google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: May 2014

Friday, May 30, 2014

அது வேற இது வேற-சினிமா விமர்சனம்

டார்க் காமெடி அப்படி இப்படி என்று எத்தனையோ காமெடி படம் பார்த்திருப்பீங்க அது வேற இது வேற........
இது முன்பாதி அய்யோ கொல்லுறாயிங்களே ரகம் பின்பாதி அய்யயோ சிரிக்க வச்சு கொல்லுறாயிங்களே ரகம்...பேக் (FAKE) காமெடி

கிராமத்திலிருந்து சமுக போராளி தாதாவாக மாறவேண்டும் என்ற கனவோடு சென்னைக்கு வரும் ஒரு தத்தி வாலிபன் செய்யும் கோமாளித்தனங்களை சில நேரம் நம்மை சிரிக்க வைத்தும் நிறைய  நேரம் அவர்களே சிரித்தும் நமக்கு படம் காட்டுகிறார் இயக்குனர் திலகராஜன் 

நாயகன்,பாட்ஷா படங்கள் பார்த்து தாதா பைத்தியமான குருசாமி (வர்ஷன்) சென்னையில் உள்ள சித்தப்பா காமெடி போலிஸ் இமான் அண்ணாச்சியின் ஐடியாபடி.....

ஒரு பைனான்ஸ் கம்பெனி அதிபர் யானை ஈஸ்வரன் கொலையை தான்தான் செய்ததாக குருசாமி ஒப்புக்கொண்டு பெரிய தாதாவாக சிறைக்கு செல்கிறான் 

கொஞ்சம் அறிவாளியான குருவின்  காதலி சானியா தாரா சிறையில் குருவை சந்தித்து அவனது முட்டாள்தனத்தை எடுத்துரைத்து உண்மையான குற்றவாளியை கண்டுபிடித்து விடுதலை ஆக வலியுறுத்துகிறாள்

குரு சிறையிலிருந்து தப்பித்து உண்மையான குற்றவாளியை கண்டுபிடித்தானா....? என்பதை ஒரு காமெடி ட்விஸ்ட் வைத்து கலகலப்பு ஊட்டுகிறார் 

வடிவேலு,சந்தானம்,விவேக்,சூரி...போன்ற பெரிய காமெடி நடிகர்கள் யாரும் இல்லாமல் இமான் அண்ணாச்சி,கஞ்சா கறுப்பு,பொன்னம்பலம்,சிங்கமுத்து..உட்பட இன்னும் இருக்கும் நண்டு சிண்டு காமெடி நடிகர்கள் அனைவரையும் வைத்து துணுக்கு காட்சிகளாக நம்மை சிரிக்க வைக்க முயற்சிக்கிறார்கள் 

படத்தின் சிரிக்க வைக்கும் அல்லது சிரிக்க வைக்க முயலும் காட்சிகளாக.....

-நாயகன் வர்ஷன் சானியாதாராவை விளம்பர ஷூட்டிங் ஸ்பாட்டில் ஆலமர விழுதில் தொங்கி காப்பாற்றும் காட்சி..அவ்வப்போது அது வேற இது வேற என்று நாயகன் போடும் ஆட்டம்.....ம்..

-தோசை மாஸ்டராக வரும் மொக்கை ராசு (கஞ்சா கருப்பு) குருவுக்கு ஐடியா கொடுத்து அரசியல்வாதி சிங்கமுத்து அலப்பறைக்கு முடிவு கட்டும் காட்சி...

-போலிஸ் இமான் அண்ணாச்சி திருநெல்வேலி ஓட்டலில் தோசை வாங்கிவர பிக்பாக்கெட் குற்றவாளியிடம் பணம் கொடுத்து அனுப்பும் காட்சி....

-துப்பறியும் ஏஜெண்டாக வரும் தளபதி தினேஷ் அவரது அடியாள் கூட்டமும் குருவை விரட்டிப் பிடிக்கும் மொக்கை காட்சிகள் 

-கவர்ச்சி நாயகி ஷகிலா புதுப்பொழிவுடன் திரையில் கற்புக்கரசிகள் அமைப்பு தலைவியாக தோன்றும் ஜொள்ளு காட்சிகள் 

-அய்யப்பசாமியாக வரும் ஜெயிலர் பொன்னம்பலம் ஜெயிலில் செய்யும் காமெடி கலாட்டாக்கள்

-கிளைமாக்சில் யானைஈஸ்வரன் ட்விஸ்ட்டும் வயாகரா பாம் வெடித்து அனைவரும் காம ஆட்டம் போடும் ஜொள்ளு பாடல் காட்சிகள்...

இப்படி நிறைய காட்சிகள் ஜொள்ளு வடிந்தாலும்  ஆபாசம் இல்லாமல்  படம் காட்டப்படுகிறது 

தாஜ்நூர் இசையில் நா.முத்துகுமார் வார்த்தைகளில் பாடல்கள் வேறு மாதிரி...ரசிக்கவும் முடியவில்லை வெறுக்கவும் முடியவில்லை ஆனால் இம்சை அதேநேரம் ஐயப்பன் பாடல் அருமை 

ரவிசங்கர் ஒளிப்பதிவில் பாடல்கள் பார்க்க நன்றாக உள்ளது கிளைமாக்ஸ் காட்சில் வரும் தும்மல் பாம்,கிச்சு கிச்சு மூட்டும் பாம்,வயாகரா பாம் அனிமேஷன் காட்சிகள் அட்டகாசம் 

முழுக்க முழுக்க படம் பார்ப்பவர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்ற லட்சிய வெறியுடன் இயக்குனர் திலகராஜன் எழுதி இயக்கியுள்ள படம்
நீங்க டார்க் காமெடி அப்படி இப்படி என்று எத்தனையோ காமெடி படம் பார்த்திருப்பீங்க ஆனால் அது வேற இது வேற........உண்மையிலே இது வேற 


adhuvera

உங்களுக்கு நேரம்,சூது கவ்வும், யாமிருக்க பயமே...போன்ற பைத்தியக்காரத்தனமான (senseless) அறிவற்ற காமெடி படங்கள் பிடிக்கும் என்றால் இதுவும் பிடிக்கலாம்........ஆனாலும்  அது வேற இது வேற  அத மறந்திடாதீங்க........



Thursday, May 29, 2014

தமிழ் சினிமாவில் உங்கள் விருப்ப நாயகன் யார்...?


அஜித்,விஜய்,சூர்யா,விக்ரம்....இவர்களில் (தமிழ் சினிமாவில்) உங்கள் விருப்ப நாயகனை தேர்வு செய்யவும் என்று ஒரு வலைதளத்தில் போட்டி ஆரம்பமாகிவிட்டது 
யாருகிட்ட...நாங்களும் ஆரம்பிச்சுட்டோம்ள....



வாக்களிக்கும்  அனைவருக்கும் நன்றி............முடிவு-05/06/2014

 (குறிப்பு-எல்லோரும் எனக்கு பிடித்த நடிகர்கள் என்பதால் தனிப்பட்டு யாரையும் இங்கே எதுவும் எழுதவில்லை...........)


 

Wednesday, May 28, 2014

மேஜர் முகுந்த் வீட்டில் நடிகர் விஜய்- மனிதாபிமானமா? நடிப்பா?

மறைந்த மேஜர் முகுந்தன் வரதராஜன் மகள் சிறுமி அர்ஷியாவுடன் நடிகர் விஜய் அமர்ந்திருக்கும் புகைப்படங்களைப் பார்த்து சிலர் சமுக வலைதளங்களில் இதுவும் நடிப்பு என்று.......

மேஜர் முகுந்தன் வரதராஜனின் ராணுவ இறுதி மரியாதை நிகழ்ச்சியில் அந்த குழந்தை அப்பா இறந்தது தெரியாமல் வந்தோரை வரவேற்றதும் அப்பாவுக்கு டாட்டா காட்டி வழியனுப்பியதும் காணும் நெஞ்சங்களை வருந்தச் செய்தது

மேஜர் முகுந்த் வீட்டில் நடிகர் விஜய் பற்றி முகநூலில்........
 கத்தி பட ஷூட்டிங்கில் இருந்த நடிகர் விஜய் சென்னை வந்ததும் அவரது காவல்துறை நண்பர் ஒருவர் அவருக்கு போன் செய்து........

