google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: October 2012

Wednesday, October 31, 2012

உழைத்து வாழும் உயிர்கள்!


 
ஷீலா கோஷ்-
ஒரு 83 வயது பெண்.
இந்திய கிழக்குப் பகுதியில்
மேற்கு வங்காளம் மாநிலத்தில்
பாலி என்ற ஊரில் வசிக்கிறார்

ஒரு சில மாதங்களுக்கு முன்பு
அவரது ஒரே மகன்
இதய நோயால் காலமானார்.
இடிந்து போகவில்லை அவர்.

உழைத்து வாழும்
உன்னத எண்ணத்தில்
ஒவ்வொரு நாளும்
அந்தப் பெண்மணி
பாலியிலிருந்து
கொல்கத்தாவுக்கு வந்து
தின்பண்டங்கள் விற்று
கிடைக்கும் வருமானத்தில்
தன்மானத்தோடு வாழ்கிறார்

சூழ்நிலைகள் எளிதாக தள்ளியது
அந்தப் பெண்மணியைத்
பிச்சையெடுக்கும் நிலைக்கு.

அவரது கண்ணியம் மரியாதை
வாழ்வின் இறுதிவரை
உழைத்து வாழ செய்கிறது

தொண்டு நிறுவனங்கள்
அவரது துயர் தீர்க்க வந்த போதும்
அவரோ தன் சொந்த வாழ்க்கையை
தன் சொந்த கால்களிலேயே வாழ்கிறார்

உதவ நினைக்கும் மக்கள்
உதவுகிறார்கள் அவருக்கு
அவரிடம் பண்டங்களை வாங்கி

இன்று வரை இது நடக்கிறது
இப்படியும் இருக்கிறார்கள்
உழைத்து வாழும் உயிர்கள்!

(Thanks.Written by Stephen on October 9th, 2012
Story courtesy of Sufia Khatoon,A college student in Kolkata 
in academictips)   

எறும்பும் இறகும்



அந்தச் சிறிய எறும்பின்
கண்களில் பட்டது
ஒரு பறவையின் இறகு....

அளவிட முடியாத
ஆனந்தம் கொண்டு 
அந்த இறகை
தன் பொந்து வீட்டுக்குள்
இழுத்துச் செல்ல நினைத்தது

அந்தச் சிறிய எறும்பு...
பலமுறை தன் பாதையில்
தடைகளை எதிர்கொண்டு
இடை நிறுத்தப்பட்டாலும்
தேவையான மாற்றுப்பாதையை
தேடிக்கொள்ளும் உடனே

ஒரு கட்டத்தில் அதன் பாதையில்
மிகப்பெரிய விரிசல்....
ஆனாலும் அந்த எறும்போ
விரிசலின் விளிம்பு வரை
அந்த இறகை இழுத்து வைத்து
நீண்ட தூரம் பயணித்து
விரிசலின் மறு பக்கம் சென்று
இறகை மீண்டும் இழுக்கத் துவங்கியது

இறுதியில் அந்த எறும்பு
அதன் பொந்து இல்லத்தை
அடைந்த போது...
அதன் சிறிய துளை வீட்டுக்குள்
அந்தப் பெரிய இறகு நுழையவில்லை

ஆனாலும் அந்த எறும்பு
அந்த இறகு மீது ஏறி
வெற்றிக் களிப்பில் மிதந்தது
அதன் காவியப் பயனத்தில்தான்
எத்தனை இடறுகள்....

இந்த எறும்புக்கதை துரும்புக்கதை
இங்கே எதுக்கப்பா....?
என்று கேட்கும் நண்பர்களே!

இப்படித்தான்
என் எழுத்துப் பயணத்திலும்
எனக்கு ஏகப்பட்ட இடையூறுகள் 

ஏகப்பட்ட இடையூறுகள்
வந்து சேரும் மிரட்டல்கள்
ஆனாலும் என் பயணம் தொடரும்
என் காலமும் முடியப்போகிறது
இப்படி ஒருவன் இருந்தான் என்று
இந்த உலகம் நாளை நினைக்கட்டும்

இன்று நானோ
ஏ.சி. அ(சி)றையில் இருக்கும்
கோட்டும் சூட்டும் போட்ட
கேடு கெட்ட கொத்தடிமை
அடிமை....
இங்கு இருந்தால் என்ன...?
எங்கு இருந்தால் என்ன....? 

