google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: May 2013

Friday, May 31, 2013

10-ஆம் வகுப்பு தேர்வில் மாணவிகளே முன்னணி ஏன்?


10-ஆம் வகுப்புத் தேர்வு முடிவில் வழக்கம் போல் இந்த வருடமும்  மாணவிகளே அதிக மதிப்பெண்கள்  பெற்று 9 பேர் முதலிடத்தில் இருக்கிறார்கள்...இதனால் ஆண்களைவிடப் பெண்கள் அறிவில் சிறந்தவர்கள் என்ற முடிவுக்கு வந்தால்...? என்னவாகும் இந்தப்  பதிவைப் படிக்கும்  உங்களுக்கு என் மீது கோபம் வரும்... நீயென்ன  பெரிய விஞ்ஞானியா...? என்று.

http://demeliou.files.wordpress.com/2012/12/screen-shot-2012-12-14-at-7-20-29-am.png?w=470&h=251

உருவத்தில் ஆண்கள் மூளை அளவில் பெண்கள் மூளையை விட 10% அதிகம்.அதனால் ஆண்கள் அறிவில் சிறந்தவர்கள் என்ற முடிவுக்கு வரமுடியாது...அந்த அதிக அளவு வேறுபாடு ஆண்களுக்கு அதிகத் திறன் கொடுத்தாலும் அதனால் அவர்கள் அறிவுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை..அது பெண்களைவிட ஆண்களின் அதிக உடல் உயரம் எடை மற்றும் சதை அளவைப் பொறுத்தது மட்டுமே 

http://www.iovalgo.com/wp-content/uploads/2011/03/maschilismo.jpg
பல ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்த உண்மை.....பிரச்னையைத் தீர்ப்பதற்கு முடிவெடுக்கும் திறன் மற்றும் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் வலிமை ஆண்களைவிடப் பெண்களுக்கு அதிகம்....ஏன் இப்படி?


ஆண்களுக்குத் தீவிரமாக இடது மூளை ஆதிக்கம் செலுத்துகிறது.அதே நேரத்தில் பெண்களுக்கு இடது..வலது இடையே மூளையின் செயலாக்கம் சமச்சீராக உள்ளது. சமுகத் தொடர்பு கொள்ளுதல்(communication) ஆண்களைவிடப் பெண்கள் எளிதாக உணர்ச்சிவசப்படாமல் செய்யமுடியும் 

http://mumbai.indiadynamics.com/adpics/50b464b0799409692a460258b.jpg

இப்போது தெரிகிறதா...? ஏன் ஹோட்டல் வரவேற்பாளர்கள், தொலைப்பேசி ஆபரேட்டர்கள்,(சார்..நாங்க சீ...ட்டி பேங்ல இருந்து பேசுறோம் உங்களுக்குப் பெர்சனல் லோன்..கிரெடிட் கார்ட்..வேண்டுமா?.) மற்றும் நர்ஸ்கள் சமுகச் சேவகிகள் இப்படி நிறைய துறைகளில் பெண்களே முன்னிலை வகிக்கிறார்கள் என்று?

http://img-fotki.yandex.ru/get/6611/14486906.b/0_7757c_15c84719_L

அதே நேரத்தில் கணக்கில் ஆண்கள் சூரப்புலிகள்...கணக்குனா அந்தக் கணக்குப் பண்ணுவது அல்ல அண்ணேன்..உண்மையான கணக்கு(Maths)..நம்ம ராமானுஜம் அய்யா மாதிரி..இன்னும் நிறைய வான்வெளி அறிஞர்கள்..அப்புறம் மழை வருமானு சொல்ற நம்ம ரமணன் அண்ணன் இதில வருவாரா..? வருவார் ஆனால் வரமாட்டார்..இது ஏன் தெரியுமா? மூளைச் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தும் மூலையில் உள்ள தாழ்வான சுவர்போன்ற வட்டப்பிரிவு (inferior-parietal lobule) பெண்களைவிட ஆண்களுக்குப் பெரியது...அதன் செயல்பாடுதான் கணக்குப்போடுவது...நம்ம மளிகைக்கடை அண்ணாச்சிகளைப் பார்த்திருப்பீங்களே........? 

https://si0.twimg.com/profile_images/2344677911/image.jpg

மனஅழுத்தம் வரும் போது அய்யோ...நம்ம அண்ணன்மார்களைப் பார்க்கணுமே சண்டைச் சேவல்கள்..(ஆனால் வீட்டுள்ள மட்டும் அப்படியே மாற்றம் ..இல்லனா சோத்துக்குத் திண்டாட்டம்?) ஆனால் பெண்கள் தங்களுக்கு இயற்கையாக அமைந்துள்ளது ஆதரிக்கும் குணம் பராமரிக்கும் குணம் 