“ நான் மேஜர் முகுந்த் வீட்டுக்கு போய்ட்டு வந்தேன்..  அவங்க பொண்ணுக்கு உங்களை ரொம்ப பிடிக்குமாம்.. உங்களுக்கு நேரம் இருந்தா அவங்களை குடும்பத்தோட கிளம்பி உங்களை பார்க்க வர சொல்லவா...? “
........... என்று கேட்க

அதற்கு நடிகர் விஜய்,

“ சார் அவங்களை ஏன் கஷ்டப்படுத்துறீங்க.. நான் சென்னைலதானே இருக்கன்.. நானே அவங்க வீட்டுக்கு போய்ட்டு வரேன் .... “

.......என்று உடன் மேஜர் முகுந்தன் வரதராஜன் வீட்டுக்கு நேரில் சென்று அவரது மகள் அர்ஷியாவுடன் இரண்டு மணி நேரம் செலவிட்டதாக முகநூலில் எழுதுகிறார் ஒரு விஜய் ரசிகர்


சிறுமியின் முகத்தில் சிரிப்பை வரவழைத்த விஜய் அவளின் எதிர்கால ஆசையை கேட்டறிந்தார். மேலும் முகுந்தின் குடும்பத்தாருக்கு உதவி செய்வதாக வாக்குறுதி அளித்தார்....எனவே இது அவரது மனிதாபிமான செயல் என்றும் இன்னும் பல பிரபலங்களுக்கு இது முன்மாதிரியாக இருக்கலாம் என்றும் சொல்பவர்  பலர் 


அதேநேரம்....
 
வலைதளம் முழுக்க இந்த நிகழ்ச்சியே முக்கியமாக இருந்தது
இதை தனது ட்விட்டரில் வெளிப்படுத்தி நடிகர் விஜய் மலிவான விளம்பரம் தேடிக்கொண்டார்  என்று சொல்பவர்கள் நிறைய  உண்டு



நண்பர்களே! உங்கள் பார்வையில்......
மேஜர் முகுந்த் வீட்டில் நடிகர் விஜய்- மனிதாபிமானமா? நடிப்பா?




வாக்களித்து உண்மையை உலகுக்கு வெளிப்படுத்தும் அனைவருக்கும் நன்றி......


Tuesday, May 27, 2014

கேப்டன் மோடி சந்திப்பு -கலக்கல் வீடியோ


இன்று  வலைதளங்களில் வலம் வரும் நகைச்சுவை கலக்கல் தேர்தல் வெற்றிக்குப் பிறகு கேப்டன் மோடியை சந்தித்து பொன்னாடை போர்த்தும் கானோளிதான்...........









 

Satishkumar @ssatishkumar_sg 
மச்சான்,சரக்கு நாட்டுத் தலைவர்களுடன் பிரதமர் மோடி பேசுறாராமே என்னைய மட்டும் ஏன்டா கூப்பிடல 

ஐயோ மாமா அது சார்க் நாட்டுத் தலைவர்கள் #கேப்டன்டா



டான் டான் டான் @krajesh4u 
கேப்டன் - யார் அந்த சுடிதார் போட்ட லேடி? 
பிரேம - அய்யோ அவர்தாங்க மோடி! 



காட்டுப்பயல் @ikaatupayal 
நவாஸ் ஷெரிப் டெல்லி வர தயங்கியதே கேப்டனை பற்றி தீவிரவாதிகள் எச்சரிக்கை செய்ததால் தானாம்

Maharaja ™ @Maharaja_King 
பாகிஸ்தான் தீவிரவாதியை பிடிக்க பாதுகாப்புதுறையை கேப்டனுக்கு தரதான் மோடி தன்வசம் அந்த துறையை வைத்து இருப்பதாக தகவல்





மோடி-விதியின் குழந்தை (குறும்படம்)

Monday, May 26, 2014

மோடியின் பதவியேற்பு (முழு வீடியோ)


இன்று  புது டெல்லி ராஜ்பவனில் நடைபெற்ற நரேந்திர மோடி பிரதமராகவும் 45 பேர் அவரது அமைச்சரவை மந்திரிகளாகவும் பதவியேற்றனர்




மோடியின் அமைச்சரவையில், 23 பேர் கேபினட் அந்தஸ்து கொண்ட மந்திரிகளாகவும், 12 பேர் மத்திய இணை அமைச்சர்களாகவும், 10 பேர் தனிப்பொறுப்புடன் கூடிய இணையமைச்சர்களாகவும் பதவியேற்றனர். அவரது அமைச்சரவையில் மேனகா காந்தி, ஸ்மிரிதி ராணி உள்ளிட்ட 7 பெண் அமைச்சர்களும் இடம்பெற்றுள்ளனர்.

இன்று நாட்டின் 15-வது பிரதமராக பதவியேற்றுள்ள நரேந்திர மோடியின் பதவியேற்பு விழா முழு வீடியோ.....


                                         thanks-Youtube by Doordarshan


தமிழகத்தை சேர்ந்த பா.ஜ.க செய்தித்தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் தனிப்பொறுப்புடன் கூடிய இணையமைச்சராகவும், தமிழக பா.ஜ.க. தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் மத்திய இணை அமைச்சராகவும் பதவியேற்றனர்.

பிரதமர் மோடியின் புதிய இணையதளம் 

Saturday, May 24, 2014

கோச்சடையான் ஏமாற்றி விட்டானா?




















மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்று பன்ச் வசனம் பேசி வந்துள்ள ரஜினியின் கோச்சடையான் படம் சில மாயை சித்து விளையாட்டுகளை திரையில் காட்டி சினிமா மக்களை முட்டாள்கள் ஆக்கிவிட்டானா...?

நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு தங்கள் தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந் போன்ற இளமையான உருவத்தை (சிக்ஸ் பேக் கட்டுமஸ்தான உடலுடன்) திரையில் பார்க்கும் அவரது ரசிகர்களுக்கு இது ஒரு விழாக்கால விருந்து........நல்ல முயற்சி 

ஆனால் .....

உண்மையில் கோச்சடையான் படம் படைக்கப்பட்ட தொழில் நுட்ப ரீதியில் மிகப்பெரிய ஏமாற்றமே A TECHNICAL CHEATING என்று படம் பார்த்த அறிவுஜீவி ரசிகர்களுக்கு தெரியும் அவதார்,டின் டின் படங்களுடன் ஒப்பிட்டால் கோச்சடையான் போன்று கோமாளித்தனமான படம் இல்லை (இங்கே முதலீடு பற்றிய பேச்சு இல்லை தொழில்நுட்பம் பற்றிய..........)

இப்படியெல்லாம் சொல்ல நினைப்பவர்கள் யாரும் வெளியே சொல்வதில் அது ரஜினி என்ற மிகப் பெரிய ஜாம்பவான் நடிகரை அவமதிக்கும் என்றும் அவர் மீது உள்ள இரக்கமாகவும் இருக்கலாம் 

உடல்நிலை  பாதிக்கப்பட்டு மீண்டும் மறுபிறவி எடுத்து வந்துள்ள ரஜினி என்ற மனிதர் மீது உள்ள மதிப்பும்தான் 

கோச்சடையான் படத்தின் வெற்றிக்கு காரணமானவர்கள் படத்தில் இரண்டு பேர்.....ஓன்று ஒரு விறுவிறுப்பான சரித்திரக் கதையையும் காலத்திற்கு ஏற்ற வசனங்களும் உருவாக்கிய கே.எஸ்.ரவிகுமார் 

இன்னொன்று படத்தின் அத்தனை குறைபாடுகளையும் தன் பிரமாண்டமான பின்னணி இசையால் படம் பார்ப்பவர்களை படத்தோடு ஈர்க்க செய்த ஏ.ஆர்.ரகுமான் 

மற்றபடி.........

படத்தில் வரும் 95% விழுக்காடு இருளடைந்த லாங்-ஷாட் காட்சிகளும் நிஜ மனிதர்களை கேலி செய்யும் அனிமேசன் உருவங்களும் அத்தனையும் டபாக்கூர் என்று தெரிந்தும்........


cricket


கோச்சடையான்-படம்  எப்படியிருக்கு? என்ற கேள்விக்கு
படம்பார்த்து  வெளியே வரும் ரஜினி ரசிகனாக இல்லாத பார்வையாளர்களின்
பதில்.........பரவாயில்ல ஒரு முறை பார்க்கலாம் 

ஆம்...குறைந்த முதலீட்டில் தமிழ் சினிமா செய்த ஒர் உலக சாதனை  என்று பெருமையாக பேசலாம்....ஆனால் வேற்று நாட்டவர்கள் நம்ம இந்திய சினிமாவைப் பற்றி என்ன நினைப்பார்கள்...POOR INDIANS

அவதார்  என்ற படத்தில் யாருக்கும் தெரியாத காட்டுப் பூச்சிகளை படம் காட்டினார்கள் பிரமிப்பாக இருந்தது.  கோச்சடையான் படத்தில் எல்லோருக்கும் தெரிந்த நாட்டுப் பூச்சிகளை படம் காட்டுகிறார்கள்  பிரமையாக இருகிறது



















சரி.......பாவம் பிழைத்துப் போகட்டும் முடிந்தவர்கள் போய் படம் பார்த்து உண்டியல் போட்டுவாருங்கள்...........

