
                                        thanks-YouTube by SonyMusicIndiaVEVO

இதற்கு முன்பு அனிருத் இசையில் நாம் கேட்ட டியூனாக நம் காதுகளில் ஒலித்தாலும்  அனிருத்-ஸ்ருதி ஹாசன் பாடிய இந்த மெலோடி வெஸ்டர்ன் இனிமையாக உள்ளது... 

4-ராயபுரம் பீட்டர்........
சிவகார்த்திகேயன்-பறவை முனியம்மா பாடும் எலெக்ட்ரானிக் இசையில் ஒரு குத்துப்பாடல்........வெகுஜனங்களை கவரும் 


                               thanks-YouTube by SonyMusicIndiaVEVO
5-ஓபன் த டாஸ்மாக்........
காணா  பால எழுதிய அவரது கானா பாணி வகையில் இசையமைப்பாளர் காண புகழ் தேவாவும் அனிருத்தும் இணைந்துப் பாடிய கானா பாடல்....கானா இசை நேயர்களுக்கு விருந்து

உங்கள் பார்வையில்.............
மான் கராத்தே-பாடல்கள் எப்படியிருக்கு?

வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி........முடிவு-19/3/2014



Sony Music South
A big thank you to all of you! #MaanKarate no.1 on iTunes India! 
Embedded image permalink

Friday, March 14, 2014

ஆதியும் அந்தமும்-சினிமா விமர்சனம்


வாவ்...ஹாலிவுட் திகில் திரைப்படங்களை மிஞ்சும்  சிறந்த திரைக்கதை, இயக்கம்,ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு... என்று பிச்சா பட வரிசையில் இன்னுமொரு அட்டகாசமான உளவியல் திகில் திரைப்படம்......ஆதியும் அந்தமும் 

 ஊட்டி ரயில் நிலையத்திற்கு வரும்   டாக்டர் கரன் (கோலங்கள் அஜய்) என்ற உளவியல் பேராசிரியர் -மனநல மருத்துவர்  அங்குள்ள   ஒரு மனநல மருத்துவக் கல்லூரியில் வேலைக்கு சேர்வதுபோல் படம் துவங்குகின்றது...

கல்லூரியில் தொலைகாட்சி ரியாலிட்டி ஷோ தொகுப்பாளராக வரும் ஷாலினியிடம்   டாக்டர் கரன்  தான் ஒரு ஆவியை தினமும் இரவில் சந்திப்பதாகவும் இங்கே கல்லூரி டீன் மற்றும் வேலையாட்களின்  நடவடிக்கைகள் மர்மமாக இருப்பதாகச்   சொல்வதும் என்றும் இன்னும் பாழடைந்த கல்லூரி லேப்,மெமோரியல் ஹால்... என்று நிறைய திகில் காட்சிகளுடன் படம் காட்டப்பட்டு......ஒரு கட்டத்தில் அவர் காணாமல் போய்விடுகின்றார்... 

அதனால் ஷாலினி கல்லூரி டீனுடன் விவாதம் செய்வதுடன் இடைவேளை....... பார்வையாளர்களுக்கு  பயங்கரமான எதிர்பார்ப்பு. இடைவேளைக்குப் பிறகு உண்மையில் டாக்டர் கரன் யார்..? ஆவியாக வரும் பெண் பிரியா யார்...? அவளுக்கும் டாக்டருக்கும் என்ன தொடர்பு...? காணாமல் போன டாக்டர் மீண்டும் வந்தாரா...? என்ற ஆதியும் அந்தமுமான மர்மத்தை காதல் காட்சிகளுடன் உணர்வுப்பூர்வமாகவும் யதார்த்தமாகவும் விவரிக்கின்றது.......ஆதியும் அந்தமும் திரைப்படம் 

சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு வந்திருக்கும் அஜய்....முகத்தில் பயம், சோகம்,விவேகம்...என்று பலவித அபாரமான நடிப்பு பரிமாணங்கள் சைக்கியாரிஸ்ட் டாக்டராக கச்சிதமாகப் பொருந்துகின்றார்...அவருக்கு நாயகிகளாக வரும் மிட்டாலி அகர்வால்,கவிதா ஸ்ரீனிவாஸ்  இரண்டு நடிகைகளும் கதாப்பாத்திரங்களாக  ஜீவிக்கின்றார்கள் 

படத்தின்  மிகப்பெரிய சிறப்பு டி.எஸ்.வாசனின் போட்டோகிராபி... காட்சிக்கு காட்சி ஊட்டியை  அற்புதமாகவும் அழகாகவும் அதே நேரம் இரவு நேர திகிலூட்டும் காட்சிகளின் ஒளிப்பதிவும் அருமை  பாடல் காட்சிகள் ஊட்டி இயற்கையின் குளுமையை  படம் காட்டுகின்றது