https://si0.twimg.com/profile_images/2057717901/________.jpg
எப்படி ஆண்கள் கணக்கில் சூரப்புலிகளோ? அப்படியே பெண்கள் மொழி சார்ந்த பணிகளில் படா கில்லாடிகள் அதற்குக் காரணம் இந்தச் செயல்பாடுகளைச் செய்யும் இரு பக்க மூளைகளில் ஆண்கள் ஒரு பகுதியை அதிகம் உபயோகிப்பதில்லை...(இப்போது தெரிகிறதா..பெண்கள் ஏன் வாயாடிகள் என்றும்...ஆண்கள் நிறைய பேர் ஏன் மௌனச் சாமியார்கள் என்றும்)

freeonlinephotoeditor
என்ன ஒரு விந்தை பார்த்தீர்களா...? தேர்வு போன்ற அறிவை பரிசோதிக்கும் செயல்களில் பெண்கள் மூளைப் பகுதியில்(parietal region) தடிமனாக இருப்பதால் அவர்கள் அதில் சிறந்து விளங்க முடியாது...எளிதில் சோர்வடைவார்கள் என்று ஆய்வு சொல்கிறது...ஆனால் நிஜத்தில் நடப்பது என்ன....? பள்ளி..கல்லூரி தேர்வுகளில் மாணவர்களைவிட அதிகம் மாணவிகளே சிறப்பாகத் தேர்ச்சி அடைகிறார்கள்...இதுதான் கால மாற்றம்...இனிவரும் காலங்களிலும் பெண்களே உலகைக் கட்டி ஆளுவார்கள்

http://img.banjig.net/d/bb/user_uploads/195781/think_127f9766.jpg
(அண்ணேன்....நம்ம ஆளுக முக்காவாசிப்பேரு மூளைய பத்திரமா இருக்கட்டும்னு டாஸ்மாக்ல அடகு வச்சிப்புட்டாயிங்க...அவ்வவ) 
****************************************************************************
           சும்மா சிரிங்க...மக்கா...சிரிங்க
****************************************************************************
இந்தியாவின் பிரதமராக என்ன  தகுதி வேண்டும்.....?

கமல்ஹாசன்-வேட்டி கட்டியிருக்க வேண்டும் 
சரத்குமார்-சேலை கட்டியிருக்க வேண்டும் 
கருத்து கருந்தேள்-வேட்டியோ சேலையோ எதையாவது கட்டிக்கிட்டு போங்கப்பா...சும்மா போனா நல்லாயிருக்காது..ஆங்    







http://reviews.in.88db.com/images/Singam-2-first-look/Singam-2-Surya-first-look-pics.jpg





கவிதை..அரசியல்...மதம் பற்றி எழுதினால் தினம் 150 பேர் வாசிப்பதில்லை அதே நேரம்...சினிமா விமர்சனங்கள் எழுதினால் ..நேற்று 5 மணிக்கு எழுதிய குட்டிப்புலி விமர்சனத்துக்கு இன்று மாலை 5 மணிவரை வாசித்தவர்களின் எண்ணிக்கை............3500 க்கும் மேல் ...குட்டிப்புலிக்கே இப்படியா...? அப்படினா சிங்கம்-2 க்கு எப்படியோ...?

Thursday, May 30, 2013

குட்டிப்புலி-சினிமா விமர்சனம்



 



குட்டிப்புலி-
படம் ஆரம்பமே அதிரடியாக குட்டிப்புலியின் அப்பா சண்டியர் பெரிய புலி விளக்குமார் விற்கும் தன் சாதிப் பெண்ணை கையைப் பிடித்து இழுத்த ரவுடியை வீடு புகுந்து ஒரே போடு போட்டு வேட்டையாடி விட்டு....  அகப்பட்டுக்கொண்டதும் தன் ஆட்களாலேயே தன் தலையை அறுத்து (கவுரவக்)கொலை செய்யச் சொல்லும்.....என்று கொலைவெறியோடு ஆரம்பித்தாலும்...படம் நகர்வதோ காதல்...நகைச்சுவை...அம்மா-மகன் சென்டிமென்ட் என்று கலக்கலாகப் போகிறது.


கதை-இளம்வயதில் சண்டியர் கணவனை இழந்த தாய் (சரண்யா பொன்வண்ணன்) தன் மகன் (சசிகுமார்)குட்டிப்புலியும் சண்டியராக மாறிவிட்டதால் தன் மகனைக் காதலிக்கும்  பெண்ணை (லட்சுமி மேனன்) திருமணம்  செய்து வைக்க முயலுவதும்...தன் மகன் குட்டிப்புலி  செய்த சண்டியர்தனத்தால்  அவன் உயிருக்கு ஏற்படும் ஆபத்திலிருந்து அவனைக் காப்பாற்றி.... அவர்கள் திருமணம் நடந்ததா...? என்பதே கதை...