இப்போது வரும் குப்பை கதைகளுடன் டாஸ்மாக்,கவர்ச்சி,பட்டக்ஸ் பிடி குத்தாட்டம் போட்டுவரும் நடிகர்-நடிகைகளின் படங்களைவிட கோச்சடையான் பல மடங்கு மேலானது 

கோச்சடையான்  ஏமாற்றவில்லை


RajanLeaks@RajanLeaks 
2 மணி நேரத்துல ஒரு சீக்வன்ஸ் கூட சுவாரசியமா இல்லை. இத நல்லாருக்குனு சொல்ல அவரு பேன்ஸாலயும் அல்லது அவர மாதிரியே ஆட்களாலயும் தான் முடியும்.

மோடுமுட்டி.. @m0dumutti 
ஒவ்வொரு காலத்தில் பேமஸ் ஆகுறதுக்கு ஒவ்வொரு வழி. இப்பத்தி்கி கோச்சடையான் நல்லால்லனு சொல்றது. ஒரு ஹாலிவுட் படத்த விமர்சனம் பண்ண திராணி இருக்கா

ராஜா கையவச்சா@jeraldraja 
இந்தப் பத்தொன்பது ஆண்டுகளில் ரஜினி நடித்து நான் ரசித்துப் பார்த்த படமாக ‘கோச்சடையான்’ படத்தைத்தான் சொல்லுவேன்-கமல்

  Priyaa@Priyaa_S 
நேர்மை ! “@kattathora: ஒரு வேளை கோச்சடையான் நல்லாதான் இருக்கோன்னு டவுட்ல, மறுபடி போலாமான்னு என் பையன் கிட்ட கேட்டேன்..தெறிச்சு ஓடிட்டான்..”

அத்யாயம் @adhyaayam7 
#கோச்சடையான் ஓரு புதிய முயற்சி என்றாலும் அது ஓர் அளவுக்கு தான் கை கொடுத்தது. காட்சி அமைப்பு படு மோசம். மற்றவை சுமார் தான்.

தேன்மிட்டாய்@PAttadhaRI 
கோச்சடையான் படத்த அமெரிக்கால வீட்டுல உள்ள குழந்தைங்களுக்கு...இது ஹாரிபாட்டரோட தாத்தா நடிச்ச பழழைய படம்னு சொல்லி குடுக்குறாங்களாம்..

Deera@King_Deera 
என்னத்த கிராபிக்ஸோ. ரெண்டு நாளா கக்கா வராத மாதிரியே முழிக்கறார் சூப்பர்ஸ்டார். # கோச்சடையான்.

venkatesh @venkatesh_777 
கோச்சடையான்.....என்ன சின்ன புள்ள தனமா இருக்கு நம்மள பொம்மை படம் பார்க்க வைத்து பொழப்ப கெடுத்து புட்டாங்க ..

சி.பி.செந்தில்குமார்@senthilcp 
எல்லாப்புதிய முயற்சிகளும் ஆரம்பத்தில் ஏளனமாகப்பார்க்கப்பட்டு பின் சாதித்த பின் பாராட்டுப்பெற்று அண்ணாந்துபார்க்கப்பட்டவையே# கோச்சடையான

கரிகாலன் @thamizhpiravi 
நல்ல காலம் கோச்சடையான் தமிழ் நாட்டுல ஹிட் ஆச்சு..இலாட்டி இந்த ரஜினி பொண்ணு தமிழன் இன்னும் அந்த ட்ரென்டுக்கு செட்டாகலன்னு கத விட்டிருக்கும்.

புதுவையின் குடிமகன்@iamkudimagan 
பாடல் காட்சிகளில் உடலசைவுக்கு கொடுத்த கவனத்தை முகபாவனைக்கும் கொடுத்திருக்கலாம்! #கோச்சடையான்

நா மன்மதன் இல்லீங்கோ@seenisaha 
கோச்சடையான் படத்த பார்த்து விட்டு வதை படும் சாபத்திற்கு ஆளகிவுள்ளேன் மாஸ் னங்க தெறி மாஸ் னங்க கொய்யால இப்படி கவுத்து விட்டானுங்காளே

இதுவரை எனது விமர்சனம் வாசிக்காதவ்ர்களுக்காக........


 

Friday, May 23, 2014

கோச்சடையான்-சினிமா விமர்சனம்


கோச்சடையான்-இப்படத்தை நல்லக் கண்ணு,நோள்ளக் கண்ணு,மாறு கண்ணு...என்று எந்த கண்ணோட்டத்தில் பார்த்தாலும் திரைக்கதை, தொழில்நுட்பம்,இசை...என்று பல பரிமாணங்களில் ஒரு சிறந்த படமே!!!!
 
படத்தின் கதையாக.......ஒரு மகன் தன் தந்தைக்கு ஏற்பட்ட களங்கத்தை துடைப்பதும் அவரது மரணத்திற்கு காரணமானவர்களை பழிவாங்குவதுமே.

அனாதை சிறுவனாக கலிங்கா புரி நாட்டிற்கு வந்த ராணா (ரஜினிகாந்த்) அந்நாட்டின் தளபதியாகி அங்கே அடிமையாக வாழும் கோட்டை பட்டணத்தின் வீரர்களுடன்  படையெடுப்பது போல் நடித்து அவ்வீரர்களை காப்பாற்றி தன் சொந்த நாட்டிற்கு மீட்டுவருகிறான் 

கோட்டை  பட்டணத்தின் தளபதியாக மாறிய ராணா தன் நண்பன் இளவரசன் செங்கோடகனுக்கு (சரத்குமார்) தன் தங்கை யமுனாவை (ருக்மணி) மணமுடித்து வைக்கிறான் இதனால் கோட்டை பட்டிணத்தின் மன்னன ரிஷி கோடகன் (நாசர்)னின் கோபத்திற்கு ஆளாகிறான் ராணா 

தன் தந்தை கோச்சடையான் (ரஜினிகாந்த்) மரணத்திற்கு காரணமான மன்னனை ராணா தந்திரமாக கொலை செய்ய முயலும் போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறான்.

சிறையில்  தன்னைச் சந்திக்கும் தன்  காதலி இளவரசி வதனா தேவி (தீபிகா படுகோன்) யிடம் மன்னரின் நயவஞ்சகத்தையும் தன் தந்தை கோச்சடையான் கொலை செய்யப்பட்ட முன்கதையாக............

கலிங்க  புரிக்கும் கோட்டை பட்டிணத்திற்கும் நூற்றாண்டுகால பகை 
போரில்  வென்ற  கோட்டை பட்டிணத்தின் வீரர்களுக்கு தந்திரமாக உணவில் விஷ மருந்தை  ஏற்றிய கலிங்க புரி மன்னன்  ராஜா மகேந்திரா (ஜாக்கி ஷேராப்)விடம்  தளபதி கோச்சடையான் (ரஜினிகாந்த்) தன் வீரர்களை உயிர் பிழைக்க வேண்டி அடிமையாக விட்டுவருகிறான் ஆனால் கோட்டை பட்டிணத்தின் மன்னன ரிஷி கோடகன் நயவஞ்சகமாக குற்றம் சாட்டி கோச்சடையானை கொலை செய்கிறான்......

அதனால்  தன் தந்தை கோச்சடையான் மரணத்திற்கு பழிக்கு பழி வாங்கவே மன்னரை கொலை செய்ய வந்ததாக ராணா சொல்கிறான்

அதேநேரம் ராணாவை கைது செய்ய கலிங்க புரி மன்னன் ராஜா மகேந்திரா  தன் மகன் வீர மகேந்திரா (ஆதி) வுடன்  படைதிரட்டி வர.... ஆனால் வீர மகேந்திரனுக்கு கோட்டை பட்டிணத்தின் மன்னன ரிஷி கோடகன் தந்திரமாக தன் மகள் இளவரசி வதனா தேவியை மணமுடிக்க முயற்சி செய்ய.....

