google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: May 2012

Thursday, May 31, 2012

காதல் வர்ணங்கள்



காதல் செய்யும்
வார்த்தைகளில்
வந்துபோகும்
வர்ணங்கள்
எண்ணிலடங்காது 

ஏய்ப்பவரின்  
இதயத்தின் உள்ளே
இருக்கும் எண்ணமோ
கருப்பு நிறம்....
பேசும்போது
பசப்பு நிறைந்த
பச்சை நிறம்

தோல்வியுற்றோர்
கண்கள் பேசுமே
சிகப்பு நிறம்

உண்மைக்காதலோ
வெள்ளை நிறம்

வெற்றிபெற்றால்
வந்துசேரும்........
  
வானவில்லின்
வர்ணங்கள் ஏழும்

இதோ ஒரு இந்தியக்கடவுள்!



 
எவரொருவர்
இந்தியத்தாயின்
மனிமகுடத்தை
அழகு செய்கிறார்களோ
அவர்களெல்லாம் எனக்கு
இந்தியக்கடவுள்களே!

இதோ ஒரு இந்தியக்கடவுள்
அதுவும் நம் தமிழ் கடவுள்

சதுரங்க விளையாட்டில்
அய்ந்துமுறை அபார சாதனை  
உலக சாம்பியராக
விஸ்வநாதன் ஆனந்த்! 
 
சதுரங்கம் ஒரு அறிவு ஆட்டம்
யுத்தமின்றி ரத்தமின்றி
உலக நாடுகளை வென்றது
ஆனந்தின் ஆட்டம் மட்டுமல்ல
இந்தியாவும்தான்!   

நம் இந்தியத்தாயின்
மணிமகுடத்தில்
மயிலாடுதுறை மாணிக்கம்!  

இதோ ஒரு இந்தியக்கடவுள்
அதுவும் நம் தமிழ் கடவுள்







Wednesday, May 30, 2012

இங்கே யார்தான் கடவுள்?


நான் கடவுள்! நீ கடவுள்!
இவர் கடவுள்! அவர் கடவுள்!
இங்கே யார்தான் கடவுள்?

அடிமைபடுத்தி நம்மை
ஆண்டவர்கள் இங்கே
ஆண்டவர்களாய் அவதரித்தார்கள்
ஆண்டவர்களை அறிவித்தார்கள்
அப்போதுதான் இவர்கள்
அடங்கிப்போவார்கள் என்று

இன்னல்கள் பல கண்டு
இன்னுயிர்தனை விடுத்து
எல்லோரும் மன்னர்களாய்
ஏற்றமிகு செய்த இறைவன்கள்
விடுதலைப்போராட்ட
வீரர்களும் தலைவர்களும்
இவர்களின்றி இந்தியாவில்
இருக்கிறார்களோ கடவுள்கள்?

இல்லம்தோரும்
இருக்கவேண்டாமா
இவர்கள் கடவுள்களாக?
 

மெஞ்ஞானத்தை வென்றது விஞ்ஞானம்



(கடவுள்=கட+உள்(உள்ளே)
 கடந்துபார்த்தால்  கடவுளை உணரலாம்  
இதைதான் : தன்னை தான் உணர்தல் என்று
சித்தர்கள் குறிப்பிடுவார்கள் 
 . கடவுளை காண முடியாது .காட்டமுடியாது  
உணரமட்டுமே முடியும்
 பக்தியும் பிரார்த்தனையும்  
உலகவாழ்கைக்காக அல்ல 
தன்னை உணர்வதர்க்காகதான்
 தன்னை உணர்ந்தவன் ஞானி ஆகிறான்)....
.திரு.சம்பந்தன் வைத்யநாதன் அவர்கள்)  

இதன் பொருள் ஒருவரியில்....
சாக்ரெடிஸ் சொன்ன....
‘உன்னையே அறிவாய்
இப்படி நடந்தால்
மனிதர்களே இப்புவியில்
இருக்க மாட்டார்கள்
அனைவரும் கடவுளாகத்தான்
அலைந்து கொண்டிருப்பார்கள் 
(அவ்வப்போது அவதரிக்கும்
கடவுள்களாலேயே கால நீரோட்டம்
கலங்கிப்போகிறது சாக்கடையாக..
எல்லோரும் கடவுள்களானால்
என்னவாகும் இந்த நாடு?)

நாலு தலைமுறை
மனிதர்கள் வாழும்
அந்த ஊரின் குறுக்கே
ஓடியது ஒரு ஆறு....
அதியாவாச பொருட்களுக்கு
அதை கடந்து போனால்தால்
வாழமுடியும் உயிரோடு....
ஊர் கூடி ஆலோசித்தது

முதல் தலைமுறையின்  
மூத்த பெரியோகளோ
கடவுடளை வணங்கி
அனைவரும் கைகோர்த்து 
ஆற்றில் இறந்குவோமென்று...