அப்படித்தான் எல்.வி.கணேசனின் துல்லியமான ஒலிப்பதிவு.... திகிலூட்டும் பின்னணி இசை.....பாடல்களும் அருமை  அதிலும் டாக்டர் கரன்-பிரியா காதல் பாடல் பெண்ணே...பெண்ணே.... காதுக்கு இனிமையான மெலோடி 

தமிழ்  திரையுலகுக்கு நல்ல வரவு இயக்குனர் கௌஷிக்.....படத்தின் முதல்பாதி முழுவதும் காட்சிக்கு காட்சி ட்விஸ்ட்வுடன்  திகிலூட்டும் மர்ம முடிச்சுக்கள்  பின் பாதி  தெளிவாகவும் குழப்பமில்லாமலும் அந்த மர்ம முடிச்சுக்களை அவிழ்ப்பதும் ....கிளைமாக்ஸில்   பிரியாவின் கருணைக்கொலை மரணக்காட்சி அதனால் டாக்டர் கரனுக்கு உண்டாகும் புத்தி பேதலிப்பு......கடைசியில் டீன் ஷாலினியுடன் பேசும் நெஞ்ச தொடும் வார்த்தைகள் (என் மகனைப் பற்றி உங்க ரியாலிட்டி ஷோவில் எதையும் காட்டாதீங்க...) மிகவும்   அருமையான முடிவு

ஆதியும் அந்தமும்-திகில்  திரைப்பட ரசிகர்களுக்கு நல்ல 
விருந்து....காணத்தவறாதீர்கள் (இதய நோயாளிகள் தவிர்க்கவும்..)


Thursday, March 13, 2014

ஜேம்ஸ் கேமரூன் கோச்சடையானைப் பார்த்தால்...?


எல்லோரும் கோச்சடையான் படத்தின் டிரெய்லர் பார்த்துவிட்டு ஆகா..ஓகோ என்று பாராட்டும் போது........ஒரு  வலைதளத்தில்  வச்சான் பாரு ஆப்பு-கோச்சடையான் தேறுமா? என்று.........

கோச்சடையான்  டிரெய்லர் இரண்டே நாட்களில் ஒரு மில்லியன் பார்வைகளைத் தாண்டி வெற்றிகரமாக... அதேநேரம் அந்த டிரெய்லர் படக்காட்சியை வைத்து ஏழு காரணங்கள் கணித்து சொல்லப்படுகின்றன கோச்சடையான் படம் தேறாது... ஏன்? எதற்கு? எப்படி?  என்று....
1-ரசிகர்கள் தங்கள் அபிமான நடிகர்கள் ரஜினிகாந்த்,தீபிகா படுகோன்,சரத்குமார்,நாசர்..போன்றவர்களை  3-D மாடல்களில் காண்பதற்கு மிகவும் ஆவலுடன் இருப்பார்கள் ஆனால் ஒரு 3-D மாடல் அனிமேஷன் படத்திற்கான அடிப்படை அம்சமான உருவ ஒற்றுமை எதுவும் இல்லை (அவதாரில் கற்பனை கதாப்பாத்திரங்கள் மட்டுமே இந்த தொழில் நுட்பத்தில் படம் காட்டப்பட்டது)

2-மாபெரும் இராணுவ போர் காட்சிகளை பிரமாண்டமான பின்னணி இசையுடன் காட்டும் இந்த கொஞ்ச நேர டிரெய்லர் காட்சி ரசிகர்களை ஈர்த்ததில் ஆச்சரியமில்லை அதேநேரம் மிக நெருக்கமாக காணும்போது வலது-இடது பக்க ராணுவ வீரர்கள் ஒரே மாதிரி உருவத்துடன் நிறைய பேர் இருப்பது  ஒரே உருவத்தை காப்பி & பேஸ்ட் செய்து பல உருவன்களாய் காண்பித்து  நாம்  3-D யில் தொடர்ந்து பார்க்கும் போது நமக்கு எரிச்சலை உருவாக்கும் காட்சிகளாய் தெரியும்......(அவதாரில் வேற்று கிரகவாசிகள் எல்லோரும் ஒரே உருவத்தில் இருந்தது ஆச்சரியமில்லை....) 