சிறையிலிருந்த ராணா தப்பித்து வந்து கலிங்கபுரி மன்னனையும் கோட்டை பட்டிணத்தின் மன்னனையும் கொன்றானா....? தன் காதலி இளவரசி வதனா தேவியை கரம்பிடித்தானா...? என்பதை வெள்ளித்திரையில் வண்ண வண்ண உயிரோட்டமுள்ள சித்திரங்களாக நட்பு,பாசம்,காதல்,குடும்பம், வீரம்,பக்தி, அதிரடி என்று பலபரிமானங்களில் படம் காட்டுகிறார் புதுமை இயக்குனர் சௌந்தர்யா அஸ்வின்............

படத்தின் சிறப்பான காட்சிகளாக.............

-படம் ஆரம்பிக்கும் போது... காட்டுவெள்ளத்தில் சிறுவன் ராணா அடித்துச் செல்லும் அதிபயங்க திகில் காட்சி 

-கலிங்கபுரி தளபதியாக ராணா ஆவேசமாக மலைக்குன்றை தாண்டி பறந்து வந்து மிக உயரமான கோபுரத்தில் கொடியேற்றும் ரஜினிகாந்தின் அறிமுக காட்சி

-ரானாவின் மாமனாக வரும் அமரர் நாகேஷ்  குடித்துவிட்டு தள்ளாடும் தத்ரூபமான காட்சிகள் 

-வியக்க வைக்கும் நடன அசைவுகளுடன் ராணாவும் வதனா தேவியும் காதல் செய்யும் கண்கவர் தேனிசை பாடல் காட்சி....

-மலைக்குன்றின் மீது  கோச்சடையானின் அட்டகாசமான ருத்திரதாண்டவம் 

-கோச்சடையான் கப்பலில் பாய்ந்து பாய்ந்து போடும் அதிரடி சண்டைக்காட்சிகள் 

-ராணா தந்திரமாக கோபுரத்திலிருந்து நாசரை தள்ளி கொலை செய்ய முயல்வதும் பின் காப்பாற்றுவதுமான திகில் காட்சி  

-ராணா சிறையிலிருந்து தப்பிக்க கழுத்தைப் புலிகளை தந்திரமாக வரவழைத்து சண்டையிடுவது.

-கிளைமாக்ஸில் ராணா இரட்டைக் குதிரை மீது நின்று போரிடும் போர்களக் காட்சிகள் 

இன்னும்  இதுபோன்ற அரிய பல காட்சிகள்...மனிதர்களால் செய்ய முடியாத வீர தீர செயல்களை மோஷன் கேப்ச்சர் தொழில் நுட்பத்தை உபயோகப்படுத்தியும் கிராபிக்ஸில் வரைந்தும் முப்பரிமாணத்தில் பார்வையாளர்களுக்கு நிஜத்தின் பிரதிபலிப்பாக காட்ட தொழில்நுட்ப குழுவினர் அதிசிரத்தை எடுத்துள்ளனர் 

இயக்குனர் சௌந்தர்யா அஸ்வின் ரஜினிகாந்த் தன் கனவிலும் கற்பனையிலும் வடித்து வைத்திருந்த இளமையானதன் தந்தையின் உருவத்தை இப்படத்தின் மூலம் காட்டுவதோடு....உலகளவில் தமிழர் பண்பாடு,நட்பு,காதல்,குடும்பம்,திருமணம்,கலாச்சாரம்....என்று பல சிறப்புகளையும் எடுத்துச்செல்கிறார் 

கே.எஸ்.ரவிகுமார்-கதையில் தொடர்ந்து அதிரடி நிகழ்வுகளும் திருப்பங்களும் வைத்தது மட்டுமல்லாமல் புதிய தொழில் நுட்பத்திற்கு ஏற்ற பேண்டஸி கதையை தேர்ந்தெடுத்துள்ளது சிறுவர்கள் முதல்பெரியவர்கள் வரை கவர்கின்றது 

"எதிரிகளை ஒழிக்க பல வழிகள் உண்டு ...முதல் வழி மன்னிப்பு....."

இதுபோன்ற   வசனங்கள் நிறைய உள்ளன

ஏ.ஆர்.ரகுமான்-படத்தின்இன்னொரு நாயகனாக இருக்கிறார்  படத்திற்கு  சிறப்பு ஊட்டுபவரகவும் பின்னணி இசையில் கலக்குகிறார் இவரது இசை ... நமக்கு படத்தோடு ஒன்ற வைக்கும்  ஓர் ஈர்ப்பு விசை.....பாடல்கள் தேனிசை 

படத்தின்  பின்னைடைவு....அனிமேஷன் குறைபாடுகளை சரிகட்ட காட்சிகள் அனைத்தும் லாங்-ஷாட்டில் வைத்து உள்ளது. இடைவிடாமல் தொடர் அதிரடி-பிரமிப்பு காட்சிகள் வைத்து பார்வையாளர்களையும் இமைக்க விடாமல் பொம்மை போல் ஆக்கியது

படம் முழுக்க கேப்ச்சரிங் நுட்பம் பயன்படுத்தாமல் அப்பா கோச்சடையான் கதாபாத்திர காட்சிகளில் மட்டும் அவதார் படம் போல் பயன்படுத்திருந்தால்.....இன்னும் பிரமிப்பாக இருந்திருக்கும் 

தீபிகாவை   மொக்க பிகராக படம் வரைந்து சென்னை எக்ஸ்பிரஸ் அம்மணியை அவமானப்படுத்தியது 

சரத்குமாரை சத்தியமா நான் இல்லை என்று அவர் சொல்லும் அளவுக்கு அடையாளம் தெரியாமல் ஆக்கியது.....




ஆக மொத்தத்தில்..............

கோச்சடையான்-இப்படத்தை நல்லக் கண்ணு,நோள்ளக் கண்ணு,மாறு கண்ணு...என்று எந்த கண்ணோட்டத்தில் பார்த்தாலும் திரைக்கதை, தொழில்நுட்பம்,இசை...என்று பல பரிமாணங்களில் ஒரு சிறந்த படமே!!!!

beach

நண்பர்களே!....
நீங்கள் படம் பார்த்தவராக  இருந்தால் இங்கே மதிப்பீடு செய்யுங்கள் இல்லையேல் படம் பார்த்துவிட்டு மதிப்பீடு செய்யுங்கள்...........



 
வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி...........

Thursday, May 22, 2014

மோடியின் மந்திரிசபை- யாமிருக்க பயமே..?


இதுதான் மோடியின் மந்திரி சபை என்று முகநூல்,ட்விட்டர் சமுக வலைதளங்களில் ஒரு பட்டியல் உலா வருகின்றது அதில் தமிழ்நாட்டுக்கு என்று யாரும் பிரதிநிதியாக இல்லாததும் பேசப்படுவது உண்மையா?


 























அப்படியென்றால் ஆவலுடன் கூட்டணி வைத்த நம்ம அதிமேதாவிகள் கதி என்ன....? மதிமுக,தேமுதிக கட்சிகள் தேர்தலில் வெற்றிபெறவில்லை என்றாலும்..............

எதிர்பாராத  வெற்றியைப் பெற்ற பாமக அன்புமணி ராமதாஸ் நிலை என்ன? பரவாயில்லை ஒன்றேஓன்று என்று வெற்றி பெற்றுள்ள தமிழ்நாடு பாஜக பொன் ராதாகிருஷ்ணன் நிலை என்ன?


மோடியின் பதவியேற்பு விழாவுக்கு தமிழர் விரோதியாக பார்க்கப்படும் ராஜபக்சேக்கு அழைப்பு ஒருபுறம்..........

விழாவுக்கு ராஜபக்சேயின் வருகை சம்மதம் ஒரு புறம்....... 

மோடி  அமைக்கும் மந்திரி சபையில் தமிழ்நாட்டுக்கு பிரதிநிதி இல்லை என்பது இன்னொரு புறம்...........

தமிழர்களுக்கு மோடியின் வெற்றி  இப்போது பரபரப்பாக ஓடிக்கொண்டு இருக்கும் திகில் திரைப்படம்........... யாமிருக்க பயமே படத்தின் கதையா? எப்போது வேண்டுமாயினும் என்னவாவது நடக்கலாம் என்ற திகிலா?