மதுரை கதைக்களம் என்றால் சும்மாவே வெளுத்துவாங்கும் நடிகர் சசிகுமார் முந்தய படங்களைவிட இதில் தனித்து நின்று ஒற்றைப்புலியாக வெளுத்து வாங்குகிறார்...வேட்டி-லுங்கியில் வந்து அவர் போடும் அதிரடி சண்டைகளாகட்டும் லட்சுமி மேனனுக்கு காதல் கடிதம் கொடுத்துவிட்டு ஓடுவது..காதல் வந்தப்பிறகு ஜீன்ஸ் டி-சர்ட் போட்டு ஊருக்குள் அலப்பறை பண்ணுவது ஆக .காதல் ஜொள்ளு ஆகட்டும் கோயில் உண்டியலில்பணம் எடுக்கும் வித்தையிலாகட்டும் இப்படி நிறைய...அவருக்கே உரிய நகைச்சுவை உணர்வோடு குட்டிப்புலி பெரிய புலியாகவே நல்ல நடிப்பு வேட்டை 

பாரதியாக வரும் லட்சுமி மேனன் அழகோ அழகு..உடையிலும் நடையிலும் கிராமத்துப் பெண்களுக்கே உள்ள அப்படியொரு அழகுத்தோற்றம்..கதைக்கேற்ற கேரளா இணிப்பு பலகாரம்....?(என்னவாக இருக்கும் என்று நீங்களே ஊகித்துக்கொள்ளுங்கள்)

அம்மாவாக வரும் சரண்யா அப்படியே கிராமத்து தாயாக மாறிவிட்டார்..தங்கு தடையின்றி வசனம் உச்சரிப்பு அவரது அனுபவத்தின் பிரதிபலிப்பு..ஜவுளிக்கடையில் குட்டிப்புலிக்கு ஜீன்ஸ் பேன்ட் எடுக்க அளவுக்கு சாருக்கானைக் காட்டுவதும் ஷூ..கண்ணாடிகளை அள்ளிக்கொண்டு பண்ணும் அட்டகாசங்களை நினைத்தாலே அடக்க முடியாத சிரிப்பு வருகிறது...அதே நேரம் தன் மகனைக் கொலைசெய்ய துடிக்கும் வில்லனை மிளகாய் பொடி தூவி வலைபோட்டு கட்டி...அடப்பாவமே...அப்படியே தலையைத் துண்டிப்பது ...கொடூரமாகத் தெரியவில்லை ...மகன் மீது உள்ள பாசத்தைக் காட்டுகிறது.

freeonlinephotoeditor
எழுத்து-இயக்கம் ...முத்தையா...சோடைபோகவில்லை ..அட..அதிரடி கொலைகளைக் கூட இப்படை காமெடி கொலையாக மாற்றிவிட்டரே...இப்போதைய யதார்த்தமான சிந்தனை...அதே நேரம் அரசியல்வாதி ஒருவரை  எதிர்த்து பள்ளிப் பேச்சுப்போட்டியில் பேசியதற்காகவே  ஒரு சிறுவனை பொதுமக்கள் மத்தியில்  இப்படி கொடுராமாக கொள்வதாக காட்டியது..சினிமாவாகவே இருந்தாலும் மனதுக்கு நல்லதாகத் தெரியவில்லை...வில்லனின் கொடூரத்தை காட்டவா...? ஆனால்..அதுதான் அந்த கொலைதான் படத்தின் திருப்பமாக ஒரு தாய் வில்லனை கொலைசெய்யும் அளவுக்கு மாற்றிய கதைக்காகவா...? அப்படிஎன்றால் ஒ.கே.

freeonlinephotoeditor
கிப்ரான் இசையில் அனைத்துப் பாடல்களும்  அருமை...தாட்டியரே தாட்டிய்ரே ..பாடலும் காத்து காத்து பாடலும் மனதில் நிற்கிறது.படத்தில் நிறைய ரீமிக்ஸ் பாடல்கள் நகைச்சுவைக்காக...

                                   thanks-YouTube-by IGTAMILMOVIES

இப்படிநல்லதொரு திரைக்கதையும் கிராமத்து கதைக்களமும் சிரிப்பும் காதலுமாக செல்லும் குட்டிப்புலி....வித்தியாசமான புலிதான் ...தாய் பாசத்தை உணர்ந்துக்கொள்ள ஒவ்வொருவரும் ஒருமுறையேனும் பார்க்கவேண்டியப்படம்...வசனங்கள் அனைத்தும் அருமை... அதிலும் கல்லாக இருக்கும் சாமிக்கு காசு பணம் எதற்கு...? இப்படி நிறைய குத்தல்கள் உண்டு.. 

இது குட்டிப்புலி அல்ல....மைனர் புலி...சண்டியர் புலி.. காதல் புலி...காமெடி புலி..முத்தையாவின் எழுத்து இயக்கத்தில் சசிகுமாரின் குட்டிப்புலி..  நல்லாவே பாயுது
    

Wednesday, May 29, 2013

மாசாணி-சினிமா விமர்சனம்

http://cinemalead.com/photo-galleries/maasani/wmarks/maasani08.jpg
 மாசாணி-
படம் துவங்கும்போதே சிலை செதுக்கும் சிற்பியின் உளிச்சத்தம்..நள்ளிரவு இடி மழை...இடையிடையே பிரசவ வேதனையில் ஒரு பெண் குரல்...குழந்தை அழுகை...அதைத் தொடர்ந்து ஆ...அதி பயங்கரமாக  ஆரம்பிக்கும் பேயின் ஆட்டம் இடைவேளை வரை நீடிக்கிறது....