இரண்டாவது தலைமுறையோ
ஆற்றில் இறங்கினால்
ஆறு அடித்து சென்றுவிடலாம்
ஆபத்து வரும் வராது
கடவுளை வணங்கி
ஓடத்திலேறி கடக்கலாமென்று...

மூன்றாவது தலைமுறையோ
ஓடத்தில்போனாலும்
ஆறு அடித்து சென்றுவிடலாம்
ஆற்றின் குறுக்கே பாலம் கட்டி
அதற்கொரு பூஜை போட்டு
அதன்மேல் நடந்து போய்    
அழகாய் ஆற்றை கடக்கலாமென்று..

நான்காம் தலைமுறையோ
சிந்தனையில் இருந்தது...
இவர்கள் தேங்காய் உடைக்குமுன்   
ஹெலிகாப்டரில் ஏறி
அரை நொடியில் போகலாம்
ஆற்றைக்கடந்து என்று...

மெஞ்ஞானத்தை
விஞ்ஞானம் வென்றது
கால நீரோட்டத்தில்
கடவுளும் காணாமல் போவார். 



Monday, May 28, 2012

அப்பாவும் நீயே! ஆசானும் நீயே!


 

அரைக்கால் சட்டையுடன்
ஆடித்திரிந்த வயதில்
பிறந்த ஊரில் இருந்தால்
படிக்க மாட்டாய் என்று 
அழைதுச்சென்றாய் வடுகபட்டிக்கு

அன்றிலிருந்து உன் நினைவு
இன்றுவரை இருக்கு இதயத்தில்
இறந்துதான் நீ போனாலும்.....

அதிகாலையில் எழுந்து
நீராட அழைத்து செல்வாய்
வடுகை வராகநதிக்கு..
மலையில் மழை பெய்தால்
வரும் நீர் கலங்கலாக
இல்லையேல் கிடக்கும்
மணலே நீராக....
ஆனாலும் அங்கே இருக்கும்
அமர்ந்து குளிக்கும் ஊற்று
(அன்று அதிலேயும் ஊற்று இரண்டு)

காலைக்கடன் கழிப்பதோ
காலமானவர்கள் கூட்டமாய்
புதைந்து கிடக்கும் சுடுகாடு
அப்போது சொல்வாய்
அவர்கள் சிலரின் கதையை...
(அன்று அங்கேயும் பகுப்பு இரண்டு)

நீயோ எல்லோருக்கும் பொது வியாபாரி
இல்லை உன்னிடம் உயர்வு தாழ்வு
எல்லோருக்கும் வணங்கும்
உன் கரங்கள் குவித்து
அதனாலே வளர்ந்தாய்
வாழ்வில் வளம் குவித்து.   

எப்படி படிக்க வைக்க வேண்டும்?
எதுவும் தெரியாது உனக்கு
எப்படி படிக்க வேண்டும்?
எதுவும் தெரியாது எனக்கு
சதுரங்கத்தில் சிறந்த நீ
சறுக்கிவிழுந்தாய் இதில்.    
 
ஆனாலும் உன் அறிவுரைகள்
அப்படியே இருக்கு என் நெஞ்சுக்குள்
அவைகள்தான் உணவு என் உயர்வுக்கு

அப்பாவும் நீயே! ஆசானும் நீயே!
**********************************
காணொளி-உள்ளத்தில் நல்ல உள்ளம்...

 

காணவில்லை என் காதலியை

 
என் காதலை தூண்டியவள்
வாலிபத்தை தீண்டியவள்
வருவாள் போவாள் கனவில்....
இபோதெல்லாம் வருவதில்லை
காரணமும் தெரியவில்லை
காணவில்லை என் காதலியை

காவல் துறையில் புகார் கொடுத்தால்
கண்டுபிடித்து தருவார்களா?
(கண்டுபிடிப்பார்கள்
ஆனால் தருவார்களா?
அது தெரியாது)

ஆட்சியரிடம்
மனுகொடுக்கலாமா?
(கொடுக்கலாம்
ஆனால் நீ போகும்வரை
இருப்பாரா அவர்
இடம் மாறாமல்?)

கோட்டையில் கொடுக்கலாமா
கோரிக்கைமனு?
(கொடுக்கலாம்தான்   
ஆனால் அவர்களே
அவ்வப்போது வரும்
காய்ச்சல்களால்
அரண்டுகிடக்கிரார்கள்
நீ போனால் உன்னை
பிராண்டிவிடுவார்கள்)

அப்படியென்றால்
என்னதான் பண்ணுவது
என் காதலியை கண்டுபிடிக்க?
(மதுரைக்கு போ
புதுசா யாரோ
ஆனந்த சாமியார்
வந்திருக்கிறாராம்
அவரிடம் நிறைய
பக்தைகள் உண்டு
மடத்தில் சேர்ந்துவிட்டாளா?
என்றுபார் மடச்சாம்பிரானியே!)   
  