எழுதுவது என் பிழைப்பு அல்ல
எழுதுவது என் கடமை
எப்படி எனக்கு வாக்களிக்கும் உரிமையோ
அப்படித்தான் அதுவும்
சமுக அவலங்களை எழுதுகிறேன்
அவலம் செய்வோருக்குத்தான்
அது சங்கடமாயிருக்கும்
அவதூறுகளும் அருவெறுப்புகளும்
எதுவும் என் எழுத்தில் இருக்காது.
அதிகமாக நான் எழுதுவது
மனிதர்கள் பற்றி அல்ல
குரங்குகளும் குருவிகளும்
கடிக்கலாம் கொத்தலாம் என்னை
புகார் கொடுக்கும் அளவுக்கு
அவைகளுக்கு புத்தி இல்லை. 


Ants create a lifeboat in the Amazon jungle - BBC wildlife 

                                                                 Thanks-YouTube-Uploaded by BBCWorldwide

 

காகித வெட்டுச் சிற்ப்பங்கள்



ஒரு சாதாரண காகிதம்
வெள்ளை A4 தாள்
பீட்டர் கால்லேசென் கைகளில்
காகித வெட்டுச் சிற்ப்பங்களாய்...   

வெட்டி மடிக்கப்பட்ட
காகிதங்கள் கலையுணர்வுடன்....
எலும்புக்கூடுகள்
பிரமுகர்கள்
பறவைகள்
முப்பரிமான உருவங்களில்
காகித வெட்டுச் சிற்ப்பங்கள்  

காகிதங்கள் தாங்கி வரும்
செய்திகள் போல்
அவருடைய
காகித வெட்டுச் சிற்ப்பங்களும்   
செய்திகள் உரைக்கும்

செத்துக்கொண்டிருக்கும் மலர்
கூண்டில் பூட்டப்பட்ட குருவி
இது போன்று அவர் படைப்புகளில்
பேரிடர் இடுக்கண் பெருந்துன்பம்
மர்மமாய்ப் புதைந்துக் கிடக்கும்  

            Thanks-YouTube-Uploaded by deutschewelleenglish



Tuesday, October 30, 2012

பிரபலங்களும் அவலங்களும்



யார் இங்கே பிரபலங்கள்?
அவர்களின் செயல்கள்
அவசியங்களா? அபத்தங்களா?
இல்லையேல்
சமுதாய அபலங்களா?

இதற்கு ஒரு முடிவு வேண்டும்
இன்று ஒரு தீர்வு வேண்டுமென்று  
அந்தக் காட்டில் இருந்த குரங்குகள்
கூட்டம் கூடி ஆலோசனை செய்தன

அதில் ஒரு குரங்கு சொன்னது
"நாமெல்லோரும் குரங்குகள்தானே
ஏதோ ஆடி பிழைப்பு நடத்தும்
அந்தக் குரங்கு எப்படிப் பிரபலமானது?
அதற்குக் கா(நா)ட்டாமை செய்ய
என்ன தகுதி இருக்கு?" என்று
கூத்தாடிக் குரங்கை சீண்டியது.
நானும் ஆடுவேன் பாருங்கள்
என்று துள்ளிக் குதித்தது
அந்தக் கூத்தாடி குரங்கோ
கோபத்தில் கீழ்த்தரமாய் கத்தியது   
சபை என்றும் பாராமல்

இன்னொரு குரங்கோ-
"பாட்டுப் பாடும் இந்தக் குரங்கு
இங்கே எப்படிப் பிரபலமானது?" 
என்று பிராண்டியது
ஒரு பாடகிக் குரங்கை பார்த்து
நானும் பாடுவேன் கேளுங்கள்
என்று வாயைத் திறந்து கத்தியது
அந்தப் பாடகிக் குரங்கோ கோபத்தில்  
புகார் செய்யப் புறப்பட்டப் போனது

அங்குக் கூடியிருந்த குரங்குகள்
அடி பிடி தகராறு களோபகரம்
ஒவ்வொருவரும் தாங்களே பிரபலமென்று
அவரவர் திறமைகளைப் எடுத்து விட்டன

அதில் ஓன்று ஆண்டவனிடம் பேசுவதால்
அதுதான் பிரபலமென்று அடம்பிடித்தது   
பேசுவதில் பிரபலம் எழுதுவதில் பிரபலம்
உண்பதில் பிரபலம் உறங்குவதில் பிரபலம்