freeonlinephotoeditor

சேலம் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் நாட்டாமை சரத்பாபு எவ்வளவோ முயன்றும் அரைகுறையாக வடிக்கப்பட்டு நிற்கும்  அம்மன் சிலையை முடிக்க வரும் எல்லாச்  சிற்பிகளையும் ஒரு பேய் விரட்டியடிக்கிறது...அதனால் சரத்பாபுவின் மச்சான் ஆடுகளம் நரேன் புது நாட்டாமையாகப் பதவியேற்று..ஒரு வாலிப சிற்பியை அழைத்துவந்து அம்மன் சிலையை  முழுமையடையச் செய்கிறார்...அந்த வாலிபன் யார் என்பதும் மாசாணியாக அலையும்  பேய்க்கும் அவனுக்கும் என்ன உறவு...? அவனை மட்டும் அந்தப் பேய் எப்படி அனுமதிக்கிறது...? என்பதும்தான் படத்தில் சஸ்பென்ஸ்...மர்மம் தெரிந்துவிட்டால் உங்களுக்குப் படம் பார்க்கும் சுவாராசியம் பேய்..ச்சே....போய்விடும் 

freeonlinephotoeditor
முதல் நாட்டாமை சரத்பாபுவின் தம்பியாக முன்னால் செந்தூரப்பூவே நாயகன் ராம்ஜி மீண்டும் வந்து அதே இளமைத் துள்ளலுடன் ஆனால் கொஞ்ச நேரமே வரும் பிளாஸ்பேக் இனியாவுடன் காதலில் கலக்குகிறார்...

சரத்பாபு மனைவியாக வரும் ரோஜா  வில்லியாக நடித்து...ராம்ஜியை காதல் கவுரவக்கொலை செய்யும் நிகழ்ச்சி மனதை வருடும் காட்சி...ஆனால் மைனர்...? சிட்டிபாபுக்கு அம்மா என்பதை நம்மால் ஜீரணிக்க முடியவில்லை 

freeonlinephotoeditor
அகில்- ஸ்ரீஜா ரோஸ்..ராம்ஜி-இனியா ...இப்படி அதி பயங்கரப் பேய்க்கதை ஊடே   மென்மையான காதல் கதை...பேயின் அதிரடித்தனத்திலிருந்து நமக்கு ஆறுதல்..இல்லையேல் நமக்குத் தலைவலி வந்திருக்கும்..N.பாசில் இசையில் மல்லி மல்லி பாடலும் ஏதோ...ஏதோ..பாடலும்  கேட்கலாம் 

போண்டா மணி,மனோபாலா,பாண்டி,..இப்படி பலர் பேய்க்கு பயந்து நடுங்கி நம்மைச் சிரிக்க வைக்கப் படாத பாடு படுகிறார்கள்..சிட்டிபாபு அம்மா அம்மா என்று ரோஜாவை அழைப்பதில் அரசியல் வடை..ச்சே...வாடை வீசுகிறது.

http://movierunning.com/tamil/wp-content/uploads/2013/05/Masani-Movie-Audience-Review.jpg

பத்மராஜ்-L.G.ரவிச்சந்திரன் இயக்கிய  மாசாணி பார்பதற்கு ஆன்மீக பக்திப்படம் போன்று இருந்தாலும் அதனுள்ளும் சில பகுத்தறிவு சிந்தனைகள், தீண்டாமை சாதிக்கொடுமைகள், காதல் கலப்புத் திருமணம்,ஊரை விட்டு ஒதுக்கி வைத்தல்...இபோதைய பிரச்சனைக்குரிய காதல் கவுரவக் கொலை போன்றவைகள் நாசுக்காக விதைக்கப்பட்டுள்ளன

http://www.cinemalead.com/photo-galleries/maasani/wmarks/maasani07.jpg

நடுவுல கொஞ்சம் பக்கத்தைக்காணோம் ப்பே..பே..ய் ரசிகர்கள் இந்த மாசாணி பேயை ரசிப்பார்களா...? தெரியவில்லை ஆனால் கிராமத்து கதை...தந்தை பெரியார்  பிறந்த தமிழ் நாடாயினும் நமது கிராமங்கள்  இன்னும் முழுவதுமாகப் பேய்களின் பொய்த்தொல்லையிலிருந்து  விடுபடவில்லை எனவே ஜெகன் மோகனி காலக்கட்டத்தில் வரவேண்டிய மாசாணி இப்போது முனி..1 ..2..3..காலகட்டத்தில்  வந்திருந்தாலும் பேய் படங்களுக்கும் சாமி படங்களுக்கும்  கிராமங்களில் நல்ல வரவேற்பு எப்போதும் உண்டு ..அதில் மாசாணியும் விதிவிலக்கல்ல 







மாசாணி-
பயங்கரமான.....? 
காதல்....பேய் படம் 
கவுரவக் கொலை 
சாதிக்கொடுமை 
தீண்டாமை பேய்களின் படம்