Wednesday, May 21, 2014

காட்ஸிலா(Godzilla 2014)-சினிமா விமர்சனம்


இதுவரை 18-படங்களில் மக்களை அழிக்கும் கொடூர மிருகமாக வந்த காட்ஸிலா   இதில் (Godzilla 2014) புது அவதாரமாக மக்களை காக்கும் கடவுள் மிருகமாக காட்டப்பட்டுள்ளது....மற்றபடி பிரமாண்டம் பெரிய அளவுக்கு இல்லை 

படத்தின்  கதையாக....... 
ஜப்பான் விஞ்ஞானிகளின் இயற்கைக்கு மாறான ஆராய்ச்சியில் புதுவிதமான மியுடோ என்ற அணு உலை கதிர்களை  உணவாக தின்னும் இரண்டு பெரிய ஏலியன் மிருகங்கள் உருவாகி மக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றன  அவைகளை அழிக்கும் பணியில் ராணுவத்துக்கு உதவியாக ஆழ்கடலில் வசிக்கும் காட்ஸிலா மிருகம் உதவுவதும்  மக்களைக் காப்பதுமே 

 டைனோசர், கிங்காங்...உருவங்களுக்கு போட்டியாக கிராபிக்ஸில் உருவாக்கப்பட்ட காட்ஸிலா மிருகத்துடன்......  விஞ்ஞானியாக கென் வாடனாபே (Ken Watanabe ) இராணுவத்துக்கு உதவியாக  மியுடோ ஏலியன் முட்டைகளை அழிக்க போராடும்  நாயகன் ஆரோன் டெய்லர் ஜான்சன் (Aaron Taylor-Johnson), பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நாயகி எலிசபெத் ஒல்சன் (Elizabeth Olsen) இணைந்து நடித்துள்ளர் 

படத்தின்  பிரமாண்டமான காட்சிகளாக...........
-1999 ஆம் ஆண்டில் பிலிப்பைன்ஸ் சுரங்கத்தில் கண்டெடுக்கப்படும் மிகப்பெரிய எலும்புக்கூடும் இரண்டு முட்டைகளும் முப்பரினாமத்தில் காண பிரமிப்பாக உள்ளது 

-மெட்ரோ ரயிலில் பயணிக்கும் நாயகன் பெற்றோரை பிரிந்த சிறுவனை காப்பாற்றி மீண்டும் பெற்றோருடன் சேர்த்து வைக்கும் நெகிழ்ச்சியான காட்சி 

-மிக உயரமான பாலத்தில் பள்ளிச் சிறுவர்கள் செல்லும் ஸ்கூல் வாகனத்தை மியுடோ ஏலியன்கள் தாக்கும் அதி பயங்கர காட்சி 

-ராணுவ ரயிலில் செல்லும் இரண்டு நைட்ரஜன் ஏவுகணைகளை மியுடோ ஏலியன் ஓன்று விழுங்குவதும் இன்னொன்றை கடத்திச் செல்லும் காட்சிகள் 

-கிளைமாக்ஸில் காட்ஸிலா மிருகத்துக்கும் மியுடோ ஏலியன்களுக்கும் நடக்கும் பிரமாண்டமான கிராபிக்ஸ் சண்டைக்காட்சிகள் 

-கடைசியில் இறந்ததாக கருதப்படும் காட்ஸிலா திடிரென்று விழித்து மீண்டும் கடலுக்குள் சென்று மறையும் உணர்ச்சிமயமான காட்சி...

இப்படி  நிறைய சிறப்பான காட்சிகள் இருந்தாலும் குழந்தைகளை கவரும் அதி பிரமாண்டமான காட்சிகள் குறைவு அதுவே படத்தின் தொய்வு... பின்னடைவு 


 












































ஆனாலும் பிரமிப்பு ஊட்டும் ஒளிப்பதிவு...பயமுறுத்தும் பின்னணி இசை முப்பரிமாணத்தில் கிராபிக்ஸ் காட்சிகள்...இவைகளை காண்பதற்கும் உணர்வதற்கும் நல்ல திரையரங்கில் இப்படம் ஓடினால் ஒருமுறை பார்க்கலாம் 



Tuesday, May 20, 2014

பிரதமர் மோடியின் "ஆட்டம் ஆரம்பம்"

ஆரம்பம்  படத்தில் அஜித் ஊழல் அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் அடித்து துவசம் செய்வது போல் இதோ மோடியின் அதிரடி அரசியல் ஆட்டம் ஆரம்பம் ஆனது.......

சுதந்திரத்திற்குப் பிறகு  இந்தியாவில் பிறந்த ஒருவர் முதன் முறையாக இந்தியப் பிரதமர் ஆகும் சிறப்பை பெற்ற நரேந்திர மோடி  பதவி  ஏற்கும் முன்பே விடுத்த அதிரடி உத்தரவு...ஆட்டம் கண்டு போனார்கள் அதிகாரிகள் 

நாடாளுமன்றம் என்பது கோயில் போன்று புனிதமானது என்று நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் நுழையும் போது அதன் படிக்கட்டை களம் இறங்கும் வெற்றி வீரர் போல் வணங்கிய மோடி........

பொறுப்புகள்தான் முக்கியம் பதவி அல்ல....என்று சொல்லும் மோடி ஓர் அனுபவ அரசியல்வாதியாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சொதப்பிய காங்கிரஸ் ஆட்சியில் முடங்கிப்போன திட்டங்கள் எவை? எவை? என்று பட்டியலிட அமைச்சரவை செயலாளருக்கு அறிவிக்கைவிட...........

அமைச்சரவை செயலாளரும் அனைத்து அமைச்சக துறை அதிகாரிகளுக்கு ஒரு சுற்றறிவிக்கை வெளியிட்டுள்ளார்.....

இன்னும் பிரதமர் பதவி ஏற்காத பட்சம் பிரதமர் மோடியின் இத்தகைய அதிரடி உத்தரவு    கால விரயத்தை விரும்பாத செயல்வீரராக அவரை காட்டுகிறது.

ஒவ்வொரு அமைச்சக அதிகாரிகளும்....கடந்த ஆட்சியில் நிறைவேறாமல் முடங்கிய திட்டங்கள் என்ன காரணங்களால் தடைபட்டது? யார் தடையாக இருந்தது? போன்ற விவரங்களுடன் பவர் பாயிண்ட் பிரசெண்டேசன் (Power Point) ஸ்லைட்களாக தயார் செய்ய வேண்டும் என்று மோடி உத்தரவு இட்டுள்ளார் 

இதுவரை பத்தாண்டு காலமாக  மவுனமாக எதுவும் செயல்படாத பிரதமரை பார்த்த நமக்கு மோடியை பார்க்கும் போது ஓர் அதிரடி திரைப்பட ஆக்சன் கதாநாயகனாகவே தெரிகிறார்.....


இவரது அதிரடி செயல்கள் நாட்டையும் மக்களையும் காப்பதிலும் தீய சக்திகளை அழிப்பதிலும் இருந்தால் இவரே இருப்பார் இவர் வாழ்நாள் பிரதமராக என்றும்...

Friday, May 16, 2014

ஆப் கீ பார் மோடி சர்க்கார்-விமர்சனம்


இந்திய தேர்தல் சினிமா வரலாற்றில் முதன் முறையாக அரங்கம் நிறைந்த  காட்சியாக பாஜக பிலிம்ஸ் ராஜ்நாத் சிங் தயாரித்து இயக்கி  நரேந்திர மோடி கதாநாயகனாக நடித்த  அரசியல்-நையாண்டி-குடும்பம்-சென்டிமென்ட்-திகில் திருப்பங்கள் நிறைந்த  ஆப் கீ பார் மோடி சர்க்கார் என்ற படம் பற்றிய.....

ஆப் கீ பார் மோடி சர்க்கார்-படத்தின் கதையாக........
RSS பொதுக்கூட்டங்களில் டீ விற்றுக் கொண்டிருந்த குஜாராத்தில் ஒரு கிராமத்தில் பிறந்த சாதாரனமான ஒருவர்  இந்த நாட்டை ஆளும் பிரதமராக எப்படி மாறினார் என்பதே...