அப்போது அங்கே வந்த கிழட்டு குரங்கு
"ஏன் நீங்கள் மனிதர்கள் போல்
சண்டை சச்சரவு செய்து கொண்டு?  
நீங்கள் அத்தனை குரங்குகளும்
இங்கே பிரபலமான குரங்குகளே!"
தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
கூட்டம் கலைந்தது

திடுக்கிட்டு விழித்தேன்
திண்டாடிப்போனேன்
கண்டதெல்லாம் கனவு

எங்கும் இல்லை குரங்குகள்!
எங்கும் இருந்தார்கள் மனிதர்கள்!
  images thanks - google

Monday, October 29, 2012

காரேவும் கரிக்கோல் ஓவியங்களும்


  அடோன்னா காரே-
மூன்று வயதிலிருந்து
முத்தாய்ப்பான ஓவியங்கள்
வரைந்தப் பெண் என்றால்  
நம்ப முடியவில்லையா?
ஆனால் அதுதான் உண்மை!

பென்சில் அழிப்பான் கரிக்கோல்
அதுதான் அவரது ஆயுதங்கள்
ஓவியம் தீட்டும் தூரிகைகள்

கண்ணில் காணும்
விலங்குகள் மனிதர்கள்
அவர்களின் செயல்கள்
அதுவே ஓவியக்கருக்கள்

அவரது வரைபடங்கள்
திட்டமிடப்பட்டவைகள் அல்ல
நம் நிஜ உலகின் செயல்களை
நிதர்சனமாகச் சொல்லும்
அவர் அனுபவித்த அபத்தங்கள்

அவருடைய ஓவியங்கள்
குழந்தைகள் பெரியவர்கள்
கற்பனைகளை வளர்த்து
வேறு ஒரு உலகத்துக்கு
அழைத்துச் செல்லும் கவிதைகள்

அவருடைய ஓவியங்கள்
சாதாரண நிகழ்வுகளை
உயிரினங்களால் நடிக்க வைத்து
சொல்லப்படும் கதைகள் 

Wins $200,000 Art Prize For 'Elephant' 

பள்ளி  ஆசிரியையான 

அவர்  வரைந்த 'ELEPHANT' ஓவியம்

அளவற்ற  செல்வத்தை 

அவருக்கு அளித்தது

 

Thanks-YouTube-Uploaded by Candy Dougherty

 

 

 

 

**********************************************************

நானும் மூன்று வயதில் 
வீட்டுச் சுவற்றில் போட்டேன்
கரிக்கோடுகள்.....
அம்மா முதுகில் போட்டாள்
மூன்று வரிக்கோடுகள் 
 

ஒரு பாடகியின் கதை!




அவள் ஒரு சிறந்த பாடகி
அவள் பாட ஆரம்பித்தால்
கூட்டம் ஆர்பரிக்கும்
அவள் குரலுக்குத்தான்
அந்தக்கூட்டம்  என்று நினைத்தாள் 
ஆனாலோ 
கூட்டம் கூடுவது 
பாடும்போது அவள் 
அலட்டிக்கொள்ளும் 
தளுக்கு  முளுக்குக்கு என்று 
அவளுக்கு தெரியாது......

ஆனாலும் அந்தப் பாடகிக்கு
அவள் குரலில் திருப்தி இல்லை
இன்னும் இனிமையாக
இந்த உலகத்தையும்
இந்த உலக மக்களையும்
வசப்படுத்தும் வசீகரக் குரல்
வேண்டும் என்று நினைத்தாள்

இறைவனிடம் கேட்டாள்
அதற்கு  அவரோ
அவள் வரிசை வரும்போது
அவளுக்கு வயது
அறுபது ஆகிவிடும் என்றார்

அதனால் அவள் போனாள்
ஆங்கில வைத்தியரிடம்
அவர்களோ அவளுக்கு
தொண்டையில் அறுவை
செய்தால் போதும்
அறுவையில் தவறு எனில்
இருக்கும் குரலும்
இல்லாமல் போகும் என்றனர்

அதனால் அவள்
இயற்கை வைத்தியர்
இருப்பிடம் போனாள்
அவரோ சொன்னார்
ஆயிரம் குயில்களின்
பச்சை இரத்தம்
பருக வேண்டும் என்று.

அவளோ சைவபட்சினி
குயில் இரத்தம் குடிப்பது
வெளி உலகம் தெரிந்தால்
குலப்பெருமை போய்விடுமே
யாருக்கும் தெரியாமல்
வைத்தியர் வீட்டுக்கு போய்
இரவில் இரத்தம் குடித்தாள்

ஆயிரம் குயிலுக்கு
எங்கே போவார் வைத்தியர்?
அதனால் அவரோ
குயில்கள் கிடைக்காமல்
காக்கைகளைப் பிடித்து
குயில் இரத்தம் என்று
குடிக்கக் கொடுத்தார்.