3-பார்வையாளர்கள் ரஜினிகாந்தின் பேச்சு-செயல்களில் மணம் மயங்கினாலும் அவரது செயல்-இயக்கப்   பாணி (style)  ஏதோ எலும்பில்லாத ரப்பர் பொம்மை போல் உள்ளதாகவும்  மோஷன் கேப்சர்  தொழில் நுட்பத்தின் முக்கிய அம்சமான (Bones of the 3D character) இதை  கொஞ்சமும் கடைபிடிக்கப் படவில்லை என்பதை இது காட்டுகிறது....

4-எளிதாக அனிமேஷன் செய்ய இயலாத இடங்களில் மட்டுமே மோஷன் கேப்சர்  தொழில் நுட்பம் சிறப்பாக பயன்படும் அந்தவகையில் உருவங்களின் முக தசை அசைவுகள் எதுவும் இங்கே கேப்சர் செய்யப்படவில்லை எல்லா கதாப்பாத்திரங்களும் தட்டையான தோற்றத்தில் எந்த உணர்ச்சியையும் பிரதிபலிக்காமல் காட்டப்படுகின்றன 
5-மோஷன் கேப்சர்  தொழில் நுட்பத்தின் முக்கிய 12 விதிகளில் ஒன்றான (Squash and stretch) மிகைப்படுத்தப்பட்ட அனிமேஷன் இயக்கம் சரியாக பயன்படுத்தவில்லை கதாப்பாத்திர இயக்கங்களின் வேகத்திற்கு இணையாக அதன் வடிவம் எவ்வித யதார்த்தமான சிதைவும் ஆகாமல் காட்டப்படவில்லை

6-ஒரு சாதாரண மனிதன் ஒரு நிமிடத்தில் 20 முதல் 30 தடவைகள் கண்ணிமைப்பது இயல்பு ஆனால் ரஜினிகாந்த் பஞ்ச் வசனம் பேசும் போது ஒரு முறையும் கண்ணிமைக்கவில்லை இது 4 செகன்ட்  டிரெய்லர் என்று சமாதானம் கொண்டாலும் முழு படத்திலும் கண்ணிமைத்தல் சரியான அளவு பின்பற்றப்படவில்லை எனில் படம் கேளிக்கைக்குரியதாகும் 

7-முன்னோட்ட காணொளியில் ஒரு காட்சியில் கோச்சடையான் தன் முதுகில் ஐந்து தலை நாகம் படத்தை பச்சை குத்தியுள்ளது போல் காட்டப்படுகின்றது அதுவும் எவ்வித தெளிவு இல்லாமல் சிறு பிள்ளை கிறுக்கலாக உள்ளது...அந்த காலத்தில் ஒரு மன்னர் தன் முதுகில் இந்த காலத்து வாலிபர்கள் போல் பச்சை குத்தும் வழக்கம் கதாபாத்திரத்தின் நம்பகத்தன்மையை கெடுக்கின்றது.....

இதைப் படிக்கும் போது....... எப்படியெல்லாம் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டு விமர்சகர்கள் ஆராய்ச்சி செய்கின்றார்கள் அய்யோ...பாவம் கோச்சடையான் என்ன ஆகப்போகிறதோ...? 

இந்த அளவுக்கு நம்ம தமிழ் ரசிகர்கள் தங்கள் சூப்பர் ஸ்டார் படத்தை ஆராய்ச்சி செய்யமாட்டார்கள் அதனால் இங்கே கோச்சடையான் வெற்றி உறுதி...ஆனால் 12 மொழிகளில் உருவாக்கப்பட்டு உலகம் முழுவதும் படம் காட்டப் போகின்றார்களே அதை நினைக்கும் போதுதான் அய்யோ...பாவம் உலக சினிமா ரசிகர்கள் 

இதே தொழில் நுட்பத்தில் 1500 கோடி செலவில் வந்த அவதார்  பட இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இந்த 125 கோடி மலிவு விலை அவதார் கோச்சடையானை பிரத்தியேகமாக பார்க்கப் போகிறார்...அய்யோ பாவம் என்ன ஆகப்போகிராரோ? 

இனிமேல் படம் நடிக்க மாட்டேன் என்று நம்ம சூப்பர் ஸ்டார் சொன்னதுபோல் இனிமேல் ஹாலிவுட்டில் சினிமாவே எடுக்கமாட்டேன்....கோலிவுட்டுக்கு வந்துவிடுவேன் என்று அவர் சொன்னாலும் ஆச்சரியமில்லை.........


போற்றுவோர் போற்றட்டும் தூற்றுவோர் தூற்றட்டும் இந்தியாவின் முதல் புதுமைப் படைப்பான கோச்சடையான் மூலம்  புரட்சி பெண் இயக்குனர் சௌந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின் வெற்றி பெற வாழ்த்துவோம்.................

UA-32876358-1