 நாடாளுமன்ற தேர்தல்-2014 ல் பாஜக கட்சியால் பிரதம வேட்பாளராக அறிவிக்கப்பட்ட போட்டியிட  குஜராத்  முதல்வராக இருக்கும் நரேந்திர மோடி வடோதரா-வாரணாசி என்ற  இரு இடங்களில் வேட்பு மனு தாக்கல் செய்கின்றார் வேட்பு மனுவில் இதுவரை சிம்பு மாதிரி நான் சிங்கிள் எனக்கு குடும்பம் இல்லை என்றவர் திடீர் திருப்பமாக தனக்கு சிறு வயதில்  பால்ய திருமணம் நடந்து மனைவியும் இருப்பதை  ஒப்புக்கொள்கிறார்

மோடிக்கு  திருமணம் ஆனது மற்றும் அவர் மனைவியை மறைத்தது நாடெங்கும் பெரும் பிரச்சனையாகிறது.மேலும் குஜராத் மதக் கலவரம் நடக்க அவர்தான்  காரணம் என்றும் கூச்சல் குழப்பம்

இதற்கும் மேலாக அவரை எதிர்த்து குழந்தைத்தனமாக கை காட்டி சிரிக்கும் ஒர் அப்பாவி  வில்லன் (ராகுல்) கையில் விளக்குமாறும் தலையில் வெள்ளைக் குல்லாவுமாக ஊ..ஊழல்...என்று ஊதிக்கொண்டு  கோமாளித்தனமாய் அலையும்  ஒரு காமெடி வில்லன் (அரவிந்த் கெஜ்ரிவால்) 
modi

இப்படி சதிகளையும் சதிகாரர்களையும் நேருக்கு நேர் சந்தித்து எப்படி நரேந்திரமோடி வெற்றி பெற்றார் என்பதை திகில் நிறைந்த அதிரடி திருப்பங்களுடன் படம் காட்டுவதே............ஆப் கீ பார் மோடி சர்க்கார்

படத்தின் சிறப்பான காட்சிகள் என்று நிறைய சொல்லலாம்
 பிளாஷ்-பேக் காட்சிகளாக வரும் ......
-1950 வாட்நகர் ரயில் நிலையத்தில் பின்தங்கிய வகுப்பைச் சார்ந்த ஒரு  சிறுவன் (நரேந்திர மோடி) தன் தந்தை தாமோதர்தாஸ் மூல்சாந்த் மோடிக்கு தேனீர்  விற்க உதவுவது போன்று துவங்கும் காட்சி......

-பிறகு பள்ளிப்  படிப்பை விட சினிமாவில் ஆர்வம் கொண்ட வாலிபரான நரேந்திர மோடி தனது தமையனார் உதவியுடன் பேருந்து நிலையம் அருகில் தேனீர் கடை வைத்து சிறப்பாக நடத்தும் காட்சி..........

-இமயமலையில் இரண்டாண்டுகளாக அலைந்து திரிந்த மோடி மீண்டும் மனதில் வைராக்கியத்துடன் ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தில் முழு நேர பிரச்சாரகர் ஆகும் காட்சி 

- பரிவார் சங் மாணவப் பொறுப்பாளரான மோடி எமெர்ஜென்சி காலத்தில் துண்டு பிரச்சாரங்கள் விநியோகித்த வீர தீர காட்சிகள்....

-அரசியல் பாடத்தில் டில்லி தொலை தூர பல்கலை கழகத்தில்  இளநிலையும் குஜாராத் பல்கலை கழகத்தில்   முது நிலை பட்டங்கள் பெற்று  தன் படிப்பறிவை வளர்த்துக்கொண்ட மோடி தான் முதல்வராக இருக்கும் குஜாராத் மாநிலத்தில் படித்தவர்களைக் கொண்டு தொழில் புரட்சி செய்யும் காட்சி......

-பிரச்சாரக் கூட்டங்களில் தினம் பல லட்சம் செலவு செய்து வித விதமான தோற்றங்களிலும் உடைகளிலும் மேடைகளில் கவர்ச்சியாக தோன்றியது....

-அந்த அந்த மாநிலங்களில் உள்ள உண்மையான சினிமா பிரபலங்களை அதிலும் தமிழ் நாட்டில் உள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து குடும்பத்தில் ஒருவராய் மாறியது மிகவும் உணர்ச்சிகரமாக இருந்தது 

- தமிழ்நாட்டில் படைவீரர்கள் போன்று ரசிகர்களை வைத்துள்ள இளைய தளபதி விஜய் என்ற நட்சத்திர நடிகரை அழைத்து அருகில் அமர வைத்து அவருடன் பவ்வியமாக  பழகி  நண்பர்களாக்கிக் கொண்டது.....

-இன்னும் அத்துப்போன இத்துப்போன குட்டி தாதா கட்சியினர் கேப்டன்,மருத்துவர் ஐயாக்கள், நடை புயல் வைகோ..போன்றவர்களின் தோள் மீது கை போட்டு அவர்களை ஒண்ணுமில்லாத ஒட்டாண்டிகள் என்று உலகுக்கு காட்டியது.....

இப்படி நிறைய அதிரடி....நகைச்சுவை காட்சிகள் நிறைந்த....ஆப் கீ பார் மோடி சர்க்கார் படம் பாக்ஸ் ஆபீஸ் பிளாக் பஸ்டர் பட வரிசையில் சேர்ந்தது

இப்படம் எடுத்த காலக்கட்டத்தில் யார் கதாநாயகன் என்று சொல்லாமலே படத்தில் நடித்த அனைவரும் நாயகர்களே என்று வந்த காங்கிரஸ் புரோடக்சனில் சோனியாஜி இயக்கிய கை (HAND) திரைப்படமும் அரவிந்த் கெஜ்ரிவால் &கோ என்ற கோமாளி நடிகர்களால்  இயக்கி நடிக்கப்பட்ட விளக்குமாறு திரைப்படமும் படுதோல்வி அடைந்தது இப்படி மொக்கைப் படங்கள் எடுத்ததாலேயே பாஜகவின் ஆப் கீ பார் மோடி சர்க்கார்  மாபெரும் வெற்றியை  பெற்றது என்றுஅரசியல் விமர்சகர்களும் ஊடகங்களும் கணிக்கிறார்கள்

அதேநேரம் தமிழ் நாட்டில் முதல்வர் அம்மா அவர்களே திரைக்கதை-வசனம்-பாடல்கள் எழுதி இயக்கிய இரட்டை இலை படம் அமோக வரவேற்பைப் பெற்றது ஆவலுடன் எதிர்பார்த்த குடும்பப்படம் உதய சூரியன் படு தோல்வி அடைந்தது

ஆப் கீ பார் மோடி சர்க்கார் படத்தின் அமோக வெற்றியைத் தொடர்ந்து விரைவில் இரண்டாம் பாகம் வரும் என்றும் அதன் பெயர் ஆப் கீ பார் மோடி சர்வாதிகாரியாக இருக்கும் அல்லது ஆப் கீ பார் மோடி சக்கரவர்த்தியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது  


 நண்பர்களே! உங்கள் பார்வையில்......
நரேந்திர மோடியின் ஆப் கீ சர்க்கார் வெற்றியைப் பற்றிய தங்கள் கருத்து என்ன...?

 வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி..........

 

Thursday, May 15, 2014

பிரதமர் மோடியை சந்திக்கப் போன ரஜினி,விஜய்,கேப்டன்...?


அமோக வெற்றியில் மோடி பிரதமரானதும்  நம்ம ரஜினி,விஜய்,கேப்டன், வைகோ... இவர்கள் சந்திக்கப் போனால்  என்ன நடக்கும்...? என்று கற்பனை நகைச்சுவை பதிவு... (அவர்களது அதீத ரசிகர்களும் அதீத தொண்டர்களும் மேற்கொண்டு படிக்க வேண்டாம்)

லோக் சபா தேர்தலில் அமோக வெற்றி பெற்ற மோடி வீட்டு வாசலில் பெரும் திரளாக காவி உடையில் பரதேசி,பண்டாரங்களின் கூட்டம்.....வான் அதிரும் கோசம்...........
ஹர...ஹர..மோடி
நமோ நமோ நரேந்திர மோடி.....

வெள்ளை வேஷ்டி சட்டையில் முதலில் கேப்டன்,அன்புமணி,வைகோ மூவரும் மோடி வீட்டுக்குள் நுழைய முயன்றபோது பரதேசி கூட்டம் ஓன்று இது ஆப் கி பார் காவி மோடி சர்க்கார் என்றும் இங்கே காவி உடை அணிந்தவர்களே உள்ளே போக முடியும் என்று இந்தியிலும் பேசி  அவர்களை உள்ளே விடாமல் தடுக்கின்றது

கோபத்தில் கண்கள் சிவக்க......ஏய்...என்று சீரிய கேப்டனை வைகோ சமாதனம் படுத்த குட்டி  மருத்துவர் அய்யாவோ.........