இப்போதெல்லாம்
அந்தப் பாடகி
எங்கும் பாடுவதில்லை
வாயைத்திறந்தாலே
வரும் குரல் கா..கா.. 

வீட்டை விட்டும் அவள் 
வருவதில்லை வெளியே 
அவள் தேகம் மாறிவிட்டது 
அண்டங்காக்கை நிறத்துக்கு... 



Thanks-SoundCloud-
Men Laughing Sound Effect 1 by Melissa Carter
 

Sunday, October 28, 2012

மேதைகள் காட்டிய பாதைகள்!



நான்கு வயது வரை
பேசுவதற்கு
வாயைத் திறக்கவில்லை
ஏழு வயது வரை
எழுத்துக் கூட்டிகூட 
படிக்க முடியவில்லை
பெற்றோரும் ஆசிரியரும்
மண ஊனமுற்றவன் என்று
முடிவு செய்தார்கள்
அந்தச் சிறுவனே
இயற்பியலின்
பொதுச் சார்பியல் கோட்பாடு
கண்டறிந்தமைக்கு
நோபல் பரிசு பெற்ற
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

எந்த கற்பனை வளமும்
எந்த அரிய சிந்தனையும்
இல்லாதவர் என்று
பத்திரிக்கை ஆசிரியரால்
பதவி நீக்கப்பட்டவரே
உலகம் முழுவதும்
திரைப்படம் தீம் பார்க் என்று
பில்லியன்கள் குவித்த
வர்த்தக நாயகர் வால்ட் டிஸ்னி.

பள்ளிப் படிப்பிலும்
பின்தங்கி இருந்தவர்
குடும்பப் பண்ணையை
நிர்வகிப்பதிலும்
தோல்வியைத் தழுவியவர்
அவரே அறிஞர் ஐசக் நியுட்டன்
பிரபஞ்ச ஈர்ப்பு, இயக்கவியல்,
ஒளியியல் விதிகளை
உலகத்துக்கு அறிவித்தவர.

எதையும் கற்றுக்கொள்ளத்
தெரியாத முட்டாள் என்று
ஆசிரியர்களால்
புறக்கணிக்கப்பட்டவன்
இரண்டு முறை வேலையிலிருந்து
புறக்கணிக்கப்பட்டவன்
எதற்கும் அருகதையற்றவன் என்று
எல்லோருக்கும் ஏளனமானவன்  
ஆயிரம் முறைகளுக்குமேல்
ஆய்வு தோல்வியடைந்தாலும்
அயராமல் வெற்றியடைந்து
மின்சார விளக்கை கண்டறிந்து
மேதையானவர் தாமஸ் எடிசன்


தோல்வியடையும் போது
துவண்டு போகாதே!. என் தோழா!
இந்த மாமேதைகளை
மனதில் நினைத்துக் கொள்!
இந்த மந்திரத்தை
மனதில் உச்சரித்துக் கொள்!

“சில நேரங்களில் தோல்விதான்
வெற்றிக்கு முதல்படியாக இருக்கும்

அரசவைப் பாடகியின் விம்மல்!


அரசியைப் பாட்டுப் பாடி
அன்றாடம் தூங்க வைப்பதே
அவளின் வேலை
அவள்தான் அரசவைப் பாடகி  

அன்றிரவு அரசியை தூங்க வைக்க
பாடியவள்...விம்மி விம்மி அழுதாள்.
அரசிக்கு வந்த தூக்கம் துயரமானது

“அரசவைப்பாடகியே!
ஏன் அழுகிறாய்?
உன் தும்மலுக்கு..ச்ச
விம்மலுக்குக் காரணம் என்ன?
என்று வினாவினாள் அரசி.

அரசவைப் பாடாகி
அழுது வடிந்தால்....
தூக்கம் போய்விடுமே
என்று நினைத்த அரசி 
விடிந்ததும் ஆணையிட்டாள்
காவலற்படைத் தளபதிக்கு

அரசவைப்பாடகியின்
அழுகைக்குக் காரணமானவர்களை
கைது செய்து சிறையிலடைத்து
சித்ரவதை செய்யுங்கள் என்று.