  Just press the PLAY button above audio player for ghost sound effects.....ha...haa

***********************************************************************
 
 




          மாசாணி- சினிமா விமர்சனம்
(அப்பாடா...எப்படியோ நல்லபடியாக மாசாணி சினிமா விமர்சனம் எழுதிவிட்டேன் அந்த மாசாணிப் பேயிடமிருந்தும் தப்பிவிட்டேன்)  

                                       thanks-YouTube-SaregamaTamil


Tuesday, May 28, 2013

மனிதநேய ஹைக்கூ கவிஞர்

freeonlinephotoeditor  

பாராம்பரியமிக்க ஜப்னீஸ் ஹைக்கூ கவிதைகள் எழுதியவர்களில் கோபயாஷி இஸ்ஸா என்பவர் பாஷோ,புசோன்,ஷிகி  போன்றவர்கள் வரிசையில் நான்கு முது நிலைக் கவிஞ்சர்களில் ஒருவராவார்.ஒரு தேநீர் கோப்பை என்று ஜப்பானியர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட இவர் 20,000 ஹைக்கூ கவிதைகளுக்கும் மேல் 
ஹச்சிபன்-நிக்கி,ஓரகாகறு,கூபன்-நிக்கி போன்ற கவிதை தொகுப்புக்கள் வெளியிட்டார்.இவருக்கு இன்றுவரை வாசகர் வட்டம் உள்ளது ஆச்சரியமே.....

http://www.gwarlingo.com/wp-content/uploads/2012/06/issa_the_haiku_poet-by-Hashimoto-Heihachi.jpg
இஸ்ஸா....இவரது முன்னோடி புசோனின் வடிவமைப்பை தனது கவிதைகளில் தொடர்ந்தாலும் இவருக்கென்று இருந்த தனித்தன்மை இவரது படைப்புகளில் மிளிரும் அது ஒருவித மனித நேயமிக்க (humanistic)அணுகுமுறை ஆகும் 
இவரது படைப்புகளில் இவரது வறுமை,சோகம்,கடவுள் பற்று...இப்படி இவரது வாழ்க்கையின் பிரதிபலிப்புகள் தெரியும் இவர் குழந்தைப் பருவத்திலிருந்தே அமைதி தேடி கோதுமை வயல்வெளிகளில் அலைந்து திரிந்த தனிமை விரும்பி.. அவைகள் அவரது படைப்புகளில் அதிகம் மிளிரும் 

freeonlinephotoeditor

ஒ...நத்தையே!
ஃபுஜி மலை மீது ஏறு....
ஆனால் மெதுவாக, மெதுவாக!
...............கோபயாஷி இஸ்ஸா (தமிழாக்கம்-பரிதி.முத்துராசன்)
...என்று நத்தையுடன் பேசிய இவரது படைப்பு உலகப்பிரபலமானது 

நான் மென்மைகொண்டு 
தொட்டவை யெல்லாம்...அந்தோ!
ஒரு முட்செடி போன்ற உறுத்துகிறது.
...............கோபயாஷி இஸ்ஸா (தமிழாக்கம்-பரிதி.முத்துராசன்)
.....என்று வாழ்வின் சோகத்தை நுட்பமான உணர்வுகளால் பிரதிபலித்தார்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhtY6MM8OavzNx80b3V8y4U8JfAcJTwYxgUKR-fdOOLT-mfywyoANQjuZpFPqduxZAAeB6SgUkUi1dng0EHVd68HAP5DB0xqzj6MYVsucQmOfKt6eHtBte5H-DWvcb0GJcg6hfiP-GcLc5O/s400/kobayashi+issa.jpg
நீங்கள் பிறந்த போதும் ஒரு குளியல்,
நீங்கள் இறந்து போதும் ஒரு குளியல்,
எப்படிப் பட்ட முட்டாள்தனம் 

...............கோபயாஷி இஸ்ஸா (தமிழாக்கம்-பரிதி.முத்துராசன்) 


பூச்சிகளுடன் சேர்ந்து 
சிலர் பாட முடியும் 
சிலரால் முடியாது. 
...............கோபயாஷி இஸ்ஸா (தமிழாக்கம்-பரிதி.முத்துராசன்)  
இப்படி இவரது படைப்புகள் விமர்சகர்கள் பார்வையில் "இவரது சுயசரிதை மீது கவனமாக வடிவமைக்கப்பட்ட சுய ஓவியங்கள்...." என்று கருதப்பட்டன  

http://img190.imageshack.us/img190/2403/frogbritmuse.jpg

ஒரு பெரிய தவளையும் நானும்,
ஒருவருக் கொருவர் பார்த்துக் கொண்டே...
நாங்கள் இருவருமே நகரவில்லை!