"ஏம்பா..கலிங்கப்பட்டிகாரரே..அதுதான் இந்த குவாட்டாரு கோவிந்தனலாம்  கூப்பிட்டு கிட்டு வராதனு சொன்னே...கேட்டிங்களா?....

அங்க பாருங்க....நம்ம பொன்னு (பொன்.ராதாகிருஷ்ணன்) அப்புறம் இலந்தையாரும் (இல.கணேஷன்) உள்ளே போறாயிங்க....அவ்யிங்க கூட நாமும் உள்ளே போயிடலாம்"

.ராதாகிருஷ்ணன் அண்ணேன்...இல கணேசன் அண்ணேன்.. என்று மூவரும் கூச்சலிட்டு கூப்பிட திரும்பிப் பார்த்த பொன்.ராதாகிருஷ்ணன்

"யாரு  நீங்க.....உங்கள எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே..?". என்று நடுவில கொஞ்சம் பக்கத்தக் காணோம் விஜய் சேதுபதியாட்டம் முழிக்க........

இல.கணேசன் மட்டும் கொஞ்சம் இறக்கப்பட்டு...
"அடேடே...நீங்களா எப்ப வந்திங்க டெல்லிக்கு....
.என்ன வேணும் உங்களுக்கு?" என்று நக்கலாய் கேட்டு அணு குண்டு போட......

மோடி அய்யாவ பார்க்க வந்திருக்கோம் என்று காலில் விழாத குறையா  மூவேந்தர்களும் கொஞ்சமே அல்ல நிறையவே கெஞ்ச......இளகிய மணம் கொண்ட இல.கணேசன்.......
"அட..கொஞ்சம் பொறுங்கப்பா.... நாங்க உள்ளே போயி மோடிஜிய பார்த்து உங்களைப் பற்றி சொல்றோம் அதுக்கு முன்னாடி நீங்க மூவரும் உங்க வேஷ்டிய அவ்ருங்க...."

"அய்யோ நா ஜட்டி போடல" என்று கேப்டன் அலற.........
"அப்பாடா நா கோவணம் கட்டியிருக்கிறேன்" என்று கலிங்கபட்டியார் பெருமையுடன் மனதுக்குள் சிரித்துக்கொள்ள.........
ஆ...என்று வாயைப் பிளந்த அய்யாக்குட்டி அன்புமணி தைரியமாக ஏன்? எதற்கு? என்று ஆவேசமாக கேட்க........

"அட...உங்க நன்மைக்குத்தாம்பா....வெள்ள வேஷ்டி மோடிஜிக்கு புடிக்காது அதனால உங்க வேஷ்டிய அவுத்துப்புட்டு எங்கள மாதிரி காவிக்கு மாறுங்க அப்படியே....எதுக்கு வந்திருக்கிறீங்கனு ஒரு மனு எழுதுங்க" ........என்று இலந்தையார் சொல்லி உள்ளே போனார்.......

தமிழ்நாட்டின் மூவேந்தர்களும் என்ன செய்வது என்று வழி தெரியாமல் விழி பிதுங்கி நிற்க.......

அங்கே பயங்கர ஆரவாங்களுடன் பரதேசிகள் எல்லோரும் ஒருவரை தோளில் சுமந்து ஆடிப் பாடிய வண்ணம் வந்தார்கள்  அவர்தான் நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினி  அப்படியே கோச்சடையான் வேசத்தில் ஹர...ஹர...மோடி...   திருமந்திரத்தை முனுமுனுத்த படி வந்துக் கொண்டிருந்தார் 

அய்...நம்ம ரஜினிஜி.....என்று  வைகோ அவரை நோக்கிச் செல்ல......
பழைய  பாபா படப்பெட்டி நியாபகம் வந்ததால் குட்டி மருத்துவர்  ச்சே...இந்தப் பழம் புளிக்கும் என்று முகத்தை திருப்பிக்கொண்டார்  முன்னாள் நடிகர் கேப்டனோ என்ன செய்வது...? என்று அப்படியே ஓரமாக ஒதுங்கி பையில் கொண்டுவந்திருந்த  தண்ணீர் பாட்டிலை கையில் எடுத்தார்.

வைகோவை பார்த்த கோச்சடையான் வேசத்திலிருந்த ரஜினி கவலைப்படாதீங்க வைகோஜி உங்களுக்கு காவி வேஷ்டிதானே வேணும் என்று கண்ணை மூடி பாபா மந்திரம்  சொல்ல...அவரது கையில் ஒரு காவி துண்டு வந்தது அதை வைகோவிடம் கொடுத்து இப்ப இத இடுப்புல சுத்திக்கொள்ளுங்க என்று கொடுத்தார்

அந்த நேரம் அங்கே தன் படை வீரர்களுடன் வந்த இளைய தளபதி விஜய் தன் உடன்பிறவாத அண்ணன் கேப்டன் இப்படி ஓரமாய் ஒதுங்கி நிற்பதைபார்த்து
கண்கலங்கியபடி.......என்ன அண்ணேன்...இங்க நிற்கிறீங்க...என்று சோகமாக கேட்க......
"ஏம்பா...விஜய் தம்பி காவி வேஷ்டி கட்டுனாத்தான் மோடிய பார்க்க விடுவாங்களாம்...என்று சொல்ல....தளபதி தன் வீரர்களை ஓரக்கண்ணால் பார்க்க.......
அவர்கள் பாய்ந்து சென்று அங்கே ஆடிக்கொண்டிருந்த பரதேசிகளிடம் இரண்டு வேஷ்டிகளை உருவிக் கொண்டு வந்தார்கள்   அதில் ஒன்றை அவர் கட்டிக்கொள்ள இன்னொன்றை அண்ணன் கேப்டனுக்கு கொடுத்தார்
  
குட்டி மருத்துவரைத் தவிர ரஜினி,விஜய்,கேப்டன்,வைகோ அனைவரும் காவி உடையுடன் மோடியைப் பார்க்க  மோடி வீட்டு வாசலில் காத்து நிற்க.....

உள்ளே........மோடி வீட்டு ஹாலில் கம்பீரமாக மோடி அமர்ந்திருக்க அவரது காதில்  இல. கணேசன்....... 
"கேப்டன்,வைகோ,குட்டி மருத்துவர்,ரஜினி, விஜய் இவியிங்கலாம் இப்ப உங்கள பார்க்க வெளியே காத்து நிற்கிறார்கள்".....என்று சொல்ல....


அவர்களை சந்திக்க ஆவலுடன்  எழுந்த மோடியை...

"மோடிஜி....இவிங்கள சந்தித்தால் தமிழ்நாட்டு அம்மா அகிலாண்டேஸ்வரிக்கு கோபம் வந்துவிடும் அப்புறம் அவர்கள் ஆதரவு இல்லாமல் போய்விடும்"
......... என்று .பொன் ராதாகிருஷ்ணன் தடுத்து மோடியின் காதில் மெதுவாக கிசு கிசுத்தார்

மோடி  ஓரக்கண்ணால் இல.கணேசனை பார்க்க........ உடன்  இல.கணேசன் ஆளுயர மோடியின்  கட்டவுட்டை எடுத்துக்கொண்டு வெளியே வந்து வாசலில் காத்திருந்த கேப்டன், வைகோ, குட்டி மருத்துவர்,ரஜினி, விஜய்...எல்லோர் முன்பும்  காண்பித்துவிட்டு..