அடுத்த நிமிடமே

இரண்டு பேரைப் பிடித்து
சிறையில் அடைத்தார்கள்
அரசியின் ஆணைக்கு இணங்க
காவற்படை காவலர்கள்
இன்னும் நான்கு பேரை
வலைவீசி தேடினார்கள்

மக்களுக்கோ
என்ன காரணம்...?
என்று தெரியவில்லை.
தெரிந்தவர்களும்
அரசியும் அரசவைப் பாடகியும்
ஒரே இனம் என்பதால்
அப்படியே அடங்கிப்போனார்கள்.

அந்த ரகசியம் என்னவென்று
அரசல் புரசலாக
நாட்டில் உலாவியது....

அன்றொரு நாள்
அரசவைப் பாடகி
கோயில் கச்சேரியில்
அஞ்சு கட்டையில் பாட

அந்த ஆறு பேரும்
அடக்க முடியாமல்
கொட்டாவியோ...?
கெட்ட ஆவியோ...?
விட்டு விட்டார்களாம்

அந்த நாற்றத்தால்  
அரசவைப் பாடகியின்
தொண்டை கட்டிக்கொண்டு
தமிழில் பாடுவது
தமிங்கலத்தில்
பாடுவது போல் ஆனதாம்.       

அய்யயோ....
இனிமே யாராவது பாடுனா...
வாயையும் ஆ...வாயையும் 
பொத்திகனுமப்பா?  
*******************************************


     

Saturday, October 27, 2012

கனவில் வந்தார் சாக்ரடீஸ்



நேற்று கனவில் வந்தார்
கிரேக்க தத்துவஞானி சாக்ரடீஸ்
கிறங்கிப்போச்சு என் தலையும்
நான் பெற்ற அவஸ்த்தையை
நீங்களும் பெறவேண்டுமெனில்
மேலும் படியுங்கள்.....

அன்பும் அம்பு போன்றதுதான்
நம்மைவிட்டுப் போனது
நம்மிடம் திரும்ப வராது.   

நண்பர்களால்
காயம்படும் போதும்
மன்னித்துக்கொண்டிருந்தால்
நம்மை நல்ல நண்பன் என்பார்கள்

ஒரு நொடியில் செய்த தவறு
ஆயுசுக்கும் நம்மை அச்சுறுத்தும்

நேசித்தவர்களைப் பிரியும்போது
அன்பான வார்த்தைகளை
விதைக்கவேண்டும்
என்றாவது ஒருநாள் சந்திக்கும்போது
அவை கனி தரும் மரமாயிருக்கும்

கொஞ்ச நேரம் நடை பயின்றால்
நிறைய நேரம் நலம் தரும் உடலுக்கு
கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தால்
நிறைய நேரம் ஆனந்தம் தரும் உள்ளத்துக்கு

சிலநேரங்களில் நம் கோபம்
நியாயமாகத் தெரியும்....
அதற்காக ஆத்திரப்பட்டால்
அநியாயத்தில் முடியும்

நம்மை நாமே மன்னிக்க தெரிந்தால்  
அடுத்தவர்களை மன்னிக்க முடியும்    

அடுத்தவரின் ரகசியத்தை 
அறிந்திட துடிப்பது.... 
தனது ரகசியங்களை 
பாதுகாக்க தெரியாது 


(யப்பா.....போதும்பா....
இதுக்கு மேலும் வேண்டாமப்பா
இப்போதுதான் தெரிகிறது
ஏன் அவரை கொன்றார்கள்
விஷம் கொடுத்து என்று)  

************************************************

நேர்மையான  காவலர்களே!
வன் கொடுமையோ?
பன் கொடுமையோ? 
இப்படி பதிவெழுதும் பதிவர்களை 
உள்ளே தூக்கி போடமாட்டீர்களா?
கணம் நீதிமான்களே!
இவருக்கு அயிந்து வருடங்கள் போதாது 
ஆயுசுக்கும் உள்ளே கிடக்க 
சட்டத்தில் ஏதும் வழியிருக்கா?  

அது  சரி...நீ யாரம்மா?

பாண்டியர் அரசவையில் 
ஆசானப் பாடகியாக இருந்த 
பிரபல பாடகியின் கொள்ளுப்பேத்தி!
இந்த  பதிவர் மறைமுகமாக 
என்னைப் பற்றி எழுதியதால் 
எனக்கு மண உளைச்சல்....
தொண்டை கட்டிக்கொண்டது 
என்னால்  பாட முடியவில்லை 

UA-32876358-1