...............கோபயாஷி இஸ்ஸா (தமிழாக்கம்-பரிதி.முத்துராசன்) 

சிலந்திகளே! கவலைப்படாதீர்கள் 
நான் என் வீட்டை வைத்திருக்கிறேன் 
சாதாரணமாகத்தான்....
...............கோபயாஷி இஸ்ஸா (தமிழாக்கம்-பரிதி.முத்துராசன்)  
...இப்படி அனைத்து உயிர்களையும் அவரது நேசிக்கும் தன்மை அவரது கவிதைகளில்  வெளிப்படுகிறது 

http://farm3.static.flickr.com/2671/3716265624_49472173f4_o.jpg
எல்லா நேரமும் நான் புத்தரை வேண்டுவது 
எந்தக் கொசுக்களையும் கொல்லாமல் 
என்னை வைத்திரு என்று
...............கோபயாஷி இஸ்ஸா (தமிழாக்கம்-பரிதி.முத்துராசன்) 


பார்! அந்த ஈ-யைக் கொல்ல வேண்டாம் 
அது உன்னிடம் பிராத்தனை செய்கிறது.
அதன் கைகளையும் கால்களையும் தேய்ப்பதன் மூலம்.
...............கோபயாஷி இஸ்ஸா (தமிழாக்கம்-பரிதி.முத்துராசன்) 
இங்கே அவரது புத்த மதத்தின் மீது உள்ள கடவுள் பற்று தெரிகிறது 
அதே நேரத்தில் அன்று அவரைப் போன்ற புத்த மதத்தவர்கள் 
ஒர் ஈ-யைக் கொல்வதற்குகூட அஞ்சிய காலக்கட்டம் ...
இன்று நமது அண்டை நாடான இலங்கையில் அதே புத்தமத மனிதர்களின் ஈ-யைவிட ஈனத்தனமான இனவெறியைக் காணும்போது என்னுள்ளும் ஏராளமான கவிதைகள்...

http://farm4.static.flickr.com/3169/2442766360_44f57ec58c.jpg

இன்று இலங்கையில்
புத்தர் இருந்திருந்தால்....
அந்த போதிமரமும் 
அவரது தூக்கு மரமாயிருக்கும்  
....................................(பரிதி.முத்துராசன்) 

இப்படித்தான் எழுத தோன்றுகிறது...இது ஹைக்கூ கவிதையோ இல்லையோ என் உணர்வின் பிரதிபலிப்புகள் உண்மையில் ஈனர்களையும் வீனர்களையும் எழுதுவதைவிட....எழுதாமல் இருப்பதே மேலானது

      
                                ............................(இன்னும் வரும்)     
 
 

வந்தவைகளில் வென்றவைகள்(2013 கோலிவுட் சினிமா)

கோலிவுட் திரைவானில் 2013- ஜனவரியிலிருந்து மே 24-க்குள் இதுவரை  65 திரைப்படங்களுக்கும் மேல் வெளிவந்துள்ளன அவைகளில் 7 படங்கள் மட்டுமே வெற்றிப் பெற்று மக்கள் மனதில் நிற்கின்றன.........இவைகள் பிரபல இணையதளங்களில்  பார்வையாளர்களிடம் பெற்ற 6.5/10 -க்கு மேல்  ரேட்டிங் மூலமே வரிசைப்படுத்தப் பட்டுள்ளன


http://thedipaar.com/new/gallery_images/kamal%20hassan%20_actor/viswaroopam-Thedipaar.com-01%20(4).jpg
 1-விஸ்வரூபம்
விஸ்வநாதன் என்ற ஒரு பரதநாட்டிய கலைஞர் விஸ்வரூபமாக மாறி பயகரவாதிகளை வேட்டையாடுபவராக  இயக்கி  நடித்த கமல் ஹாசனின் இத்திரைப்படம் வசூலில் சாதனைப்படைத்து முன்னணியில் உள்ளது. இது விமர்சகர்களால் "கோலிவுட் தமிழ் சினிமாவை உலகளவில் அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் அற்புதமான படம்" என்றும் பாராட்டப்பட்டது.

freeonlinephotoeditor
2-பரதேசி
சுதந்திரத்துக்கு முற்பட்ட  1940- காலகட்டத்தில் கவலையற்ற கிராமவாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் எப்படித் தேயிலை தோட்டங்களில் வேலைக்குச் சென்று கொடுமையாக வாழ்வின் எஞ்சிய காலங்களையும் அடிமையாக நம்பிக்கையற்று வாழ்ந்தார்கள் என்பதைத் தத்ரூபமாக நடிகர் அதர்வா முரளி மூலம் இயக்குனர் பாலா பார்வையாளர்களை இனம்புரியாத ஒன்றை இதயத்தில் உணரவைத்த திரைப்படம்    

freeonlinephotoeditor
3-சென்னையில் ஒரு நாள்
சென்னையில் ஒரு விபத்தில் மூளைச் சாவு ஏற்பட்ட  ஒரு வாலிபரின்  இதயத்தை 170 கி.மீ. தொலைவில் உள்ள வேலூரில் இருக்கும் ஒரு மருத்துவமனைக்குக் குறிப்பிட்ட காலத்திற்குள் சாலையின் வழியே கொண்டு செல்லும் நிகழ்வாக....பார்வையாளர்களை இருக்கையின் மூலைக்கு இழுக்கும் த்திரிலர் திரைப்படம்