 "நண்பர்களே எல்லோரும் பார்த்துக்குங்க....
இதுதான் ஆப் கி மோடி சர்க்கார்" 

என்று சொல்லி உள்ளே சென்றுவிட்டார்

அடுத்த நாள்..........
சென்னை விமான நிலையத்தில் ஊடகங்கள் முன்பு கேப்டன்,வைகோ,குட்டி மருத்துவர்,ரஜினி, விஜய்...ஓன்று சேர்ந்து பேட்டி கொடுத்தார்கள்

"மோடி...எங்கள் குடும்பத்தில் ஒருவர். அவரை நாங்கள் சந்தித்தப் போது அவர் எங்களை ஆரத் தழுவிக்கொண்டார்....அப்படியே அவரே கிண்டிய குஜாராத்தி அல்வாவை எங்கள் வாயில் திணித்து....வழியனுப்பி வைத்தார்  "

எச்சரிக்கை-இது ஒர் கற்பனை நகைச்சுவை பதிவு...ரசிகர்களும் தொண்டர்களும் என் மேல் பாய்ந்து விடாதீர்கள் 



Wednesday, May 14, 2014

God’s Own Country (மலையாளம்)-சினிமா விமர்சனம்


மாலிவுட்டில் Traffic படத்தின் வெற்றிக்குப் பிறகு பல குட்டிக் கதைகளின் தொகுப்பாக வந்து வெற்றிப் பெற்ற படங்கள்  Babel, Amores Perros, Crash வரிசையில் வாசுதேவ் சானல் இயக்கத்தில் வந்துள்ள படம்  God’s Own Country 

ஓர் அரிய உணர்ச்சியான நாள் என்று டேக் லைன்வுடன் வந்துள்ள  God’s Own Countryபடம் ஓர் அரசு வழக்கறிஞர், ஒரு துபாய் NRI, ஒரு டாக்ஸி ஓட்டுனர் இவர்கள் மூவரும் தங்கள்  வாழ்வில் ஒரு நாள் சந்திக்கும் சிக்கலான, ஆபத்தான  நிகழ்வை படம் காட்டுகிறது 

கேரளாவில் பயங்கரமான கேங்-ரேப் வழக்கில் சம்பந்தப்பட்ட  சக்திவாய்ந்த  வில்லன் அரசியல்வாதி வக்கச்சன் (நந்து) னுக்கு எதிராக அவரது மனைவியை சாட்சியாக அன்று 3 மணிக்குள் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டிய நிர்பந்தத்தில்  அரசு வழக்கறிஞர்  மதன் தரகன் (சீனிவாசன்) காரில் அழைத்துச் செல்வதும் வழியில் வக்கச்சன் ஆட்களால் உண்டாகும் தடைகளை சந்தித்து வெற்றி பெறுகிறாரா...? என்று ஒரு கதை.........

அன்றைய தினத்திலேயே...ஓர்  அபாயகரமான கார் விபத்தை தொடர்ந்து சிறையில் வாடும் தன் மனைவி ஆஷா (ஈஷா தல்வார்) வை காப்பற்ற மனு கிருஷ்ணா (பஹத் பாசில்) ஒரு பெண் எழுத்தாளர் உதவியுடன்  வரும் வழியில்  ரூ.75 லட்சம் பணத்தை தொலைத்துவிட அவருக்கு எப்படி மீண்டும்  பணம் கிடைகிறது...? என்பது இரண்டாவது கதையாகவும்...............

அன்றைய தினத்திலேயே... முகமது (லால்)  டாக்சி ஓட்டுனர் தன் மகள் அவசர சிகிச்சைக்காக தனது சக்திக்கு மீறிய பணம் ரூ.6 லட்சத்தை எப்படி புரட்டுகிறான்...? என்பதை மூன்றாவது கதையாக.......

இப்படி  மூன்று பேர் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை முற்பாதியில் ஸ்லோவாக காட்டினாலும் பிற பாதியில் மின்னல் வேகத்தில் விறுவிறுப்பாகவும் த்திரிலாகவும் நிறைய காட்சிகளாளும் .இன்னும் நிறைய சின்ன சின்னக் கதாப்பாத்திரங்களாலும்  படம் காட்டுகிறார் இயக்குனர் 

நடிகர்கள்  சிறப்பாக நடித்திருந்தாலும் ஒரு த்திரிலர் படத்துக்கு உரிய சஸ்பென்ஸ் இடைவேளை வரை இழுத்துச் செல்வதால்....பார்வையாளர்கள் (என்னோடு சேர்த்து பத்து பேர்) பரிதாபமாக அரங்கில் மோட்டைப் பார்த்துக் கொண்டு இருக்கும் நிலை.........

அப்புறம் இது அரதப் பழசான கதை என்பதாலும் நாம் ஊகிக்க முடியும் சஸ்பென்ஸ் (டாக்ஸி ஓட்டுனர்  சாலையில் மயங்கி விழுவரை காப்பது,  விபச்சாரி+ ஆட்டோ ஓட்டுனர் கையில் கிடைக்கும் மனுவின் பணத்தை பாஸ்போர்ட் பார்த்து ஒப்படைப்பது) இப்படி நிறைய கொசுக்கடி தாங்க முடியவில்லை 



படம்  விட்டதும் முதல் ஆளாக வெளியே ஓடிவந்தேன் வலைதளங்கள் ஆகா...ஓகோ...என்று பாராட்டியதால் படம் பார்க்கப் போன எனக்கு இந்த வாரம்  கிடைத்த  அரை நாள் விடுமுறையும் அம்போ ஆனது 

அவியிங்களுக்கு God’s Own Country அரிய உணர்ச்சியான நாள்...ஆனால் எனக்கு God’s Own Country படம் ஓர் அறுவையான நாள்.




Tuesday, May 13, 2014

எக்ஸிட் போல்-விமர்சனம்



திகில் திரைப்படங்கள் போன்று  அதி பயங்கரமாகவும் மண்டையை பிளக்கும் லாஜிக் குழப்பமாகவும் உள்ளது  தேர்தல் முடிந்தப்பிறகு ஊடகங்கள் வெளியிடும்  எக்ஸிட் போல்கள் (தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள்)

இறுதிகட்ட தேர்தல் முடிந்ததும் தேர்தல் கருத்துக்கணிப்புக்கு இருந்த தடையை தேர்தல் ஆணையம் விலக்கிக்கொள்ள ஆளாளுக்கு எதையாவது உளறிக் கொட்டி மக்கள் மண்டையை பிளக்கிறார்கள் இந்த ஊடகங்கள்.........

என்.டபிள்யு.எஸ்.சி ஓட்டர் நிறுவன தயாரிப்பில் வெளிவந்துள்ள அதிரடி கருத்துக் கணிப்பில்.........
 பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 289 தொகுதிகளை கைப்பற்றும் என்றும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 101 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி,அதிமுக,திமுக..உட்பட மற்றவைகள் 153 இடங்களிலும் வெற்றிபெறும் என்று தெரிவிக்க....... 


பாஜக கூட்டணி 298 இடங்களும், காங்கிரஸ் கூட்டணி 93 இடங்களும், மற்றவர்கள் 152 இடங்களும் பெறுவார்கள் என்று ஆஜ்தக் டிவி வெளியிட்டுள்ளது. 

315 இடங்களை பாஜக கூட்டணியும், 80 இடங்களை காங்கிரஸ் கூட்டணியும், 148 இடங்களை மற்றவர்களும் பெறுவார்கள் என்று இந்தியா நியூஸ் டிவி படம் காட்டுகிறது
பாஜக கூட்டணி 299, காங்கிரஸ் கூட்டணி 112, மற்றவர்கள் 132 இடங்களை பெறுவார்கள் என்று ஜீ நியூஸ் (புரொடக்சன்) தயாரித்து வெளியிட்டுள்ளது

இந்தியா டிவி வெளியிட்டுள்ள எக்ஸிட் போல்..... பாஜக கூட்டணி 317 இடங்களையும், காங்கிரஸ் கூட்டணி 104 இடங்களையும், மற்றவர்கள் 122 இடங்களையும் பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளது.

இந்தக் கண்ணாமூச்சி ரே...ரே... அல்லது கிச்சு கிச்சு தாம்பழம் விளையாட்டு நம்ம தமிழ் நாட்டிலும் ஊடகங்களால் அமோகமாக விளையாடப்படுகிறது

இவைகளை முழுக்க வாசித்து நீங்கள் ஒப்பிட்டுப் பார்த்தால் நமக்கு பைத்தியம் பிடிக்க வைத்துவிடுவார்கள் இந்த பைத்தியக்கார ஊடகங்கள்....


ஆனால் ஓர் ஒற்றுமை எல்லா கணிப்புகளிலும் மோடியே கதாநாயகனாக சித்தரிக்கப்படுகிறார் 

அரசியல் கட்சிகள் ஊடகங்களுக்கு பணம் பட்டுவாடா செய்து இப்படி நாடகம் ஆடுவதும் உண்டுஎன்பார்கள் ஆனால்...தேர்தல் முடிந்தப் பிறகு இப்படி நாடகம் ஆடினால் யாருக்கும் ஆதாயம் இல்லையே உண்மையான தேர்தல் முடிவுகள் வருவதற்குள் வீண் கலவரத்தை இது உருவாக்கும் 

நண்பர்களே! உங்கள் பார்வையில் ..........
தேர்தலுக்கு பிந்தைய  கருத்துக்கணிப்புக்கள் (எக்ஸிட் போல்) உண்மையா...? இதுபோன்ற கணிப்புகள் தேவையா...?


வாக்களித்து உண்மையை தெரிவியுங்கள்...முடிவு-15/05/2014


UA-32876358-1