Sunday, May 27, 2012

இன்று நீயிருந்தால் அவ்வையே ..5



நாளும் நல்லது சொன்ன
நற்கவி அவ்வையே!
இன்று நீயிருந்தால்
இவர்களைப்பற்றி
எழுதுவதென்ன?

தாலிக்கு தங்கம் யாசிக்கும்
தங்கத்தமிழ்நாட்டில்
என்னிடம்தான் எல்லாமிருக்கென்று
ஏளனம் செய்வதுபோல்
தங்க கிரீடம் தங்க சிம்மாசனம்
தாரகைகள் கூட்டம்
இம்மடாதிபதிகள் செய்யும்
வேலைகள்தான் என்ன?
தொழில்கள்தான் என்ன?



இன்று நீயிருந்தால் அவ்வையே ..3


நாளும் நல்லது சொன்ன
நற்கவி அவ்வையே!
இன்று நீயிருந்தால்
இவர்களைப்பற்றி
எழுதுவதென்ன?

தேர்தல் வந்து விட்டால்
தேவைகள் தீர்ந்துவிடும்
அடுத்த இடைத்தேர்தலை
ஆவலுடன் எதிர்நோக்கும்
சுயமரியாதையிழந்த
மக்களிடம் சொல்வதென்ன?



Saturday, May 26, 2012

ஆவாய் நீ மடாதிபதி!

 
நான் படித்ததை
அவர்கள் கேட்கவில்லை
அவர்கள் கேள்வி
எனக்கு புடிக்கவில்லை

தேர்வு முடிவை பார்த்து
தேவையில்லாமல்
அப்பா முறைக்கிறார்
அவருக்கு என்ன தெரியும்?

நம்மவூறு
சாமியாடிமகன்   
படித்துவிட்டா
மடாதிபதியானார்?
ஆயிரம்கோடிகளுக்கு  
அதிபதியானார்?
ஆரனங்குகளுடன்
அரியனையேறினார்?

(ஆமாம் தம்பி!
உன்னிடமும் தெரிகிறது
அதே கபட பல்யிளிப்பு
அதே தலை வளர்ப்பு 
அதே காமுக நடிப்பு
ஆபத்தெனில் ஓடிஒழிப்பு
ஆபத்தான உபசரிப்பு
ஆனாலும் ஆவாய் நீ
இந்திய நாட்டின்
மிகப்பெரிய மடாதிபதி!


Friday, May 25, 2012

அய்யா!நானொரு நரகவாசி


 
பால் கறக்கும்
மாடு ஓன்று தாருங்கள்
அதிலிருந்து
அழும் குழந்தைக்கு
பால் கொடுப்பேன்
காபி தேநீரோடு
கலந்து குடிப்பேன்
கடையில் வாங்குவது
கட்டுப்படியாகவில்லை
அதன் சாணத்தில்  
எரிவாயு எடுப்பேன்
சமையல் செய்வேன்
காஸ் விலையோ
கட்டுபடியாகவில்லை
அப்படியே ரேசனில்
புண்ணாக்கு போடுங்கள்
விலையோ?
விலையில்லாமலோ?
மாட்டுக்கும் கொடுப்பேன்
மீதியிருந்தால்
தின்னுவேன் நானும்

அப்படியே
கழுதை ஓன்று தாருங்கள்
அதன்மேல் ஏறி
ஆபீஸ் போவேன்
பெட்ரோல் விலையில்
வெடிக்குது தலையே.  

அப்படியே....

(யோவ்..நிறுத்து...
யார் நீ? எங்கிருந்து 


வருகிறாய் இப்படி?)

அய்யா!நானொரு நரகவாசி
அச்சோ... நகரவாசி  
சென்னை மாநகரவாசி
கோட்டைக்கு வந்தேன்
கோரிக்கை மனுவோடு    
********************************
********************************
காணொளி-பாரப்பா பழனியப்பா 







  

Thursday, May 24, 2012

வழி சொல்லப்பா!


நூற்றி எட்டு தேங்காய்
எண்ணி உடைக்கிறேன்
ஆயிரம் தோப்புக்கரணம்
அழகாய் போடுகிறேன்
அப்பனே!
பெட்ரோல் இல்லாமல்
என் வாகனம் ஓட
வழி சொல்லப்பா?   

(நானே மூஞ்சுறு
வாகனத்தில்தான்
போகிறேன்
வீட்டில் பெருச்சாளி 
இருந்தால் பிடித்துக்கொள்!)  

விலையில்லா பெட்ரோல் வேண்டுமா?



எங்க வீட்டில்
கிணறு தோன்டினோம்    
தண்ணீருக்குப்பதிலாக
பெட்ரோல் வந்தது....

விலையில்லாமல்
தருகிறேன்
வேண்டுவோர்
வாருங்கள்

(அய்யா! பெட்ரோல் வள்ளலே!
உமது பெயரையும்
ஊரையும் சொல்லுமையா?)

என் பெயர் ஷேக் தில்லுமுல்லு
என் வீடு இருக்கு
துபாயில்....  
   

UA-32876358-1