http://www.ultraimg.com/images/tN9ng.jpg
4-சூது கவ்வும்
தனியாகச் சின்னச் சின்னக் கடத்தல்கள் செய்து கொண்டிருந்த ஒரு நடுத்தர வயது கடத்தல்காரன் தனது நண்பர்களுடன் பெரிதாக ஒரு மந்திரி மகனைக் கடத்தும் முயற்சியும் அதனால் ஏற்படும் குழப்பங்களுமாகக் காட்சிகள் பார்வையாளர்களைக் குழப்பாமல்....  அவர்கள் எதிர்பார்க்காத வண்ணம் அமைக்கப்பட்டு நகைச்சுவை உணர்வுடன் சொல்லப்பட்ட இத்திரைப்படம்  நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதியின் யதார்த்தமான நடிப்பில் தமிழ் சினிமா உலகுக்கு ஒரு புது வெற்றி முயற்சி   

freeonlinephotoeditor
5-எதிர்நீச்சல்
ஒர் இளைஞ்சன் தன் வாழ்க்கையில் ஏதேனும் சாதிக்க வேண்டும் என்று ஊக்குவிக்கும் படமாகவும் அதே நேரத்தில் ஒர் அருமையான காதலையும்  எவ்வித பகட்டுமின்றி  ரொம்ப யதார்த்தமாகச் சொல்லி நடிகர் சிவ கார்த்திகேயன் இயல்பாக நடிக்க துரை செந்தில்குமார் இயக்கிய இத்திரைப்படம் வெற்றிவரிசையில் சேர்ந்துள்ளது.

freeonlinephotoeditor
6-கேடி பில்லா கில்லாடி ரங்கா
அப்பா சொல் கேளாமல் வீட்டுக்கு அடங்காத உதவாக்கரை நண்பர்கள் இருவராக விமலும் சிவ கார்த்திகேயனும் நடித்த இத்திரைப்படம் அவர்கள் விரும்பிய வண்ணமே அரசியலில் நுழைந்து வெற்றி பெறுவதாகச் சொல்கிறது இயக்குனர் பாண்டிராஜ் இப்படத்தில் காதல்-நகைச்சுவை-சென்டிமென்ட்  என்று முக்கனி சுவையை அமிர்தமாகப் படைத்திருந்தார்.

http://www.tamilthiraiulagam.com/films/2013/images/kannaladduthinnaasaiya.jpg
7-கண்ணா லட்டு தின்ன ஆசையா
சந்தானம்-பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன்-சேது என்ற மூன்று கோமாளி மனிதர்கள் விஷாகா சிங் என்ற பெண் மீது காதல் என்ற போர்வையில் வடிக்கும் ஜொள்ளு காட்சிகளே இத்திரைப்படம்....ஆயினும் ஒரிஜினல் திரைப்படம் இன்று போய் நாளை வா படத்திலிருந்து நிறைய மாறுபட்ட காட்சிகளும் கோமாளி நடிகர்களின்  கூட்டணி செயல்பாடுகளும் பார்வையாளர்களைக் குஷிப் படுத்தியது.

தமிழ் சினிமா 2013-ல் இதுவரை வந்தவைகளில் விஸ்வரூபம் படத்தைத் தவிர மற்றவைகள் எந்த நட்சத்திர அந்தஸ்து கொண்ட நடிகர்களை வைத்தும் வெற்றிபெறவில்லை என்பதும் கதை-யதார்த்தம்-நகைச்சுவை இவைகளை வைத்தே வெற்றிப் பெற்றுள்ளன என்பதும் நிதர்சனமான உண்மையாகும்

இன்னும் மிகப் பெரிய நட்சத்திர நடிகர்களின் படங்கள் ஜல்லிக்கட்டு மாடுகள் போல் பந்தய வாசலில் வரிசையில் நிற்கின்றன... சில பாய்ந்து வருகின்றன சில  பதுங்கி விழிக்கின்றன...எப்படியும்  அவைகள் களம் இறங்கத்தானே வேண்டும்...அப்போது தெரிந்துவிடும் வாழ்க தமிழ் சினிமா ரசிகர்கள்...வளர்க தமிழ் சினிமா நடிகர்கள்!

http://cinemalead.com/photo-galleries/singam-2-movie-poster/wmarks/singam-2-movie-poster05.jpg

அண்ணேன்....எனக்கு ஒரு டவுட்டு.....? நீங்க என்னவோ ஜல்லிக்கட்டுனு சொல்லுறீங்க...இங்கே இப்ப வருபவைகள் எல்லாம் (குட்டிப்)புலி....சிங்கம்(2)...அய்யோ ...பயமாயிருக்குது...அண்ணேன்  
**************************************************************************
வா...வா....என் வெளிச்சப் பூவே வா......
Just PLAY tha audio player below the post for the real effects of....
 வெளிச்சப் பூ....






















நண்பர்களே!...உங்கள் பொன்னான வாக்கை அளித்து........ 
இந்த ஏழு திரைப்படங்களில் 
எது உங்களுக்குப் பிடித்தது....?
என்று   தெரியப்படுத்துங்கள்      


வாக்களித்த அனைவருக்கும் நன்றி.............



 விரைவில் பயங்கரப் பேய்....பதிவு.....

                           மாசாணி
                    சினிமா விமர்சனம்

Monday, May 27, 2013

தமிழ் சினிமாவின் தலைவிதிகள்-4(சூது கவ்வும்)


சினிமாவின் நான்காவது விதியாகக் கருத்து ஒருமைப்பாடு (INTEGRITY TO THE CONCEPT) ஆகும். இது நமது தமிழ் சினிமா சூது கவ்வும் திரைப்படத்தில் முழுமையாக எவ்வாறு இருக்கிறது என்பதை இங்கே அறிவோம்.......

http://tamilasia.com/wp-content/uploads/et_temp/soodhu_kavvum_movie_songs-226018_500x340.jpg

கருத்து ஒருமைப்பாடு என்பது பார்வையாளர்களை ஈர்க்கவும் "திருப்தி" படுத்தவும் ஒரு சிறந்த இயக்குனர் திரைப்படத்திற்குரிய உள்ளடக்கத்தைச் சீர்படுத்தி எவ்வித சமரசமுமின்றிச் சுவையற்ற காட்சிகளைத் தவிர்த்துப் பார்வையாளர்களிடம் ஒரு வித எதிர்பார்ப்பை உருவாக்கி ஒரு திரைப்படமாக வழங்குவதே ஆகும்

http://images.desimartini.com/media/versions/main/original/1e085d53-d26b-4cae-a9b0-b46577ab853a_original_image_500_500.jpg

சூது கவ்வும்- திரைப்படம் தாஸ்(விஜய் சேதுபதி) என்ற சின்னச் சின்ன கடத்தல்கள் செய்தவன் அவனது நண்பர்கள் கேசவன்,சேகர் போன்ற உதவாக்கரைகளுடன் சேர்ந்து ஒரு மந்திரி மகனை கடத்த...யாரும் எதிர்பாராத விதமாகக் கதை மாற்றி யோசி என்ற வகையில் நகைச்சுவையுடன் சொல்லப்படுகிறது....

http://www.cineattack.com/img_reviews/29b.jpg

இதுவரை நாம் தமிழ் சினிமாவில் வழக்கமாகப் பார்த்த ஒரு கடத்தல்காரனுக்கு இருக்க வேண்டிய வீரதீர அதிரடி செயல்கள் கொடூரமான முகபாவங்கள் கவர்சி என்ற போர்வையில்ஆபாசங்கள் குத்து டான்ஸ்கள் கொலைவெறிப் பாடல்கள்...இப்படி தமிழ் சினிமாவுக்கென்று நிறைய இருந்தவைகள் இங்கே இல்லைகளாக இருந்ததால் பார்வையாளர்களுக்குப் படு திருப்தி 

http://www.gtamilcinema.com/wp-content/uploads/2013/04/Soodhu-Kavvum-Trailer.jpg

இவை எல்லாவற்றுக்கும் உச்சமாக வித்தியாசமான கதைக்கு உயிரோட்டம் தரும் யதார்த்தமான நடிகராக விஜய் சேதுபதியின் தேர்வு இயக்குனரின் திறமைக்கு சான்று.....இந்தப் பதிவுகளையும் இதுவரை வாசிக்காதவர்கள் வேண்டுமெனில் பார்வையிடவும்...


freeonlinephotoeditor  
 

சூது கவ்வும்-படமும் பதிவர்கள் பார்வையும்  
விஜய் சேதுபதி-கொஞ்சம் நடிங்க பாஸ்...?   


http://voixmag.net/wp-content/uploads/2010/12/monkey-thinking.jpeg
இதுவரை நம்மைத் தாளித்துக்கொண்டிருந்த அதிரடி நடிகர்கள், பஞ்ச டயலாக் பேசி நம்மைப் பஞ்சராக்கிக் கொண்டிருந்த பஞ்ச நடிகர்கள்,விரசமாக டாஸ்மாக் உளறல் காமெடியன்கள்....இப்படி நிறைய நடிகர்கள் இனி விரைவில் மாறுவார்கள் தமிழ் சினிமாவின் தலைவிதியும் மாறும் என நம்புவோமாக      
  


விரைவில்......

எதிர்பாருங்கள்......

(Just press the PLAY button above the audio player...to mach the roaring sound effect of the Tiger)












http://parithimuthurasan.blogspot.in/2013/05/kuttipuli.html


     சசிகுமாரின்... 
.         குட்டிப்புலி 
     சினிமா விமர்சனம்



முன்னோட்டம்...
 சசிகுமாரின் குட்டிப்புலி-பாயுமா..? பதுங்குமா..?


                                        thanks-YouTube-by IGTAMILMOVIES





UA-32876358-1